Monday, December 22, 2008

யுகம்?! (for your information)

இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் கலியுகம் மொத்தம் 432,000 ஆண்டுகளாம். அதில் இதுவரைக்கும் ஏறக்குறைய 5000 ஆண்டுகள் நடந்து முடிந்துவிட்டன. இந்த கலியுகத்தில் தான் புத்தன், யேசு, முகம்மது நபி போன்றோர்கள் தோன்றினார்கள். கலியுகத்திலேயே இன்னும் மிச்சம் எத்தினாயிரம் ஆண்டுகள் போக வேண்டி இருக்கின்றதுவென பாருங்கள்.

இதற்கு முந்தைய யுகமான துவாபரயுகத்தை பார்த்தால் அதில் மொத்தம் 864,000 ஆண்டுகள் இருந்தனவாம்.அது கிருஷ்ணா வாழ்ந்த மகாபாரதகாலம்.

அதற்கும் முன்பு இருந்த திரேதாயுகத்தில் இன்னும் அதிகமாய் 1,296,000 ஆண்டுகள் இருந்தனவெனவும் அக்காலத்தில் தான் இராமனும் வாழ்ந்தான் என்கின்றார்கள். அது ராமாயணகாலம்.

அதற்கும் முன்பு முதலாவதாக இருந்த யுகம் தான் சத்யுகம்.அதில் மொத்தம் 1,728,000 ஆண்டுகள் இருந்தனவென்கின்றார்கள். அக்காலம் தான் பூமியின் பொற்காலமாம். ஒவ்வொருவரும் 100,000 ஆண்டுகள் வரை வாழ்ந்திருந்தார்களாமே.

இந்த நான்கு யுகங்களும் ஒரு சுற்றுசுற்றி வருதலின் பெயர் தான் ஒரு சதுர்யுகி (Chaturyugi). ஒரு Chaturyugi = மேலே எல்லாம் சேர்த்து மொத்தமாய் 4,320,000 ஆண்டுகள்.

கலியுகம் முடிந்ததும் என்னவாகும்? மீண்டும் பொற்காலமான சத்யுகம் தொடங்கி இன்னொரு Chaturyugi ஆரம்பிக்கும். இப்படியாக மொத்தம் 71 Chaturyugi உண்டாம். இந்த 71-ம் சேர்ந்தது ஒரு Manvantara( Manu) ஆகின்றது.நாம் இப்போது இருப்பது 28-ஆவது Chaturyugi-ல், 7-ஆவது Manu-வான Vaivasvat Manu-ல்.

பிரம்மாவின் ஒருநாள் ஒரு கல்பா (Kalpa) எனப்படுகின்றது. இது 14-Manuக்களை கொண்டது. அதாவது மொத்தம் 4,294,080,000 ஆண்டுகள். இந்த ஒரு நாள் முடிந்து பிரம்மா தூங்கப்போகும் போது மொத்த உலகமும் அழிந்து மறுநாள் அவன் விழிக்கும் போது புது உலகம் உருவாகும் என்பது நம்பிக்கை. ஆக வேதங்களின் படி இன்றைய உலகத்தின் மொத்த ஆயுட்காலம் 4,294,080,000 ஆண்டுகள். நாம் இருக்கும் இந்த 2008-ம் வருடம் வேதகாலண்டரின் படி 1,955,885,109-ஆவது வருடம்.

யூனிக்சில் cal என ஒரு கட்டளை உண்டு. இது நாட்காட்டியை உங்களுக்கு காட்டுவதற்காக அமைந்த கட்டளை. உங்கள் லினக்சின் $ prompt-ல் cal sep 1752 என நீங்கள் தட்டினால் 1752-ஆம் ஆண்டிற்கான செப்டம்பர் மாத காலண்டரை அது காட்டும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த மாதத்தில் 2-ம் தியதிக்கப்புறம் நேரடியாக பதினான்காம் தியதிக்கு போய்விடும். இடையிலுள்ள 11 நாட்களும் simply gone. ஏன் என்றால் அந்த மாதத்தில் தான் பிரிட்டீஷார் தங்கள் காலண்டர்முறையை பழைய ஜூலியன் நாட்காட்டிமுறையிலிருந்து கிரிகோரியன் நாட்காட்டிமுறைக்கு மாற்றினார்கள். அதனால் இப்படி சின்னதாக ஒரு அட்ஜஸ்ட்மண்ட் செய்யவேண்டி வந்தது.அந்த 1752-ம் வருட காலண்டரை

நீங்கள் கீழ் கண்ட சுட்டியிலும் பார்க்கலாம்.
http://www.timeanddate.com/calendar/?year=1752&country=1

Monday, December 15, 2008

வாழ்க்கை

ஒருதந்தையும் மகனும் மலைகள் சூழ்ந்த பகுதியில் ஒரு மலைமீது ஏறி அதன் உச்சியை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள். திடிரென மகன் கல் ஒன்றுதடுக்கி கீழே தடுமாறிவிழுந்துவிட்டான், ஆ.. என்று கத்தினான்.
ஆ.. என்று எதிரொலி வந்தது.

என்ன இது என்றான்

என்ன இது என்று மறுபடி எதிரொலிகேட்டது.

என்ன நடக்கிறதெனப்புரியாமல் சிறுவன் தந்தையை குழப்பமாய் பார்த்தான்.

புன்னகைபுரிந்தபடியே அந்தத்தந்தை மலையை நோக்கிக்கூவினார்.

நான் உன்னைப்பார்த்து ஆச்சரியப்படுகிறேன் என்றார்.

நன் உன்னைப்பார்த்து ஆச்சரியப்படுகிறேன் என பதில்வந்தது.

நீ ஒரு வீரன் என்றார் அதே பதிலாக வந்தது.

வியப்புடன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த மகனிடம் அவர் சொன்னார்.

:இதனை எதிரொலி என்பர்கள். ஆனால் ,மகனே! உண்மையில் இதுதான் வாழ்க்கை !

வாழ்க்கை என்பது நமது செயல்களின் பிரதிபலிப்பே!

இந்த உலகத்தில் உனக்கு நிறைய அன்பு வேண்டுமானால் நீ நிறைய அன்பு

செலுத்தவேண்டும் .உன் இதயத்தில் அன்பு சுரக்கவேண்டும்.

நட்பு பெருகவேண்டுமானால் நீ பிறரோடு நட்பாய் இரு.

வாழ்க்கை, இந்த உலகிற்கு நீ எதைக்கொடுக்கிறாயோ அதனையே திருப்பிக்கொடுக்கும்!:

ஆத்திசூடி (Please read once..you will get something undefined)

1. ஆத்திசூடி

கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்
1. அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அஃகம் சுருக்கேல். உயிர்மெய் வருக்கம்
14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப் போல் வளை.
16. சனி நீராடு.
17. ஞயம்பட உரை.
18. இடம்பட வீடு எடேல்.
19. இணக்கம் அறிந்து இணங்கு.
20. தந்தை தாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர் செய்.
23. மண் பறித்து உண்ணேல்.
24. இயல்பு அலாதன செய்யேல்.
25. அரவம் ஆட்டேல்.
26. இலவம் பஞ்சில் துயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகு அலாதன செய்யேல்.
29. இளமையில் கல்.
30. அரனை மறவேல்.
31. அனந்தல் ஆடேல்.

ககர வருக்கம்
32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப்பட வாழ்.
35. கீழ்மை அகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்பது ஒழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்.
42. கோதாட்டு ஒழி.
43. கௌவை அகற்று.

சகர வருக்கம்
44. சக்கர நெறி நில்.
45. சான்றோர் இனத்து இரு.
46. சித்திரம் பேசேல்.
47. சீர்மை மறவேல்.
48. சுளிக்கச் சொல்லேல்.
49. சூது விரும்பேல்.
50. செய்வன திருந்தச் செய்.
51. சேரிடம் அறிந்து சேர்.
52. சையெனத் திரியேல்.
53. சொற் சோர்வு படேல்.
54. சோம்பித் திரியேல்.

தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி.
56. தானமது விரும்பு.
57. திருமாலுக்கு அடிமை செய்.
58. தீவினை அகற்று.
59. துன்பத்திற்கு இடம் கொடேல்.
60. தூக்கி வினை செய்.
61. தெய்வம் இகழேல்.
62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
63. தையல் சொல் கேளேல்.
64. தொன்மை மறவேல்.
65. தோற்பன தொடரேல்.

நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி.
67. நாடு ஒப்பன செய்.
68. நிலையில் பிரியேல்.
69. நீர் விளையாடேல்.
70. நுண்மை நுகரேல்.
71. நூல் பல கல்.
72. நெற்பயிர் விளைவு செய்.
73. நேர்பட ஒழுகு.
74. நைவினை நணுகேல்.
75. நொய்ய உரையேல்.
76. நோய்க்கு இடம் கொடேல்.

பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்.
78. பாம்பொடு பழகேல்.
79. பிழைபடச் சொல்லேல்.
80. பீடு பெற நில்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
82. பூமி திருத்தி உண்.
83. பெரியாரைத் துணைக் கொள்.
84. பேதைமை அகற்று.
85. பையலோடு இணங்கேல்.
86. பொருள்தனைப் போற்றி வாழ்.
87. போர்த் தொழில் புரியேல்.

மகர வருக்கம்

88. மனம் தடுமாறேல்.
89. மாற்றானுக்கு இடம் கொடேல்.
90. மிகைபடச் சொல்லேல்.
91. மீதூண் விரும்பேல்.
92. முனைமுகத்து நில்லேல்.
93. மூர்க்கரோடு இணங்கேல்.
94. மெல்லி நல்லாள் தோள்சேர்.
95. மேன்மக்கள் சொல் கேள்.
96. மை விழியார் மனை அகல்.
97. மொழிவது அற மொழி.
98. மோகத்தை முனி. வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்.
100. வாது முற்கூறேல்.
101. வித்தை விரும்பு.
102. வீடு பெற நில்.
103. உத்தமனாய் இரு.
104. ஊருடன் கூடி வாழ்.
105. வெட்டெனப் பேசேல்.
106. வேண்டி வினை செயேல்.
107. வைகறைத் துயில் எழு.
108. ஒன்னாரைத் தேறேல்.
109. ஓரம் சொல்லேல்.

Thursday, December 4, 2008

மகன் கட்டிய பாசச் சின்னம்

இவ்வுலகில் காதலின் சின்னம் எது என்று கேட்டால், அதற்கு பதில் தெரியாத எவரும் வாலிபத்தைக் கடந்தவராக இருக்க முடியாது.

ஆம். தனது காதல் மனைவி மும்தாஜ் பேகத்திற்கு முகலாய பேரரசர் ஷா ஜஹான் எழுப்பிய அந்த காதல் கோயிலை, தாஜ் மஹாலை காணாதவர் இருக்கலாம். அறியாதவர் யார்?

ஆனால் தனது தாயின் மீது கொண்ட பாசத்தால் மகன் கட்டிய பாசச் சின்னம் ஒன்று நமது நாட்டில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதுவும் முகலாய வம்சத்தில் வந்ததொரு இளவரசன் கட்டியது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா?

தாஜ் மஹாலைப் போல அதுவும் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் நமது நாட்டின் பாரம்பரிய சின்னம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம், அசப்பில் தாஜ் மஹாலைப் போன்றே தோற்றமளிக்கும் இந்தப் பளிங்குக் கோயில்தான் அது.

பீபி கா மக்பாரா என்றழைக்கப்படும் இந்த தாய்ப் பாசத்தின் சின்னத்தை கட்டியது அசம் கான் என்ற இளவரசர்.

மொகலாய பேர்ரசர்களில் மிகக் கொடுமையானவர் என்று வரலாற்றில் வர்ணிக்கப்படும் ஒளரங்கசீப்பின் மனைவி தில்ராஸ் பானோ பேகத்திற்குப் பிறந்த அசம் கான், தன் தாயின் மீது கொண்ட பாசத்தினை வெளிப்படுத்தக் கட்டிய இச்சின்னம் மராட்டிய மாநிலம் ஒளரங்காபாத்தில் உள்ளது. 1651-61ஆம் ஆண்களில் கட்டி முடிக்கப்பட்டது.

அழகிய சூழலில் அமைந்துள்ள இதன் மையத்தில் தில்ராஸ் பானோ பேகத்தின் கல்லறை உள்ளது. தாஜ் மஹாலைப் போலவே கட்டப்பட்டுள்ளதால் இதனை அதன் சிறிய பிரதிபலிப்பு என்று கூறுவார்கள்.

மாலைப் பொழுதில் இவ்விடத்திற்கு செல்வது மனதிற்கு இதமான அனுபவம்.

http://tamil.webdunia.com/videos/webduniaPlayer.html?categoryId=10404...

Wednesday, December 3, 2008

TNO

இணையம் மற்றும் கணிணியை வெகுவாகப் பயன்படுத்தும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு மந்திரம் TNO அதாவது Trust no one. சினிமா பார்த்தல், ரம்மி போடுதல், கார் ரேஸ் ஓட்டுதல் இதையெல்லாம் தாண்டி இன்றைக்கு மிகவும் சென்சிட்டிவான விஷயங்களையும் கணிணியில் கையாளத் தொடங்கியுள்ளோம். ஒரே கிளிக்கில் ஆயிரமாயிரம் டாலர்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றமுடிகின்றது. சாதாரண பேட்டரி சார்ஜர் முதல் ஆப்பிள் நிறுவன ஸ்டாக்குகளை வரை வாங்க, விற்க ஆன்லைனை நாடுகின்றோம். இத்தகைய தருணத்தில் நாம் கணிணியில் செய்யும் ஒவ்வொரு கிளிக்கையும் மிகக் கவனமாகக் கிளிக்கவேண்டியுள்ளது. அது போலத்தான் நாம் போகும் தளங்கள், நாம் நிறுவும் மென்பொருள்கள், இணைய உலகில் நாம் பழகும் நண்பர்கள் எல்லாம் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். நிஜ உலகுக்கும் ஆன்லைன் உலகுக்கும் ரொம்ப ஒன்றும் வித்தியாசமில்லை. மதுரை நகரப் பேருந்தில் ஜேப்படிகளுக்கு எத்தனை உசாராய் இருப்போமோ அதே போலத்தான் ஆர்குட்டிலும் உஷாராய் இருத்தல் வேண்டும். வழியில் ஹாய் சொன்ன ஒரு மர்ம நபரிடம் எப்படி உங்கள் வீட்டு விலாசத்தை கொடுக்க மாட்டீர்களோ அது போலத்தான் போகும் தளமெல்லாம் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கைப்பேசி எண்களையும் இட்டுச்செல்லல் அத்தனை நல்ல பழக்கமன்று.

TNO-க்கு வருவோம். மைக்ரோசாப்டின் விண்டோஸ் செர்வர் செயலியை ஐரோப்பிய நாடுகளின் அதிமுக்கிய ரகசிய கணிணிகளில் பயன்படுத்த மாட்டார்கள். அது போலத்தான் சில அரபுநாடுகளும். முற்றிலும் மூடப்பட்ட நிரல் மூலம் கொண்ட ஒரு செயலிக்குள் அதாவது விண்டோசுக்குள் எதாவது ஒரு ரகசிய சுரங்கப்பாதை அமெரிக்காவுக்கு இருக்குமோ என்ற கவலைதான் அதற்கு காரணம். பாருங்கள் உலகின் நம்பர் ஒன் மைக்ரோசாப்டை கூட அவர்கள் நம்புவதில்லை. திறந்த நிரல் மூலம் கொண்ட லினக்ஸ் தான் அவர்கள் தெரிவு. Trust no one. கலியுகத்தில் யாரையும் நம்பக்கூடாதாம்.

பல்வேறு பேங்க் அக்கவுண்டு கணக்குகளையும் ஒரே திரையில் இழுத்து வந்து காட்ட பல மென்பொருள்களும், இணையதளங்களும் இருக்கின்றன.யாரையும் நம்பியதில்லை.உங்கள் பாஸ்வேர்டுகளை பத்திரமாக ஸ்டோர் செய்து வைக்கவென தனியாக வரும் குட்டியூண்டு புரோகிராம்களையும் நான் நம்புகிறதில்லை. நமது பாஸ்வேர்டுகளை அது அதை டெவலப்செய்தவர்களுக்கு ஈமெயில் செய்துகொண்டிருக்கலாம் யாருக்கு தெரியும்? அமேசான் S3-யிலோ அல்லது JungleDisk-கிலோ நீங்கள் அப்லோடு செய்துவைத்திருக்கும் உங்கள் ரகசிய கோப்புகள் உண்மையிலேயே அவை யாரும் ஆக்செஸ் செய்யமுடியாத அளவுக்கு பாதுகாப்பானவையா?. உறுதியாகச் சொல்லமுடியாதே. Again Trust no one.


மேற்கே உதிக்கும் சூரியன்

இஸ்லாமிய மத நம்பிக்கைகளின் படி இந்த யுகத்தின் முடிவு நாள் நெருங்குவதை "மேற்கே உதிக்கும் சூரியனை" அடையாளமாக வைத்து கண்டுகொள்ளலாம் என்பார்கள். "மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள்." என்று ஒரு வாக்கியம் இருக்கின்றது. இப்படி எழுத்தின்படியேயாக நிஜ சூரியன் மேற்கே இருந்து உதித்து வருவது என்பது சாத்தியமா என்பது பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அவ்வாறாக சூரியன் மேற்கே உதிக்க வேண்டுமானால் பூமி தன் சுழலும் திசையை மாற்றி எதிர்புறமாக சுற்ற வேண்டும். ஆனால் அதற்கான சாத்தியங்கள் மிகமிகக் குறைவு. அதுவே இன்னொரு யூகத்தின் படி அது தன் புலத்தை தலைகீழாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக நம்பப்படுகின்றது. இதனால் வட தென் துருவங்கள் இடம்மாறி சூரியன் நமக்கு மேற்கே உதிப்பதாய் தோன்றும் எனவும் சிலர் கருத்து கூறுகின்றனர். ஒரு சில ஆய்வுகள் பூமியின் வட்டப்பாதையை கூர்ந்து நோக்கும் போது இச் சம்பவம் 2012 முதல் 2016 க்குள் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றன.ஒரு காந்தத்தின் எதிர்புலத்தைக் கண்ட இன்னொரு காந்தத்தின் எதிர்புலமானது வெட்கப்பட்டு சுழன்று நகர்வது போல ஒரு மென்மையான தலைகீழ் சுழற்சியாய் இது இருக்கும் என நம்பப்படுகின்றது. இதையேத் தான் நாஸ்ரடாமஸ் தாத்தா "Great shift on Earth"என சொல்கின்றாராம்.

இது இப்படியிருக்க இஸ்லாமிய வேர்களைக்கொண்ட ஒரு எளிய மனிதர் மேற்கே பலம்பொருந்திய நாடு ஒன்றுக்கு அதிபராகும் வாய்ப்பு இப்பொழுது கிட்டியிருகின்றது. மேற்கே இப்படியான ஒரு நபர் உதிக்கப்போவதைத்தான் அவ்வாக்கியம் குறிக்கின்றது என இன்னொரு சாரார் இதற்கு விளக்கம் கொடுக்க முயல்கின்றார்கள். அதாவது அந்த தீர்க்கதரிசனம் லிட்டரலாக நிறைவேறாமல் இது போன்ற ஒரு அரசியல் சம்பவமாகக் கூட அது நிறைவேறலாம் என்பது அவர்கள் வியாக்கியானம். போதாக்குறைக்கு அவரின் சின்னமும் Rising Sun-னாக இருப்பது சரியான கோயின்சிடன்ஸ்.

தினமும் நடக்கும் அசாதாரண செய்திகளை பார்க்கும் போதும் கேட்கும் போதும் இன்றைய உலக சூழலில் ஒரு Great shift அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உலகுக்கு அவசியம் என்றே தோன்றுகின்றது.ஆனால் அதற்காக பூமியே தன் திசைகளை மாற்றிக்கொள்ளுமா என்பது தெரியாது.

அதுவெல்லாம் இருக்கட்டும்.அப்படியானால் அந்த மனிதனைப்போலவே பேசும் அதிசயப் பிராணி ஒன்றும் உலகத்தில் தோன்றும் எனவும் சொல்லப்பட்டுள்ளதே என கேட்கின்றீர்களா? அது தான் மனிதனைப்போலவே பேச ரோபாட்டுகள் வந்துவிட்டனவே.

Wednesday, November 19, 2008

எங்கே போயின ஏரிகளும் குளங்களும்? (for your information)

கடந்த அக்டோபர் 6, 2008 தேதியிட்ட நாளிதழ்களில் மிக மிக முக்கியமான - அச்சமூட்டும் தகவலொன்று வெளியாகியிருந்தது. பொருளாதார நெருக்கடி, மின்சாரத் தட்டுப்பாடு, பங்குச்சந்தைப் பிரச்சனைகள், அரசியல் அறிக்கைகள், கேபிள் டிவி குடும்பச் சண்டைகள் என்று வேறு பல முக்கிய நிகழ்வுகளில் மக்களின் கவனம் மூழ்கியிருந்ததால் வழக்கம்போல இந்த முக்கியமான செய்தி உரிய கவனத்தைப் பெறவில்லை. நாளிதழ்களைத் தவிர வேறு தொலைக்காட்சிச் செய்தியறிக்கைகளில் இந்தத் தகவல் நமக்குத் தெரிந்தவரையில் இடம்பெறக்கூட இல்லை. பாவம், மதுரையில் காதல் விழுந்து கிடக்கும் பிரச்சனையையும் சூப்பர்ஸ்டார் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற முடிவற்ற பட்டிமன்றத்தையும் வேறு பல தலைபோகிற விவகாரங்களையும் சொல்லி முடிப்பதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை - அவர்கள் என்னதான் செய்வார்கள்?நாளிதழ்களில் வெளியான அந்தச் செய்தியின் சாரம் இதுதான் - "தமிழகம் உட்பட 19 மாநிலங்களில் 200 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அசுத்தமாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் பயன்படுத்தும் நீரில் உப்புத்தன்மை, இரும்பு, புளோரைட், நச்சுத்தன்மை ஆகியவை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாக இருக்கும். நீரில் அதிக அளவிலான புளோரைட் பற்களையும் எலும்புகளையும் பாதிக்கும். நச்சுத்தன்மை அதிகம் உள்ள நீரைக் குடித்தால் தோல் நோய்களும் தோல் புற்று நோயும் ஏற்படும். மத்திய நிலத்தடி நீர் வாரியம் மேற்கொண்ட ஆய்வில்தான் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது."சமுதாயத்தின் மீது மிகச் சிறிய அளவில் அக்கறை கொண்டவர்களுக்குக்கூட இந்தத் தகவல் பேரதிர்ச்சியாக இருந்திருக்குமென்பதில் ஐயமில்லை. ஆனால் ஏனோ இந்தச் செய்தி வெளியான பிறகும் பரவலான கவனத்தை ஈர்க்கவில்லை. மக்களின் விழிப்புணர்வைத் தகுந்த நேரத்தில் தகுந்த விஷயத்திற்காகத் தட்டியெழுப்பவேண்டிய தார்மீகக் கடமை கொண்ட அத்தனை ஊடகங்களும் இந்தச் செய்தியின் முக்கியத்துவத்தைப் பெரிதுபடுத்தாமல் பார்த்துக்கொண்டன.Water Tablet என்றழைக்கப்படும் நிலத்தடி நீர்த்திட்டுக்கள் தனித்தனியே தீவாக உருவானவை அல்ல. பூமியின் அடியாழத்தில் அவை ஒரே தளமாக இணைக்கப்பட்டுள்ளன. இயற்கையின் அற்புதங்களுள் இதுவுமொன்று. ஆக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் கழிவுநீரால் மாசுபடுத்தப்படும் நீர் இந்த இணைப்பால் மற்ற பகுதிகளுக்கும் எளிதாகப் பரவுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியின் பல்வேறு இடங்களிலும் சகட்டு மேனிக்கு மாசுபாடு நிகழும்போது ஒட்டு மொத்த நீர்த்திட்டும் பாதிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.நிலத்தடி நீர் எதனால் மாசுபடுகிறது? இதனைக் கட்டுப்படுத்தவேண்டிய துறைகளும் அதிகாரிகளும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? மிக முக்கியமாக, இத்தனை நாட்கள் - ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக - இந்த அளவிற்கு நாசமாகாத நிலத்தடி நீர் திடீரென்று இத்தனை தூரம் அசுத்தமானது எப்படி? நாம் பெருமையோடு பீற்றிக்கொள்ளும் விஞ்ஞானமும் நவநாகரீகமும் அந்த அளவிற்கு வளராத பண்டைய காலங்களில் நிலத்தடி நீரை எவ்வாறெல்லாம் காப்பாற்றினார்கள்?கேள்விகள் மலைபோல எழுகின்றன. பதில் கூறுவாரில்லை. "இன்னும் சில ஆண்டுகளில் நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாக இருக்கும்" என்னும் ஒற்றை வரி மனதைப் பெரிதும் பிசைகிறது.இதற்கான காரணங்களாகக் கீழ்கண்ட காரணிகளைச் சுட்டலாம்.- விரிவடைந்துவரும் நகரங்களின் தேவைக்கு ஏற்றவாறு அதனைச் சுற்றிய நீர் ஆதாரங்களைப் பெருக்கிக்கொள்ளத் தவறியது- அப்படித் தவறியதோடு மட்டுமன்றி இருக்கும் பண்டைய நீர் ஆதாரங்களான ஏரிகளையும் குளங்களையும்கூட பிளாட் போட்டுக் கூறுபோட்டுக் கூவி விற்றது- அல்லது ஏரி / குளங்களின் நீரை சுகாதாரமான முறையில் பாதுகாக்கத் தவறியது / சுழற்சி முறையில் தூர் வாராமல் அவற்றை சீரழிய விட்டது- மழைநீர் அருகில் உள்ள குளம் குட்டைகளில் சேருவதற்கான கால்வாய்களையோ வாய்க்கால்களையோ அமைக்காமல் இருக்கும் நீர்வழிகளையும் அடைத்து விட்டது- தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவுகள் சரியான முறையில் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாமல் வெளியேற்றப்படுகின்றனவா என்பதை அறவே அலட்சியப்படுத்தியது (அல்லது உரிய லஞ்சப் பணத்தை வாங்கிக்கொண்டு சுற்றுச் சூழல் மாசுபாடுச் சான்றிதழ் வழங்கியது)இதெல்லாம் தெரிந்த விஷயம்தான் - இதற்கும் வரலாற்றுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா ? இருக்கிறது.பண்டைய தமிழகக் கல்வெட்டுக்களைப் பதிப்பித்திருக்கும் புத்தகங்களில் - தென்னகக் கல்வெட்டுக்கள், மத்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் ஆய்வறிக்கைகள், தமிழகத் தொல்லியல் துறையின் பதிப்புக்கள் - இவற்றில் ஏதாவதொன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் ஏதேனும் பத்துக் கல்வெட்டுப் பாடங்களைப் படியுங்கள். அது எந்த மாவட்டக் கல்வெட்டாக இருந்தாலும் சரி - எந்தத் திருக்கோயில் கல்வெட்டாக இருந்தாலும் சரிதான். பத்தில் குறைந்த பட்சம் ஐந்திலாவது அந்த ஊரின் ஏரிகளோ கண்மாய்களோ குறைந்தபட்சம் வாய்க்கால்களோ இடம்பெற்றிருக்கும். அக்காலத்தில் ஏரிவாரியத்தையும் ஏரி வாரிய உறுப்பினர்களையும் கவனமாகத் தேர்ந்தெடுத்ததைப் பற்றி மட்டும் விபரமாக உரைக்கும் கல்வெட்டுக்களெல்லாம் உண்டு. இன்னார் இன்ன கோயில் கட்டினார் என்பதைப்போல இன்னார் இன்ன ஏரி எடுப்பித்தார் என்று கூறும் கல்வெட்டுக்களும் உண்டு. ஏரியின் நீரைக் கட்டுப்படுத்த உதவும் மதகுகளில் பல முக்கியக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. தஞ்சைக்கு அருகில் அமைந்திருக்கும் மதகுக் கல்வெட்டு அந்த மதகை இயக்கிய கிராமத்து ஊழியருக்குக் கொடுக்கப்பட்ட நிவந்தத்தையும் அவருடைய கடமைகளையும் விரிவாக விளக்குகிறது. இந்த நிவந்தத்தை அமைந்த மிகப்பெரிய அரசாங்க அலுவலர் இத்தர்மத்தைக் காப்பாற்றுபவர்கள் பாதங்கள் என் தலை மேலென என்று பணிந்து பரவுகிறார் !வீராணம் திட்டம் என்ற பெயரில் அரசியல்வாதிகளால் பல்வேறு அசிங்கமான சர்ச்சைகளுக்கு இடமான நீர்த் திட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான வீரநாராயண ஏரி சோழர் காலத்தில் அமைக்கப்பட்டது. கடலளவு பிரம்மாண்டமாக விரிந்து பரந்திருக்கும் இந்த ஏரி ஆயிரம் ஆண்டுகள் கழிந்துவிட்ட இன்றைய நிலையிலும் அப்பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது சென்னையிலிருக்கும் பெருமக்களுக்கும் உபயோகப்படுவதை எவராவது அணுவளவாவது சிந்தித்திருப்போமா? முதலாம் இராஜேந்திர சோழர் தன்னுடைய வடநாட்டு வெற்றியைப் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடினாராம்... எப்படித் தெரியுமா? மிகப்பெரிய ஜலஸ்தம்பம் - அதாவது ஏரியை - உண்டாக்கிக் கொண்டாடினார். ஜெயஸ்தம்பம் நட்டு வெற்றியை வெறுமனே பறைசாற்றிக்கொள்வதற்கு பதில் ஜலஸ்தம்பம் உருவாக்கி அது மக்களுக்கும் பயன்படும் வகையில் பார்த்துக்கொண்ட அவரது மாண்பை எந்தப் பாடப்புத்தகம் சொல்லித்தருகிறது?ஒவ்வொரு கோயில்களின் முன்னாலும் ஒரு பெருங்குளம் புனித தீர்த்தமாக அமைக்கப்பட்டது. ஊரில் பெருக்கெடுக்கும் மழைநீர் இதில் வந்து சேருவதற்கான கால்வாய்களும் அமைக்கப்பட்டன. இன்றைய நிலைமையில் ஏதாவது ஒரு புனிதத் தீர்த்தத்திலிருது ஒரு குவளை நீரை தைரியமாக எடுத்துக் குடிக்க முடியுமா? சொல்லுங்கள்.ஏரிகள் மற்றும் குளங்களின் நிலைமை இவ்வாறென்றால் ஆறுகளின் நிலைமை அதைவிட மோசம். "நதிக்கே நங்கூடம் பாய்ச்சிய அதிசயம் நம் ஊரில் மட்டும்தான் !" என்று வியக்கிறார் கவிஞர் வைரமுத்து. பிரிட்டிஷார் காலத்தைய 18 - 19ம் நூற்றாண்டு ஆவணங்களையும் ஓவியங்களையும் பார்க்கும்போது உதிரம் கொதித்துப் போகிறது. அடையாறு என்பது உண்மையில் ஓடிக்கொண்டிருந்த ஒரு ஆறு என்பது உங்களில் எவருக்காவது தெரியுமா? சென்னை முகப்பேரில் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தியாகராய நகர் பேருந்து நிறுத்தம் இன்று அமைந்திருக்கும் இடத்தில் ஒரு ஏரி இருந்தது. அட, சாக்கடைச் சமுத்திரமாக விளங்கும் கூவமும் கூட ஒரு காலத்தில் நதிதானைய்யா!கீழ்க்கண்ட படத்தைப் பாருங்கள். இது அடையாறு கடலில் கலக்கும் காட்சி. தூரத்தில் தெரிவது பரங்கிமலை.நம்பமுடியவில்லையல்லவா? இது ஏதோ கற்பனை ஓவியமென்று நினைத்துவிடாதீர்கள். அன்று தெரிந்த நிஜக்காட்சி இது.
Adaiyar Riverநகர்ப்புற வளர்ச்சியில் இப்படிப்பட்ட விஷயங்கள் ஏற்படுவது சகஜம்தான் என்று நினைக்கிறீர்களா ? கிடையவே கிடையாது. அளவில் சென்னைப் பெருநகரை விடச் சிறியதான சிங்கப்பூரில் நிலத்தின் ஒவ்வொரு அடியும் மதிப்பு மிக்கதுதான். அதற்காக அவர்கள் இருக்கும் ஏரிகளைக் கூறுபோட்டு விடவில்லை. நாட்டிற்கு நடுவே மிகப்பெரிய இரண்டு ஏரிகளைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வருகிறார்கள். ஏரியில் எந்நேரமும் படகில் ஒருவர் சவாரி செய்து ஆங்காங்கே கடற்பாசிகளை இறைத்துக்கொண்டிருப்பார். நீர்ப்படுகையை ஆரோக்கியமாக வைக்கும் வழிமுறை இது. இந்தப் பணி 365 நாட்களும் நடக்கும்! இதுபோல் ஏரிப்பராமரிப்பை எப்போதாவது நாம் பார்த்ததுண்டா சொல்லுங்கள். ஏரியின் கரைகளும் படுசுத்தமாகக் காட்சியளிக்கும். பொங்கி வரும் மழை நீரை இந்த ஏரியில் வந்து கொண்டு சேர்க்கும் கால்வாய்களும் உண்டு.திருச்சியில் சில காலத்திற்கு முன் ஒரு சீக்கிய மாநகராட்சி ஆணையாளர் மாற்றலாகி வந்தார். மற்றவர்களைப்போல் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் அனுசரித்துக்கொண்டுபோய் பணம் பண்ணாமல் வேண்டாத விவகாரங்கள் பலவற்றிலும் இறங்கினார். சீக்கியரல்லவா ? இயற்கையாகவே அந்த இனத்திற்கென்று இருக்கும் வீரம் அவரிடம் (தமிழர்களைப்போல் ஒட்டு மொத்தமாக ஒழிந்துபோய் விடாமல்) கொஞ்சம் மிச்சமிருந்தது. அவர் செய்த வேண்டாத வேலைகளில் ஒன்று - இருந்த ஏரிகளையும் குளங்களையும் கணக்கெடுக்கத் துவங்கியதுதான். திருச்சியின் மத்தியப் பகுதியில் பெரிய ஏரி ஒன்று ஒரு காலத்தில் இருந்தது. அதனை அவர் எங்கு தேடியும் காணவில்லை. என்ன ஆயிற்றென்று விசாரித்த போதுதான் அதே இடத்தில் மாரீஸ் என்ற பெயரில் மூன்று பெரும் திரையரங்கங்கள் கட்டப்பட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் மக்களுக்குக் கலைச்சேவை ஆற்றிக்கொண்டிருக்கின்றன என்கிற அதிர்ச்சிகரமான விஷயம் வெளியாயிற்று. பாவம் ! திருச்சிவாசிகளே செளகரியமாக மறந்து போய்விட்ட அந்த விஷயத்தை எப்படியோ கலெக்டர் கண்டுபிடித்து விட்டார். நியாயமாகப் பார்த்தால் அந்த அரங்கங்களை இடித்திருக்க வேண்டும். ஆனால் எத்தனையெத்தனையோ அதிகாரிகளைக் "கவனித்துக்" கட்டிய இடமாயிற்றே? விட்டுவிடுவார்களா ? ஏரி அங்கு இருந்து என்ன பெரிதாகக் கிழித்துவிடப் போகிறது? அந்தப் பகுதியின் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அதனால் மாமூல் அளிக்கமுடியுமா ? அல்லது மக்களைத்தான் கேளிக்கை இன்பத்தில் ஆழ்த்த முடியுமா? அல்லது இதற்காகத் திருச்சிவாசிகள்தான் போராட்டம் நடத்தப் போகிறார்களா ? கிடக்கிறது கழுதை என்று விட்டுவிடுங்கள் என்று கலெக்டரை சரிசெய்து விரைவில் அவரது பணிமாற்றத்தை நிறைவேற்றித் திருச்சியை விட்டுத் துரத்துவதற்குள் அதிகாரிகளுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.நமக்குத் தெரிந்து சென்னை வில்லிவாக்கத்தில் இருபது இருபத்தைந்து வருடங்களுக்குமுன் ஒரு பிரம்மாண்டமான ஏரி இருந்தது. நிஜமாகவே மிகப்பெரிய ஏரி. நல்ல மழை பெய்யும் நாட்களில் அக்கரைக்கு இக்கரை நீர் ததும்பிக்கொண்டிருக்கும். பின் ஒரு காலத்தில் அதிகாரிகளின் தயவால் ஒரு ஓரத்தில் வீட்டுப்பகுதிகள் முளைத்தன. இன்று அந்த ஏரி எங்கிருந்தது என்று வில்லிவாக்கம்வாசிகளுக்கே தெரியாது. அந்த அளவிற்கு அப்பகுதியில் வீடுகள் முளைத்துவிட்டன. இதே கதைதான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த பல வருடங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்பதை வாசகர்கள் சொல்லாமலே அறிவார்கள்.அமைச்சர்களும் அதிகாரிகளும் எதையெதையோ திறந்து வைக்கிறார்களே - எவராவது ஒருவர் கடந்த 70 வருடங்களில் ஒரு ஏரியைக் கட்டுவித்தார் - ஒரு குளத்தைத் வெட்டினார் - குறைந்தபட்சம் ஒரு வாய்க்காலைத் தூர் வாரினார் என்று படித்திருக்கிறோமா? சங்ககாலத்திற்கோ சோழர்காலத்திற்கோ கூடப் போகவேண்டாம். ஒரு முப்பது நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று பார்ப்போம். அப்போதெல்லாம் 'குடிமராமத்து' என்றொரு வழக்கம் கிராமங்களில் இருந்ததே! தெரியுமா? இன்று கிராமங்களில் இருப்பவர்களுக்கே அது தெரியுமா என்பது சந்தேகம். ஏரிநீர் மற்றும் ஆற்றுநீர்ப் பாசனங்களுக்கான பராமரிப்புகளை அந்தந்தக் கிராம மக்களே குழு அமைத்துக் கவனித்துக் கொண்டார்கள். அரசாங்கம் வந்து செய்யும் என்று யாரும் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. ஆனால் இன்று? தெருமுனையில் ஒரு குழாய் பழுதடைந்துவிட்டால்கூடப் பொதுப்பணித்துறைதான் வரவேண்டும். பொருளாதாரத் தேடலில் மனிதநேயத்தையும் சமூகசிந்தனைகளையும் தொலைத்துவிட்டு நிற்கிறோம். மனிதகுலத்தின் எல்லாப் பிரச்சினைகளையும் யாராவது ஒரு சூப்பர் ஹீரோ வந்து தீர்த்துவைப்பான் என்று சினிமாப் பார்த்து மூளையை மழுங்கடித்துக் கொண்டோம். இந்தியா போன்ற பெரிய நாடுகளில் ஒரேயொரு பிரதமரும் ஒரேயொரு பொதுப்பணித்துறை அமைச்சரும் ஒரேயொரு மேயரும் எத்தனை பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்கள்?நம்மை அடிமை செய்து ஆண்ட வெள்ளையர்கள்கூடச் செய்யாத அத்தனை அட்டுழியங்களையும் கடந்த அறுபது எழுபது வருடங்களில் நாம் செய்து முடித்துவிட்டோம். பணத்தாசை மற்றும் பேராசை பிடித்த அரக்கர்களாக மாறி இயற்கையன்னையின் பாலை மட்டுமல்ல - மார்பகங்களையே கடித்து இரத்தம் உறிஞ்சிக் குடிக்கத் துவங்கிவிட்டோம். "தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு" என்று முடங்கிவிட்டோம். சுற்றுச் சூழலையும் சுகாதாரத்தையும் எவனோ பார்த்துக்கொள்வான் - உனக்கும் எனக்கும் என்ன ஆயிற்று? என்று நமது பங்கிற்கு நம் வீட்டின் கழிவு நீரையும் ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடையில் கலந்தோம்.வெட்கமில்லாமல் குற்றவாளிக் கூண்டில் சிரித்தபடி ஏறி நிற்கும் நம்மை வருங்காலத்தின் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

Thursday, November 13, 2008

சுட்டிகள் பற்றி

இந்த காலத்து சுட்டிகளை பார்க்கும் போது இறை நம்பிக்கையே போய்விடும் போலிருக்கின்றது. பொடிசுகளாய் இருந்து கொண்டு அதுகள் பண்ற கூத்துகளை பார்த்து "அட குழந்தைதானே விட்டுத் தள்ளு"னு சொல்ல மனசு வருவதில்லை.ஒரு வயசே ஆன வாண்டு ஒன்று அப்படியே கையை வீசி அடிக்கின்ற அடி குட்டி ரவுடி போலிருக்கும். தனக்கு முக்கியத்துவம் தராமல், தன்னை யாரும் சட்டைபண்ணாதிருந்தால் ஏங்கி ஏங்கி அது அழுகின்றது.நம்மன போராட்டங்களை ஆறுமாத குழந்தையும் புரிந்துகொள்கின்றதே அது எப்படி?.ஆசையாய் அள்ளினாலும் அதற்கு புரிகின்றது, எரிச்சலில் அதட்டினாலும் அதற்கு புரிகின்றது.ஆன்மாக்கள் பேசிக்கொள்கின்றனவோ? அவை நம் மரமண்டைகளுக்கு புரிகின்றதில்லையோ?ஒன்று மட்டும் புரிகின்றது வயிற்றில் உதைக்கும் போதே அக்குழந்தைக்கும் மனித குணம் வந்துவிடுகின்றது."Out of the box" குழந்தையும் டிப்பிக்கல் மனிதனே. தன்னை பதப்படுத்திப் பின் கடவுளுக்கு இணையாகின்றான்.குடுமிபிடி சண்டை போட்டுக்கொண்டாலும் வெட்டென மறந்து ஒட்டிக்கொள்கின்ற அந்த அபூர்வப்பண்பு இருக்கின்றதே-அங்கு தான் குழந்தைகள் நிற்கின்றார்கள்.பிரபலங்கள் பலரும் இப்படி சுட்டியாய் இருக்கும் போது எப்படி இருந்தார்கள் எனப்பார்க்க இங்கே செல்லுங்கள்.Well known`s Childhood Picturesமதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனை நண்பர் நாசர் சொல்லும் போது பிறக்கும் குழந்தைகள் கூட இருதய பிரச்சனையோடு பிறப்பதுண்டு என்கின்றார்.இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு 3,00,000 குழந்தைகள் இதயக்கோளாறோடு பிறக்கின்றனவாம்.ஆரம்பத்திலியே அதை கண்டறிந்தால் அதை சரியாக்குவதற்கான வசதிகள் இக்காலங்களில் இருக்கின்றனவாம்.அது பற்றிய விழிப்புணர்வையூட்ட அவர் உருவாகிய ஒரு யூடியூப் வீடியோ படம் இங்கே.http://www.youtube.com/user/meenakshimissionஉங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள் நாசர்!!தாகூரின் வரிகள் நினைவுக்கு வருகின்றது."ஒவ்வொரு குழந்தையும் இறைவனிடமிருந்து ஒரு செய்தியைக் கொண்டு வருகிறது.மனிதனைக் கண்டு கடவுள் இன்னும் வெறுப்படையவில்லை அதைரியப்படவில்லை என்பதே"





Monday, November 10, 2008

கடுகு

கடுகு சாம்பாரில்,கூட்டில்,பொறியலில் என்று தாளிக்கிறோம்
முதல்மரியாதை தாளிதம் செய்வதில் கடுகாருக்கே உண்டு.
சரி இது எதுக்குன்னு தெரியுமா? எனக்கும் போனமாசம்வரைதெரியாது. இதுபோல பலவிஷயங்கள் தெரியாது ஆனா ஏதோ பழக்கம்போல செய்துட்டு வரோம்
!
கடுகுபற்றிய விஷயம் ஆச்சரியமா இருந்தது
.
கடுகு சிறுத்தாலும் காரம்குறையாது என்பதற்கான உண்மையும் புரிஞ்சது
!
உங்களில் பலருக்கு தெரிஞ்சிருக்கலாம்...அவங்க அப்படி நகர்ந்துடுங்க
..

இது என்னைமாதிரி தெரியாதங்களுக்கு மட்டும்
!
கடுகில ஒருசங்கதி நம் உடலுக்கு தேவைப்படுதாம், அது என்னனு பார்த்தால்
.

கால்ஷியம் புரோட்டின் கார்போஹைட்ரேட் மங்னிஷியம் எல்லாம் நாம் சாப்பிட்ற உணவுலகிடைக்குது ,ஆனா எந்த ஒரு உணவுப்பொருளிலும் கிடைக்காத ஒருதாதுப்பொருள் கடுகுல கிடைக்குது.

"கடுகில இருப்பது சல்ஃப்ர். அதாவது கந்தகம். இந்த சல்பர் நம் உடலின் ஆரோக்கியத்துக்கு சிறிதளவே தேவைப்படுது...கடுகை
கொதிக்கிற எண்ணைல போட்டதும் வெடிப்பதுக்கு அதான காரணம்." (பட்டாசு வெடிக்கறதுக்கு துணைசெய்வது கந்தகம்தான்னு நமக்கு தெரியும்.)
கந்தகம் மனிதனின் ஆரோக்கியத்துக்கு மிகச்சிறிய அளவில்தேவைப்படுவதால் அதனை சின்னகடுகில் ஒளித்துவைத்த கடவுள் பெரியவர் தான் இல்லையா
?

Monday, October 27, 2008

விட்டுக்கொடுப்பதில்தான் வாழ்க்கை இனிக்கிறது

அறுபது ஆண்டு இல்லற வாழ்க்கையில் அந்தத்தம்பதிகள் தங்களுக்குள் எதையும் ரகசியமாக வைத்துக் கொண்டதில்லை. ஒரே ஒரு விஷயத்தைத் தவிர.

அது.....அந்தப்பெண்மணி தனது கட்டிலுக்குகீழே வைத்திருக்கும் ஒருபெட்டியை மாத்திரம் கணவர் திறந்து பார்க்க அனுமதிதரவில்லை.
அதைப்பற்றி அவர் ஏதும் கேட்கக்கூடாது என்று அவள் சொல்ல, அவரும் கண்ணியமாகவே நடந்து கொண்டார்.


முதுமையின் காரணமாக அவள் உடம்பு சீர்கெட்டது. டாக்டர்வந்துபார்த்து அவளது மரணத்தை தவிர்க்கமுடியாது என்று கூறவும் அவள் அந்தப்பெட்டியைத் திறந்துபார்க்க கணவருக்கு அனுமதி தந்தாள்.
அவர் பெட்டியை ஆவலுடன் திறந்தார்.

உள்ளே அழகான இருபொம்மைகளூம் நிறையப்பணமும் (ஒருலட்சம் ரூபாய்வரை) இருந்தன.

கணவர் கேள்விக்குறியோடு மனைவியைப் பார்த்தார்.

அவள் சொன்னாள்." 'சந்தோஷமான வாழ்க்கையின் ரகசியமே வாக்குவாதங்களைத் தவிர்ப்பதில்தான் இருக்கிறது 'என்று என்கல்யாணத்தின் போது என் அம்மா எனக்கு அறிவுரை சொன்னார், அதனால்
நீங்கள் எது சொன்னாலும் நான் எதிர்த்துப்பேசினதில்லை.

எனக்குப்பிடிக்காதவிஷயங்களை நீங்கள் செய்யும்போது எனக்குக்கோபமாய் வரும். அப்போது வாக்குவாதம் செய்யாமல் பொம்மைகள் செய்து என்கோபத்தை தணித்துக்கொள்வேன்" என்றாள்.

கணவர் பெட்டியிலிருந்த இரண்டுபொம்மைகளைப்பார்த்துவிட்டு," 60வருட வாழ்க்கையில் 2தடவைமட்டுமே உன்னை நான் கோபப்படுத்தி இருக்கிறேன்" என்றார் ஆறுதலான குரலில்.

பிறகு," ஆமாம் இத்தனை பணம் உனக்கு எப்படி வந்தது?' என்று கேட்டார்.
"பொம்மைகள் சேரச்சேர அவற்றை விற்றுவிடுவேனே ?' என்று மனைவி சொன்னதும் கணவர் அப்படியே மயங்கிச் சரிந்துவிட்டார்!

விட்டுக்கொடுப்பதில்தான் வாழ்க்கை இனிக்கிறது!!!



Connect with friends all over the world. Get Yahoo! India Messenger.

Thursday, October 23, 2008

Happy Dewali!

Hosted by FreeImageHosting.net Free Image Hosting Service

Friday, October 17, 2008

உண்மையான பணக்காரன்

அவன் பெயர் மணி. ஆனால் இவ்வூர்காரர்கள் உச்சரிப்பில் அவனை மாணி என்றாக்கி விட்டார்கள். 2001-ல் 400K விலை கொடுத்து நியூஜெர்சியில் ஒரு வீட்டை வாங்கினான். 2006-ல் அவன் தன் வீட்டு மதிப்பை வல்லுனர்களை வரவழைத்து கணக்கிட்டான்.600K வென சொல்லிப் போனார்கள். அதாவது 200K லாபம். மகிழ்ச்சியில் கொண்டாடினான். இஷ்டத்துக்கும் செலவு செய்தான். சேமிக்க ரொம்பவும் யோசித்தான். மீண்டும் இவ்வருடம் அவன் வீட்டு மதிப்பை வல்லுனர்களை வரவழைத்து கணக்கிட்டான். 375K என்றார்கள். மாணிக்கு மாரடைப்பே வந்துவிட்டது. இப்போது சொல்லுங்கள், அவனுக்கு 225K நஷ்டம் வர யார் காரணம்? அப்பணம் எங்கே போனது? யாராவது கொள்ளை கொண்டு போனார்களா? அல்லது அரபுநாட்டுக்குப்போனதா? இல்லையே. இப்படித்தான் பில்லியன்கணக்கில் டாலர்கள் வால்தெருவில் காற்றில் கரைந்து போயின. ஃபைனான்ஸ் வங்கிக்காரர்களால் சொல்லப்பட்டு வந்த பெரிய புள்ளிவிவர எண்களெல்லாம் வெறும் fake number-களாகிப்போயின.

இப்படி செயற்கையாய் போலி எண்களால் உருவான போலி பிரமாண்டம் இப்படி அநியாயத்துக்கும் விழுந்து நொறுங்கியது ஒரு வகையில் நல்லதே. தன்னைத்தானே சரிசெய்து கொள்ள பொருளாதாரம் என்ற அந்த அப்பாவி முயன்றது. ஆனாலும் அதை தன்னைத்தானே சரிசெய்ய விடாமல் அந்த போலி எண்களை காப்பாற்ற நிஜமாய் நோட்டுகள் அடித்து பணத்தின் மதிப்பை வெகுதாழ கொண்டு செல்லவிருக்கின்றார்கள். தற்காலிகமாய் சந்தையை காப்பாற்ற உலவ விடப்படும் பல நூறு பில்லியன் டாலர்கள் தீர்வானது கார் இஞ்சின் இரைச்சலை போக்க வானொலி சத்தத்தை அதிகப்படுத்துவது போன்றதாகும். நிஜ ஆரோக்கியத்தை அது தராது. எனினும் இன்னொரு கிரேட் டிப்ரசனை தவிர்க்க உலகநாடுகள் இதில் அபூர்வமாய் ஒருங்கிணைந்துள்ளன. உலக அளவில் ஒரு ரெசர்வ் பாங்கின் அவசியத்தையும்
உலகளாவிய ஒரே கரன்சியின் அவசியத்தையும் இச்சிக்கல் நமக்கு வலியுறுத்தியுள்ளது.

இனி என்ன நடக்கும்.இன்று போல் தொடர்ந்து பங்குசந்தைகள் முன்னேறி நிலமை சரியானால் இன்னும் விலைவாசி இரண்டு மடங்கு ஏறும்.டாலர் அப்படியே கீழாக குட்டிகரணமடிக்க தங்கமும் பெட்ரோலும் விர்ரென மேலே ஏறத்தொடங்கும்.சந்தையில் புழக்கத்தில் விடப்பட்ட பணங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் சாதாரண ஜனங்களை வந்து எட்டும்.வந்து நிறையவே வாட்டும்.அது அப்படியே போய்விட்டால் நல்லது.இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலேபோய் ஹைப்பர் இன்ஃபிளேசன், ஃபுட் ரையாட்ஸ், மார்சியல் லா, மில்லியன் பேர்களை அடைக்க வசதி கொண்ட ரகசிய அண்டர்கிரவுண்ட் ஜெயில்கள், கவர்ண்மென்ட் கிராஷ் அப்படி இப்படியென பல கதைகள் சொல்கின்றார்கள்.

இந்த விளையாட்டில் அணில் அம்பானி இழந்தது 30 பில்லியன் டாலர்களாக்கும். சம்பாதிப்பது மட்டுமல்ல சம்பாதித்ததை தக்கவைப்பததற்கும் ரொம்ப பிராயசப்படவேண்டியிருக்கின்றது. இப்போதெல்லாம் தினமும் நிம்மதியாய் உங்களால் தூங்கமுடிகிறதென்றால் நீங்கள் தான் உண்மையான பணக்காரர்.

நுண்கடன் மற்றும் கர்மா

2006-ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வங்காளதேசத்தை சேர்ந்த பெரியவர் முகம்மது யூனுஸ் அவர்களுக்கு கிடைத்தது. அப்போதுதான் "மைக்ரோ கிரெடிட்" பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது. தேவையிலிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழைமக்களுக்கு சிறுகடன் வழங்கி அவர்களை ஏதாவது ஒரு தொழில் செய்ய ஊக்குவித்து அதன்மூலமாக வளர்ந்து வரும் பல நாடுகளில் பெரிய அமைதிப் புரட்சியே செய்து கொண்டிருக்கின்றார் இம்மனிதர்.

25 டாலர் கொண்டு நாம் என்னத்தை சாதித்து விடப்போகின்றோம் என யோசித்துக் கொண்டிருக்கையில் அதே 25 டாலரை எதாவது ஒரு கால்நடையிலோ அல்லது கைத்தொழிலோ முதலாக்கி உங்கள் இந்த சிறு உதவியினால் தங்கள் வாழ்க்கையை ஓட்ட இங்கு கோடிக்கணக்கில் மக்களிருக்கின்றார்கள்.

இந்த மைக்ரோஃபைனான்சிங் மூலம் உலகின் எங்கோ ஒரு மூலையிலிருக்கும் ஒரு ஏழைக்கு 25 டாலர் வழங்குகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். அவன் அதனைக் கொண்டு ஒரு சிறு தொழில் செய்து தன் பிழைப்பை ஓட்டுகின்றான். ஆறுமாதம் கழித்தோ அல்லது ஒரு வருடம் கழித்தோ அப்பணம் அப்படியே உங்களிடம் திரும்பிவந்து விடும். கர்மாவில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் அதுவும் அதனோடு சேர்ந்து வரும்.

இப்படி சிறு சிறு கடனுதவிகளை மைக்ரோகிரெடிட்களாக ஆங்காங்கே தவிக்கும் பல நெஞ்சங்களுக்கு கொடுத்து உதவ ஆன்லைனிலேயே வழியிருக்கின்றது.
http://www.kiva.org

இங்கு நீங்களே யாருக்கு நிதி உதவப்போகின்றீர்கள் என ஒவ்வொருவரின் ப்ரொபைலையும் படித்து ஒரு முடிவுக்கு வரலாம். ஒருவேளை உங்கள் தொழிலை அபிவிருத்தி செய்ய நீங்களே கூட கடன்கேட்க விரும்பினாலும் இங்கு உங்கள் திட்டங்களை விவரித்து நீங்களும் நுண்கடன் கேட்கலாம்.

மற்றபடி மார்வாடி கணக்காய் வட்டிக்கு கடன் கொடுக்க/வாங்க திட்டமிருந்தால்
http://www.prosper.com -க்கு போங்கள். நியாபகமிருக்கட்டும், இரண்டிலுமே ரிஸ்க் இருக்கின்றது.

Wednesday, October 15, 2008

33 நாட்டில் பசி கொடுமை

உலக அளவில் இந்தியா உணவு தானிய உற்பத்தியில், அதை ஏற்றுமதி செய்வதிலும் முன்னனியில் இருக்கிறது. நடப்பு 2006-07-ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி 209.2 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதே இந்தியா பசிகொடுமையில் உலக அளவில் 66 ஆம் இடத்தில் இருக்கிறது. ( 6th among 88 developing countries)
வாஷ்ங்டனில் 2008 Food Policy Research Institute (IFPRI) ரிப்போர்டில், 33 நாட்டில் பசி கொடுமை ஒரு முக்கிய பிரச்சனையாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் இந்தியாவும் அடங்கும்.

இந்தியாவில் 17 முக்கிய மாநிலங்களில் மத்திய பிரதேசம் மிக மோசமான நிலமையில் இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பசிக்கொடுமை முற்றிலும் இல்லாமல் இல்லை என்பது கசப்பான உண்மை.

தேர்தலில் நாம் தேர்ந்தடுக்கும் உறுப்பினர்கள் முக்கால்வாசி பேர் உருப்படியாக எதுவும் செய்வதில்லை, இவர்களை தேர்ந்தெடுக்க ஆகும் தேர்தல் செலவை இந்த மாதிரி பசியால் வாடுபவர்களுக்கு கொடுத்தால் அடுத்த ஜன்மத்தில் மினி இட்லி ஒரு பிளேட்டாவது கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

வைரஸ்கள்

வைரஸ்கள் நம்மைத்தேடி வருவதைவிட அவைகளை நாமாய்த்தேடிப் போய் வலிய இழுத்துவருவது தான் இன்றைய டிரண்ட். இரண்டு வாரத்துக்கொருமுறை தனது லேப்டாப்பை ஃபார்மேட் செய்ய கோபால் கொண்டுவருகின்றான். எல்லாம் வைரஸ் தொல்லை தான். அது என்ன வைரஸ் என கண்டுபிடித்து அதை நீக்கும் வழி கண்டுபிடித்து அதை நீக்கினாலும் ஏனோ மனது கேட்பதில்லை. ஏர்லைன்சில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதிலிருந்து ஈபேயில் நோக்கியா 6300க்கு Plantronics புளூடூத் ஹெட்செட் வாங்குவதுவரை எல்லாமே இந்த மடிக்கணிணி வழிதான். ஒரு முறை அட்டாக் ஆன கணிணியை முழுசாய் நம்பக்கூடாது என்பர் கணிணித்துறை பாதுகாப்பு வல்லுனர்கள். போகும் போது அது என்னவெல்லாம் விட்டுவிட்டுப் போனதோ என்ற சந்தேகம் தான். யாருக்குத் தெரியும்?இணையம் வழி வரும் கணிணி வைரஸ்களிலிருந்து விலகியிருக்க நான் பின்பற்றும் சில வழிமுறைகளை இங்கே கொடுக்கின்றேன். எனக்கு இவை வொர்க் அவுட் ஆகின்றன. ஒருவேளை உங்களுக்கும் வொர்க் அவுட் ஆகலாம்.

1. விண்டோஸ் ஃபயர்வால் எப்போதும் “ON" அல்லது “Enable" நிலையிலேயே இருக்கட்டும்.இது ரொம்பவும் முக்கியம். இது தான் உங்கள் கணிணிக்குள் வேண்டா விருந்தினர்களை உள்ளே விடாமல் தடுத்துக்கொண்டிருப்பது.
2. ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்கிழமையும் மைக்ரோசாப்ட் வெளியிடும் ”தட்டல் ஒட்டல்”களை நாமும் உடனடியாக நிறுவிக்கொள்ளவேண்டும்.I mean Windows updates. http://www.update.microsoft.com/
3. மைக்ரோசாப்டின் இலவச வெளியீடான Windows Defender-ஐ இறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம்.
4. கூகிள் வழங்கும் இலவச மென்பொதியான “Google Pack”-க்கோடு Norton Security Scan-ம் Spyware Doctor-ம் இலவசமாய் கிடைக்கின்றது. விட்டுவைப்பது ஏன். அதையும் தெரிவுசெய்து நிறுவி வைத்துக் கொள்ளுங்கள். http://pack.google.com/
5. சில 4shared.com போன்ற கோப்புவழங்கிகள் அவைகளில் ஏற்றம்/இறக்கம் செய்யப்படும் கோப்புகளை வைரஸ் ஸ்கேன் செய்வதுண்டு. ஆனால் Rapidshare போன்ற பிரபல பல கோப்புவழங்கிகள் இவ்வாறு வைரஸ் ஸ்கேன் செய்வதில்லை. இதனால் இவற்றிலிருந்து இறக்கம் செய்யப்படும் கோப்புகள் உங்கள் கணிணிக்கு அபாயம் தரலாம்.
6. ஆடியோ வீடியோ போன்ற கோப்புகளை தைரியமாக இறக்கம் செய்து கொள்ளலாம்.ஆனால் exe கொண்ட பயன்பாட்டு கோப்புகளை இறக்கம் செய்து அப்படியே நம் கணிணியில் ஓடவிடுவது அவ்வளவு நல்லதல்ல. எல்லா பயன்பாட்டு மென்பொருள்களையும் நம்பத்தகுந்த தளங்களிலிருந்தே இறக்கம் செய்குதல் தகும்.
7. பெரும்பாலான கிராக் செய்யப்பட்ட மென்பொருள்கள் கூடவே இலவசமாக ஒரு வைரசோடுத்தான் வருகின்றவாம்.
8. சில தளங்கள் மின்னிமின்னி ரொம்ப அக்கரையாய் காட்டும் ”உங்கள் கணிணியின் பெர்பாமண்ஸ் சரியில்லை.அதை சரிசெய்யவா?” அல்லது ”உங்கள் கணிணியில் வைரஸ் உள்ளது.அதை சரி செய்யவா?” என கேட்பதெல்லாம் டூப்புகள். ஒரு போதும் இது போன்ற கேள்விகளுக்கு ”ஓக்கே” சொல்லக்கூடாது. ”கேன்சல்” செய்து விடவேண்டும்.
9. அது போலவே முகமறியாதளங்கள் கொடுக்கும் ActiveX control களையும் இறக்கம் செய்து நிறுவிவிடாதீர்கள். ரொம்ப ரொம்ப டேஞ்சர். அது என்னவென உங்களுக்கு தெரியாவிட்டால் எப்போதும் “Cancel"-ஐயே கிளிக்குங்கள். உண்மையிலேயே நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என தெரிந்து செய்தால் மட்டும் “OK" கிளிக்குங்கள்.
10. இது தவிர AVG, Avira, Avast போன்ற இலவச ஆண்டிவைரஸ்களில் ஏதாவது ஒன்றை இறக்கம் செய்து நிறுவிவைத்துக்கொண்டு அவற்றின் definition-களையும் அவ்வப்போது சமகாலத்திற்கு அப்டேட் செய்து கொண்டு வந்தால் பெரும்பாலான வைரஸ் தொல்லைகளை நாம் தடுக்கலாம்.

தூக்கம் விற்ற காசுகள்


Tuesday, October 7, 2008

வித்தியாசமான கிராமங்கள்

திருவாரூர் அருகே கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தீபாவளி பண்டிகையை கொண்டாடாத பல கிராமங்கள் உள்ளன.நாடு முழுவதும் தீபாவளி திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த கிராமங்களில் ஊர் கட்டுப்பாடு காரணமாக தீபாவளியே கொண்டாடப்படுவதில்லையாம்.திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரிஷியூர், பச்சக்குளம், பண்டாரஓடை, நன்மங்கலம், வரதராஜபெருமாள் கட்டளை, பனங்களத்தூர் ஆகிய கிராமங்ம் தான் தீபாவளி கொண்டாடாத கிராமங்கள்.மேலும் புதிதாக திருமணம் முடிந்த தம்பதிகளுக்கும் தலை தீபாவளி என்பதே இங்கு கிடையாதாம். குழுந்தைகள், பெரியோர்கள் உட்பட யாரும் தீபாவளிக்கு புதுத் துணி அணிய மாட்டார்களாம்..இது குறித்து ரிஷியூர் கிராமத் தலைவர் மருதமுத்து சோனாடு கொண்டார் (73) கூறுகையில்,இந்த கிராமங்களில் எல்லாம் கடைசியாக கடந்த 1954ம் வருடம் தான் தீபாவளி கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது கிடையாதுஇதற்கு காரணம், 1955ம் ஆண்டுக்கு முன் தற்போது உள்ளது குறுவை சாகுபடி கிடையாது. ஒருபோக சாகுபடி மட்டுமே செய்து வந்த விவசாயிகள் வருமானமின்றி சிரமப்பட்டு வந்தனர். அந்த நேரத்தில் தான் தீபாவளி பண்டிகை வந்தது.இதற்காக துணி, பலகாரம் வாங்க பணமில்லாமல் பல இடங்களில் அநியாய வட்டிக்கு வாங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். பின்னர் அந்த கடனை அடைக்க முடியாமல் திணறினர். அதில் பல குடும்பங்கள் அழிந்தன.
அன்றிலிருந்து தீபாவளி பண்டிகை கொண்டாடுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. இது தான் ஊர் கட்டுப்பாடு. அது மட்டுமில்லாமல் தீபாவளி பண்டிகை தமிழர் திருநாள் கிடையாது. பொங்கல் தான் நம் பண்டிகை. தீபாவளி அன்று ஊர்க் கட்டுப்பாட்டை மீறுவருக்கு அபராதம், தண்டனை விதிக்கப்படும். இதனால் தான் இந்த கிராம பகுதிகளிலிருந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டவர்கள் தீபாவளி சீரும் கேட்பதில்லை என்றார்.
மிக வித்தியாசமான கிராமங்கள்..
please comment below or mail me

Friday, September 26, 2008

கடிவாளங்கள்


இன்று வீட்டுக்கு வீடு கணிணி.30 வருடத்திற்கு முன்பு இப்படி வீட்டுக்கு வீடெல்லாம் கம்ப்யூட்டர் வருமென்று யாராவது கனவு கண்டார்களா? தெரியாது. நாசாவிலும், ஆராய்ச்சிக் கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் மட்டுமே இருக்கும் விலையுயர்ந்த மிருகமாக அது அப்போது கருதப்பட்டது. இன்று நடு அறை கணிணியில் அப்பா பிபிசியில் செய்தி பார்த்துக் கொண்டிருக்க உத்து பாக்குது குட்டிப் பாப்பா. தாத்தா கிரிக்கெட் ஸ்கோர் கேட்டு வந்து நிற்கின்றார். பாட்டிக்கு யூ.கேயிலுள்ள தன் தங்கையை வெப்கேமில் பார்க்க ஆசை. கான்எடிசனுக்கு (மின்சாரத்துக்கு) பணம் கட்டுவது காம்கேஸ்டுக்கு (இணையம்) பணம் கட்டுவது என அம்மாவுக்கு தலைக்கு மேல் வேலையுள்ளது. எல்லாம் கணிணி வழிதான்.

இப்படி டி.வி போல் நம் குடும்பத்தில் புதுசாய் அங்கமாகிப்போன கணிணியை நம் குடும்பத்துக்கு ஏற்ற நண்பனாக மாற்ற சில கடிவாளங்கள் நாம் போட வேண்டியுள்ளது. அறிந்தோ அறியாமலோ நம் வீட்டு சிறுசுகள் தவறாக தவறான தளங்களுக்கு செல்ல அல்லது வயதுவந்தோர்க்கான தளங்களுக்கு சென்றுவிட வாய்ப்புகள் உள்ளது. ஆன்லைன் சூதாட்டங்கள், அசிங்கங்கள், மர்ம நபர்கள், ஜாதிமதபேத வெறிகள் இதிலிருந்தெல்லாம் நம் குழந்தைகளை கொஞ்ச காலமாவது விலக்கிவைத்திருக்கலாம் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பமாகவே இருக்கும். நீங்களும் அப்படிப்பட்ட ஒரு பெற்றோரானால் உங்கள் கணிணிக்கு இலவசமாய் கடிவாளம் போடலாம்.எப்படி?ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை உணர்ந்த Blue Coat Systems எனும் நிறுவனம் K9webprotection எனும் மென்பொருளை அனைத்து பெற்றோர்களுக்கும் இலவசமாய் வழங்குகின்றார்கள். இம்மென்பொருளை நீங்கள் இறக்கம் செய்து உங்கள் கணிணில் நிறுவினால் நிச்சயம் ஒரு பாதுகாப்பை உணர்வீர்கள். அடிப்படையிலேயே பல தளங்களை தடைசெய்யும் இம்மென்பொருளை உங்கள் விருப்பற்றிற்கு ஏற்றார் போல் கூடுதல் தளங்களை கூட்டவோ அல்லது சில தளங்களின் மீதான தடையை நீக்கவோ செய்து கொள்ளலாம். தவறுதலாக அவர்கள் மோசமான இணையதளம் பக்கம் போனால் "Prohibited" screen வரும் அல்லது ஒரு குரைக்கும் நாய் வருமாறு செய்யலாம். நீங்கள் உசாராகி விடலாமே?.கீழ்கண்ட சுட்டியிலிருந்து நீங்கள் இறக்கம் செய்துகொள்ளலாம்.(Free registration required to get the License)http://www.getk9.com/பொதுவாக உங்கள் வீட்டு கணிணியை எல்லாருக்கும் தெரியும் வகையில் ஒரு பொது அறையில் வைப்பது நல்லது, அது போல குழந்தைகளுக்கு சில நடைமுறை அபாயங்களை சொல்லிக்கொடுப்பதும் தேவையே, உதாரணமாக சாட் ரூம் பேச்சுக்கள், முகமறியாதோரிடம் விலாசம் தொலைப்பேசி எண்கள் கொடுப்பதின் அபாயம் போன்றவற்றை சொல்லிகொடுத்து உசார் படுத்தி வைத்தல் எப்போதுமே நல்லது.
Please comment below or mail me

ஒரு துகளை தேடி


நூறு ஆண்டுகளுக்கு முன்பு எலக்ட்ரான் எனும் துகளை கண்டுபிடித்தார்கள். அதை ஓட விட்டு பின்பு அதனை மின்சாரம் என்றார்கள். இன்றைய நவ நாகரீக மின்னுலகம் மலர்ந்தது.
இதுபோல இன்னொரு துகளும் கட்டாயம் இருக்கவேண்டும். அதை நாம் எப்படியாவது கண்டு பிடித்தேயாகவேண்டும். அதை நாம் கண்டுபிடிக்காததால் தான் இன்னும் அநேக மர்மங்கள் உலகில் நிலவுகின்றன என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள் CERN விஞ்ஞானிகள். நாம் வாழும் இந்த பூமிக்கு புவி ஈர்ப்புவிசை எப்படி வந்தது? அதற்காக காரணம் பூமியின் நிறை என்றால் நிறை என்றால் என்ன? நமக்கு ஒளி தெரியும், அது போகும் வேகமும் தெரியும் அப்படியென்றால் இருளென்றால் என்ன? இப்படி அநேக கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லையாம். பலசமயங்களில் Higgs boson-னு ஒரு துகள் இருப்பதாக தியரிட்டிக்கலாக கணக்கில் போட்டு காலத்தை ஓட்டினாலும் அந்த மகா "கடவுள் துகளை" எப்படியும் பிராக்டிக்கலாக பார்த்துவிடுவது என்ற நோக்கத்தில் தான் ஜெனிவா அருகே அந்த மகாபெரிய எந்திரத்தை நிர்மாணித்திருக்கின்றார்கள்.கடவுளுக்கே கொஞ்சம் திக்திக்கென்றுதான் இருக்கும்."பாவிப்பசங்க எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடுவாங்களோ"
என்னத்தைக் கண்டுபிடிக்கிறது முதலில் உங்கள் கணிணி நெட்வொர்க்கை பாதுகாப்பா வைக்க கத்துக்கோங்கடாவென ஒருஹேக்கர் கும்பல் ஏற்கனவே LHC-யின் கணிணி நெட்வொர்க்கை ஹேக்கி அங்கே ""We are 2600 - don't mess with us"" என கொடியும் நாட்டிவிட்டு வந்திருக்கின்றார்கள்.விஞ்ஞானிகள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். நல்லகாலம் அடுத்து ஒரு அடி வைத்திருந்தால் அந்த ராட்சச எந்திரத்தின் கணிணி அறையில் நுழைந்திருப்பார்களாம். போதுமடா சாமி என இதுவரைக்கும் ஆன்லைனில் வைத்திருந்த அந்த நெட்வொர்க்கை ஆப்லைனாக்கி விட்டார்கள். அதனால் அவர்கள் இணைய தளமான http://www.cmsmon.cern.ch/ இப்போது டவுன்.இத்தனைக்கும் அவர்கள் ஓட்டுவது என்னமோ Scientific Linux ஆம்.
உங்களுக்கு தெரியுமா CERN தான் இன்டர்நெட்டின் பிறப்பிடமும் கூட.நிற்க.
ஏற்கனவே நாம் செய்திருக்கும் அட்டூழியத்தில் பூமி தாங்கமாட்டேங்குது. போகுமிடமெல்லாம் நிலஅதிர்ச்சி, சுனாமி, சூறாவளி, பெருவெள்ளம் அப்படி இப்படினு அது தள்ளாடிக்கொண்டிருக்க இது தேவையா? தப்பி தவறி அது ஒரு "கருந்துளை"யை உண்டாக்கினால் இந்த பூமி தாங்காதே என்பது சிலரின் கருத்து. பிளாக் ஹோல் எனப்படும் இந்த கருந்துளைகள் "bottom less pit" அதாவது அடிவாரமே இல்லாத துளை போன்றது. இதன் ஈர்ப்பு சக்தியும் மிக மிக அதிகம். அந்த பக்கமாய் போகும் ஒளிக்கதிரை கூட இது இழுத்து சாப்பிட்டுவிடுமாம். இந்த மாதிரி ஒரு பிளாக் ஹோல் உருவாகி அது இன்னும் நமக்கு தொல்லை தர அது நமக்கு தேவையாவென ஒரு கும்பல் காட்டு கத்து கத்துகின்றார்கள்.
அட போங்கையா இதுமட்டும் சக்ஸஸ் ஆகி "அந்த"ரகசியத்தை நாங்கள் கண்டுபிடித்துவிட்டால் மனுஷனுக்கு சாவே வராமலிருக்கும் சூட்சுமம் வரைக்கும் நாங்கள் கண்டுபிடித்து விடுவோம். ஏற்கனவே டாலருடன் போட்டி போட்டு முன்னேறிக் கொண்டிருக்கும் யூரோ பிராந்தியம் தான் இனி அடுத்த வல்லரசுவென இப்பக்கம் கொண்டாடுகின்றார்கள்.இப்ப நடப்பது வெறும் வெள்ளோட்டம் தான். அடுத்த ஸ்ப்ரிங்கில் தான் நிஜ விளையாட்டு ஆரம்பமாகின்றது."All should leave Geneva"-ன்னு நம்ம நாஸ்ட்ரொடாமஸ் (Nostradamus) தாத்தா முன்னமேயே எதுக்கு சொல்லி வச்சிட்டு போனாருனுதான் தெரியலையே.

Thursday, September 18, 2008

குரல் தனியே இசை தனியே பிரிக்க

குரல் தனியே இசை தனியே பிரிக்க MP3 பாடல்களில் வரும் பின்னணி குரலையும் (ie Singers vocal), பின்னணி இசையையும் (Music) தனியாக பிரித்தெடுக்க மென்பொருள் உளதா என்றால் ஆம் உளது எனலாம்.அதுவும் இலவசமாக.கரோகே Karaoke அல்லது வோக்கல் ரிமூவர் (vocal remover)எனப்படும் இம்மென் பொருள்களை இன்னும் நான் முயன்று பார்க்கவில்லை.யாராவது முயன்று பார்த்தால் உங்கள் அனுபவம் சொல்லுங்கள்.சினி இசை தடம் மட்டும் பிளயரில் சத்தமாக ஓட இனி இனிய குரலில் பாடி தம்பிமார் கலக்கலாம்.
http://www.analogx.com/contents/download/audio/vremover.htm

please comment below or email me..

Friday, August 22, 2008

ஹோமியோபதி

ஜெர்மன் நாட்டின் மருத்துவப் புரட்சியாளர், மருத்துவச் சீர்திருத்தவாதி,ஹோமியோபதி மருத்துவத் தந்தை டாக்டர் ஹானிமன் ஒரு சிரஞ்சீவி (1755-1843). அவர் நிறுவிய புதிய மருத்துவ முறையின் பெயரை "ஹோமியோபதி" என்றார். அவர் காலத்தில் பின்பற்றப்பட்ட மருத்துவத்திற்கு "அலோபதி" என்று புதுப்பெயரிட்டார். இன்றளவும்இம்மேதை இட்ட பெயரை உலகம் பயன்படுத்தி வருகிறது. எனவே ஹானிமன் இன்றும் வாழ்கிறார்.

1810 இல் தமது வேதப்புத்தகமான (Bible of Homeopaths) ஆர்கனான் நூலைவெளியிட்டார். எனவே ஹோமியோபதியின் வயது 191. "நவீன மருத்துவம்" (Modern Medicine) என்ற பெயர் ஹோமியோபதிக்குத்தான் பொருந்தும். இதற்கு மாறாக, அலோபதி மருத்துவர்கள் தமது பாராட்மபரிய மருத்துவத்தை "நவீன மருத்துவம்" என்றும்,ஹோமியோபதியை விஞ்ஞான அடிப்படையற்ற, மறைந்து வரும் பழைய மருத்துவம் என்றும் கூறுகின்றனர். எனவே ஹோமியோபதி மருத்துவ முறையில் அடைந்துள்ள வெற்றிகளை அலட்சியப்படுத்திப் பேசுகின்றனர்! அலோபதி மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள்மருந்தில்லாத மாத்திரைகளை நோயாளிகளைச் சமாதானப்படுத்துவதற்காகக் கொடுக்கும்போது "ஹோமியோபதிக் டோஸ்" என்று கூறுவது வழக்கம். இருப்பினும் தற்போது ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பை அனுபவித்து கற்றுணர்ந்த அலோபதி மருத்துவர்கள் பலரும் ஹோமியோபதி மருத்துவர்களாக மாறியுள்ளனர். M.B.B.S பட்டம் பெற்ற சிலமருத்துவர்களின் பெயர் பலகைகளில் "ஹோமியோபதி கிளினிக்" என்று காணப்படுகிறது.

ஹானிமன் இன்றும் வாழ்கிறார்! ஹோமியோபதியின் வித்து ஹானிமன் வாழ்ந்த காலத்திலேயே இந்திய மண்ணில் விழுந்து விட்டது. அதுவும் ஆங்கில ஆட்சியும் ஆங்கில மருத்துவத்தின் (அலோபதி) ஆதிக்கமும்இருந்த காலத்தில் பஞ்சாப், வங்காளம், தமிழ்நாடு ( தஞ்சை) ஆகிய பகுதிகளில் விதைக்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவம் இந்தியாவில் ஆல் போல் பரந்து அருகுபோல் வேரோடிவிட்டது. அமெரிக்க, ஐரோப்பிய ஹோமியோபதி மருத்துவ மேதைகளின் புத்தகப் பதிப்புரிமைகளை இந்தியர்கள் வாங்கிவிட்டனர். இந்தியாவில் தான் ஹோமியோபதிக்கெனதனி மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

ஹானிமன் மருத்துவம் இந்தியக் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு ஒத்து வருவதால் ஹோமியோபதிக்கு இந்தியாவில் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் உண்டு. இருப்பினும் உலகமயமாக்கல் (Globalisation) என்ற இயக்கத்தில் அலோபதி மருத்துவத்தின் ஆதிக்கம் ஓங்கி வருகிறது. பணக்கார நாடுகளுக்கு ஏற்றது அலோபதி மருத்துவம். இந்தியப்பாரம்பரியத்திற்கு எதிரானது. அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவைகளுக்காக அல்லாடும் ஏழை இந்தியக் குடிமக்களுக்கு ஏற்றது ஹோமியோபதி மருத்துவம்தான். உலகமயமாக்கலினால் நமது பாரம்பரிய மருத்துவ மூலிகைகளுக்குஆபத்து ஏற்பட்டு வருகிறது.

நேர் மருத்துவத் தத்துவம் மிகக் குறைந்த அளவு மருந்தை வலியுறுத்துகிறது. வீரியப்படுத்தப்படும் (Potency Drugs) மருந்தைக் கொடுக்கிறது. மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட்ட (Proved on Human Beings) மருந்துகளின் குணங்கள் நிரந்தரமானவை. மனநோயாளிகளிடம் இரக்கம் காட்டியவர் ஹானிமன். ஒரு குறிப்பிட்ட உறுப்பை மட்டும் குணப்படுத்துவது இயற்கை விதிகளுக்கு மாறுபாடானது. மனிதனின்கனவுக் குறிகள் உட்பட உடலை நுணுக்கமாக ஆராய்ந்து பதிவு செய்த பின்தான் ஹோமியோபதி மருத்துவர் மருந்தை நாடுவார். மருந்துகள் அனைத்தும் இனிப்பு உருண்டைகள் வடிவில், தூய வெண்ணிறத்தில் அமைந்துள்ளது. இது ஹோமியோபதிக்கே உரிய தனிச்சிறப்பு. சிக்கனம் இதன் அடிப்படையான பலம். இஞ்செக்ஷன், ஆபரேஷன், விலை உயர்ந்த மருத்துவக் கருவிகள், பரிசோதனைக் கூடங்கள் முதலியவற்றை பயன்படுத்தி சிகிச்சை செய்வது அலோபதி மருத்துவம். நோயாளிகளைப்பரிசோதித்து விட்டு மருந்தைக் கொடுத்து ஒரு ஹோமியோபதி மருத்துவர் குணப்படுத்திவிட முடியும். ஆனால் எதிர் மருத்துவத்தில் பல விதமான நவீனக் கண்டுபிடிப்புகளின் உதவியின்றி சிகிச்சை செய்ய முடியாது! இது கண்கூடாகக் காணும் உண்மை.

ஹோமியோபதி முறையின் தத்துவம் நியூட்டனின் புவியீர்ப்பு விசைத் தத்துவத்தைப் போல் நிரந்தரமானது . நோயின் பெயரைப் பற்றியோ, கிருமிகளைப் பற்றியோ ஹோமியோபதி கவலைப்படுவதில்லை. மாறாக உடலில் விமரிசையாக இயங்கும் இயற்கை ) சக்திக்கு ஆதரவாகமருந்துகள் மிகக் குறைந்த அளவில், வீரியப்படுத்திய பின் கொடுக்கப்படுகிறது.
இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகி நோயைப் போக்குகிறது. ஹானிமனின் இந்தத் தத்துவம் அலோபதிக்கு முற்றிலும் எதிரானது. எனவே ஹோமியோபதி மருத்துவத்தில் குணமாகும் நோய்களை (Wonder Cures) அலோபதி மருத்துவர்கள் நம்பமறுக்கிறார்கள்! "ஹோமியோபதி மருந்துகளில் மருத்துவச் சரக்கு இல்லை! எனவே வேலை செய்யாது" என்று வாய்கூசாது கூறுகின்றனர். பெனிசிலின் கண்டுபிடிக்கப்பட்ட போது, "சர்வரோக நிவாரணி" என்று புகழப்பட்டது. பிற்காலத்தில் அதன் அபாயகரமான பின்விளைவுகளைக் கண்டு ஒதுக்கப்பட்டது. இந்த மாதிரியான நிலை ஹோமியோபதியில்இல்லை. 100 ஆண்டுகளுக்கு முன் "புரூப்" செய்யப்பட்ட மருந்துகள் இன்றைக்கும் அற்புதமாக வேலை செய்கின்றன! காரணம், ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் (Similia Simibilus Curantur) என்ற விஞ்ஞானப் பூர்வமான தத்துவத்தில் டாக்டர் ஹானிமன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பல அற்புதமான நோய்களைக் குணப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

உலக சாதனை படைத்த 8 வயது மாணவி

*இந்தியா : மைக்ரோசொப்டின் இணையத்தள தேர்வில் உலக சாதனை படைத்த 8 வயது மாணவி*
கடந்த மாதம் மைக்ரோசொப்ட் நிறுவனம் நடத்திய இணையத் தள தேர்வில் 1000க்கு 842 புள்ளிகளைப் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் உலக சாதனை புரிந்துள்ளார்.

கலை, கவிதை, பாட்டு, ஒவியம், கணனி போன்ற பல துறைகளில் அபரிமிதமான ஆற்றல் பெற்றவர்களுக்கு இளம் வயது சாதனையாளர் விருது வழங்கப்படுவது வழக்கம். இதனை 13 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற முடியும். அந்த வகையில், தனது 6ஆவது வயதில் கணனி அனிமேஷன், மல்டிமீடியா துறையில் பல்வேறு படிப்புகளை பூர்த்தி செய்துள்ள லவிணாஸ் (தற்போது 8 வயது) அகிட்பீடியா மற்றும்ரிலையன்ஸ் இணைய உலகம் நடத்திய இணையத் தள தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் கணனித் துறையில் அதி விசேட திறமை விருதும் பெற்றுள்ளார். இவர் கடந்த மாதம் மைக்ரோசொப்ட் நிறுவனம் நடத்திய இணையத் தள தேர்வில் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து உலக சாதனை புரிந்துள்ளார். இதற்காகஅவருக்கு எம்.சி.பி.. சான்றிதழ் வழங்கப்பட்டது.
இது குறித்து லவிணாஸ் கூறியதாவது: இது, கணனி பயிலும் மாணவர்களின் கணிக்கும் திறன், ஆங்கிலம் நுண்ணறிவுத் திறன், தொழில் நுட்பதிறன் உள்ளிட்ட பல திறமைகளை சோதிக்கும் தேர்வு ஆகும். இதற்கு 25 முதல் 30 வயதுள்ள மாணவர்கள் தோற்றுவதுவழக்கம்.
முன்பு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆர்பாகரிம் ரந்தாவா என்ற சிறுமி தனது 10ஆவது வயதில் இத்தேர்வை எழுதி வெற்றி பெற்றது சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது நான் 8 வயதிலேயே தேர்ச்சி பெற்று உலக சாதனை புரிந்துள்ளேன் என்றார்.
இனிய நண்பர்களுக்கு,
பெரும்பாளும் நமக்கு கிடைக்கும் அகராதிகள்(dictionary) English to English, மட்டுமே இதோ இங்கே உள்ள சுட்டியை click செய்து, தமிழ் அகராதியை பெற்றுப் பயன் பெருங்கள்.
Please comment Below or Email me

Saturday, August 16, 2008

தமிழில் எப்படி எழுதுவது

அடிக்கடி என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி.நீங்கள் தமிழில் எப்படி எழுதுகின்றீர்கள்? நான் தமிழில் எழுத என்ன செய்ய வேண்டும்? போன்றன.

இங்கே என் விளக்கங்கள்.நீங்கள் தமிழில் எப்படி எழுதுகின்றீர்கள்?ஆரம்பத்தில் Kuralsoft எனும் அழகிய எளிய இலவச மென்பொருள் ஒன்றை தான் பயன்படுத்தி வந்தேன்.இதன் வழி நேராக Notepad-ல் தமிழில் தட்டச்சலாம் அல்லது நேராகவே பிளாகிலேயே தட்டச்சலாம். பிரச்சனை இல்லாதிருந்து வந்தது. என்னநினைத்தார்களோ சமீபத்தில் அதற்கு விலையை குறித்து விட்டார்கள்.

தமிழில் எழுத இலவச மென்பொருள்கள் இன்னும் இருப்பதால் அவைகளுக்கு தாவ வேண்டி வந்தது. இப்போது ஈகலப்பை எனும் மென்பொருளை பயன்படுத்துகின்றேன்.

தமிழில் எழுத என்ன செய்ய வேண்டும்?நீங்களும் தமிழில் Notepad-லோ அல்லது Gmail-லிலோ தமிழில் எழுதலாம். முதலில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து eKalappai எனும் மென்பொருளை இறக்கம் செய்து கொள்ளுங்கள்


பின் கீழ்கண்ட சுட்டியிலிருந்து கீபோர்டு Tamil unicode .kmx கோப்பை இறக்கம் செய்து அதை ஈகலப்பையில் பயன்படுத்துங்கள்


குழப்பமாய் இருக்கிறதா? இதோ படிப்படியாக செய்முறை உங்களுக்காக..

1. eKalappai-யை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவவும். சும்மா Install-யை கிளிக் பண்ணி மற்ற எல்லா வற்றையும் பட்பட்டென கிளிக்கி செல்லவும்.கீழே அந்த ஆரம்ப படம்.
2. eKalappai நிறுவி முடித்ததும் கீழே படத்தில் இடதுகோடியில் காண்பது போல புதிதாய் ஒரு ஐகான் (TavulteSoft Keyman 6.0) உங்கள் கணிணியில் வரும்.
3. அந்த ஐகானை வலது கிளிக்செய்து keyman configuration. ..-ஐ கிளிக்கவும்.
4. அதிலுள்ள Install Keyboard-யை கிளிக்கி ஏற்கனவே இறக்கம் செய்து வைத்துள்ள NewUniTamil. kmx கோப்பை நிறுவவும்

5. முடிவில் இப்போது மூன்று கீபோடுகள் இருக்கும். அதில் Tamil99UNI,Tamil99T sc இரண்டிலும் உள்ள டிக் மார்க்கை நீக்கிவிடவும்.UniTamil மட்டும் டிக் இருக்கட்டும்.

6. இப்போது Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் நீங்கள் தமிழில் எழுத தயார். Notepad-யை திறந்து தமிழில் எழுதலாம்.உதாரணமாய் அம்மா என்பதை ammaa எனவும் ஆசை என்பதை aasai எனவும் டைப்பவேண்டும். இதை Tamil Transliteration என்பார்கள். மீண்டும் Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் ஆங்கிலத்துக்கு போய் விடுவீர்கள்.பயர்பொஸ் உலாவியில் தான் தமிழ் யுனிகோட் பிரச்சனை உள்ளது. அதனை கீழ் கண்டவாறு சீர் செய்யலாம்

1. முதலில் windows XP with Service pack 2 இறுவட்டை CD Drive க்குள் போட்டுக்கொள்ளவும். பின்னர் க்ண்ட்ரோல் பனெலிற்கு போய் Regional & Language Options என்னும் ஐக்கனை கிளிக் பண்ணவும்.

2. அதில் language என்னும் Tab இனை கிளிக் பண்னவும்.

3. அதில் supplemental language supportஏனும் option இல் இரண்டு தெரிவுகள் இருக்கும்

*. install files for complex scripts and right to left language (including Thai)*install files for east Asian languages

இதில் முதலாவதை தெரிவு செய்த பின்பு apply button ஐ சொடுக்கினால் வின்டோஸ் எக்ஸ்பி சீடியிலிருந்து தமிழ் யுனிகோட்டுக்கு தேவையான விபரங்களை தானாகவே அது பதிவு செய்து கொள்ளும்.

பின்பு கணினியை மீள ஆரம்பிக்கவும்.

அவ்வளவு தான்

Tuesday, August 5, 2008

சில நேரங்களில் - பாகம் 2

ரமேஷ்: லாரியில் ஏரி அமர்ந்து, ட்ரைவரை ஒரு லுக்கு விட்டன்,ட்ரைவர்: என்னடா அப்படி பாக்குற,
ரமேஷ்: இல்ல, இதுக்கு முன்னாடி நீங்க ராக்கட் ஓட்டி இருக்கிங்களா
ட்ரைவர்: இல்ல, ஏன் கேக்குற
ரமேஷ்: உங்கள பாத்தா கல்பனா சாவ்லா மாதிரி இருக்கு
ட்ரைவர் வேட்கத்தேடு தன்னை தற்ப்பெருமை பட்டுக்கெள்வதற்குள், கிளி£னர் பையன் கலுக்கென சிரித்தான்.
ட்ரைவர்: அவனை பார்த்து முறைத்தான், என்னடா சிரிப்பு ராஸ்கல்
கிளீனர்: தோடா அவ இன்னா சொன்னானு தெரியாம என்ன திட்ர,
ட்ரைவர்: இன்னடா சொன்னா அவன்,
கிளீனர்: கல்பனா சாவ்லா பொம்பள
ட்ரைவர்: அதனால இன்னா
கிளீனர்: யேவ் நீ மன்னுயா
ட்ரைவர்: ஏ
கிளீனர்: பின்ன அவ உன்ன பொட்டனு சொல்றான்.
ட்ரைவர்: சரி எடம் வந்துருச்சி எறங்குடா சொட்ட.
முறைத்தபடி இறங்கினான் கிளீனர்----
ரமேஷ் தன் சீருடை போட்டுக்கொண்டு வந்தான், அவனுடைய சூப்பர்வைசர் அவனை பார்த்து
சூப்பர்வைசர்: ரமேஷ் உனுக்கு இன்னைக்கு மடிப்பாக்கம் ஏரியால டூட்டி, என்றார்,வழக்கம்போல யாரையும் கிண்டல்ப்பன்னாமல், ஒழுங்கா வேலையை பாக்கனும்.
ரமேஷ்: சொரிங்ன,
சூப்பர்வைசர்: என்ன
ரமேஷ்: சரிங்கன
சூப்பர்வைசர்: ம் அது.
ரமேஷ்: அன்னே நேத்திக்கு உங்க ஒய்ப்ப(wife) மார்க்கட்ல பாத்தேன், இப்போ நடிகை சாவித்திரியபாத்தா எப்டி இருப்பாங்களே அப்டி இருக்காங்கனே
சூப்பர்வைசர்: சரி உடு நாளைக்கு ஓட்டி தறேன், என்று சொல்லி முடிப்பதற்குள் பின்னாலிருந்து கிளீர்பையன் சிரித்தான்,
சூப்பர்வைசர்: ஏன்டா சிரிக்குற,
கிளீனர்: அன்னே அவ இன்னா சொன்னானு உனக்கு புரியலல்ல
சூப்பர்வைசர்: இன்னா சொன்னான்டா,
கிளீனர்: அண்ணிய பாத்து, இப்போ சாவித்திரி இருந்தா எப்டி இருப்பாங்களே அப்டி இருக்காங்கனானேஅதுக்கு இன்னா அருத்தம் தெரியுமா? இப்போ சாவித்திரிய தோண்டி எடுத்தா எப்டி இருப்பாங்களே அப்டிஇருக்காங்கனு அர்த்தம், அதாவது அண்ணிய பொனம்னு சொல்றானே
சூப்பர்வைசர்: எங்கட அவன் என்று திரும்பி பார்பதற்குள் சிட்டாய் பறந்தான் ரமேஷ்
தொடரும்.....

சில நேரங்களில் - பாகம் 1

ஆயிரம்தான் சொல்லு, உன்ன மாதிரி வராதுடா; பணம், காசு, பொளசு, வந்தாலும், பழச மறக்காமல், என்று பேசி முடிப்பதற்க்குள், ரமேஷ் குறுக்கிட்டு, போதும் நிருத்துடா ஒரு டம்லர் எச்ச டீக்கு ஒருப்பக்க டையலாக், 10 ரூபா காமிச்சா போதுமே பக்கம் பக்கமா டையலாக் வருமே, தெரியாமதான் கேக்கெற, இப்போ என்க்கு இன்னா பொளசு வந்துடுச்சுன்னு, இப்டி பொலம்புற।
குமரன்: மச்சி, உ லெவலு உனக்கு தெரியாது, என்று அலுத்துகொண்டான்.
ரமேஷ்: இன்னா லெவலு பொரிய கொத்தனார் லெவலு, ஓஞ்ஞி ஆஞ்ஞி பீராஞ்ஞாலும் மாசம் 400 ரூவா பொரட்ட முடியல, பேருக்கு தான் நகர சுத்தி தொழிலாளி, இதுக்கு பதிலா நகசுத்தி தொழிலாளி சொல்லியிருந்தாலும் நாலு எலும்பிச்ச பழமாவது கடச்சுருக்கும், என்று புலம்பினான் புதிதாக கார்பரேஷன் கான்ட்ராக்ட் வேலையில் சேர்ந்திருக்கும் ரமேஷ்।

குமரன்: சரி உட்ரா, ரொம்ப சீன் போடாத, ஒரு பன்னு சொல்லு,
ரமேஷ்: ஏ போதும் போ!॥ இருக்குற 5 ரூவாக்கு, அமித்தாபசன் ரேஞ்ல ஆடர் பன்னாத, இப்போ டீ எங் கணக்கு சாங்காலம் டீ, பண்ணு உங்கணக்கு, இன்னா சரியா
குமரன்: நவாப்பே நக்குறாரு குதுர கோதும ரொட்டி கேட்ட கதையா இருக்கே, என்று சொல்லிக்கொண்டே நழுவினான்
ரமேஷ்: காசு கேட்டா காத்தாடியா பரந்துடுவான்களே।
போன வேகத்திலேயே திரும்பி வந்தான் குமரன்,
ரமேஷ்: இன்னாட பிரெக் டவுன்னான பஸ் டிப்போக்கு வந்த மாதிரி, திரும்பி வர,
குமரன்: அதலா ஒம்மில்லை, கலா உன்ன தேடுறா அதான் சொல்லிட்டு போலாமுன்னு வந்தேன்। கலாவ கலாசிடியா இன்னா,
ரமேஷ்: ஆம்மாட அவதா டிவி டேஷன்ல வேல செய்றால 100ரூவா கடங்கேட்டன் ஒவ்வர சீன் போட்ட, ஆதான் நேயர் விருப்பம் வரும்போது நாயர் கடையிலிருந்து ஒரு போன் போட்டு கலாசிட்டேன், மச்சான் அவ வரா, நா ஒரகட்றேன், காண்டுல போட்டு கீட்டு குடுத்துடாத, சாங்காலம் பரோட்டாவே வாங்கித்தறேன்.
கலா: எங்கடா அந்த நாயி, உங் கூடதானே சுத்திகின்னு இருப்பா எங்க அவ, போனா போவுது ஏரியா பையனாச்சே அஞ்ஞாங் கிலாஸ் வரைக்கும் கூட படிச்சவனாச்சேனு பழகுனா வேல செய்ற எடத்துக்கெல்லாம் போன் போட்டு காலாய்கிறான்,
குமரன்: அப்டி இன்னாதான் உன்ன கலாச்சான்,
கலா: இன்னா காலாச்சான!? நேயர் விருப்பம் ப்ரோகிறாம் நடந்துனு இருக்கு ஒரு போன் வந்தது, சிரி நேயர்தான் போன் பன்றாங்கனு பாத்தா இந்த நாயி,
குமரன்: சரி அப்டி இன்னாதாக் கேட்டான்,
கலா: காசு கேட்டா கூட குடுத்துட்டுருப்பேன்,
குமரன்: சரி இன்னா நடந்துச்சுன்னு சொல்லு,
கலா: பேரு என்னானு கேட்டா பொனம்னு சொல்றான், சரி என்ன பாட்டு வேனும்னு கேட்டா "ஜனகனமன" போடுங்கனு சொல்றான், எந்த படத்திலிருந்து காட்சினு கேட்டா, நல்ல பாம்பு எடுக்குமே அந்த படத்துலேந்து காமடி போடுங்கனு சொல்றான், கடசில அடமொழில ஏரியாவ சொல்லி போர வேர சொல்றான்। அப்போதான் தெரிஞ்ஜது இந்த நாய்தான் போன் பன்னதுனு, உங்ககூட சவகாசம் வச்சதுக்கு இதுவும் வேனு இன்னமும் வேனும்.
நாயர் கடை பினாலிருந்து ரமேஷ்,
ரமேஷ்: இன்னாடா வேனும் வேனும்னு இன்னமோ சொல்லிகினே போறா,
குமரன்: டேய் இதல்லாம் ரொம்ப ஓவர்டா!
ரமேஷ்: இத எ எங்கிட்ட சொல்ற மேக்கப் ஒவரயிருந்த அவகிட்ட சொல்லு
குமரன்: இதுக்கொல்லாம் எவனாவது உனக்கு ஆப்புவெப்பான்
அதற்குள் கார்பரேஷன் லாரி வந்தது, டேய் ரமேஷே டைம் ஆயிடுச்சு வேலைக்கு வரலியா, என்று லாரியிருந்து குரல் வந்தது।

ரமேஷ்: இருங்கடா வறேன், பெரிய வேல நாவப்புகிட்ட ஜாவாப்பு வேல, ....
தொடரும்...

Monday, July 28, 2008

உணர்வுகள்

உணர்வுகளின் தவறான பரிமாற்றத்தால் பலரும் வாழ்க்கையில் துன்பப்பட்டு வருகிறார்கள், அதற்கு காரணம், சிலர் அறியாமலும், பலர் அறிந்தும் உணர்களை தவறாக பரிமாற்றிக்கொள்வதே! "அன்பு, பண்பு, பரிவு, பாசம், பக்தி, நேசம், காதல், மரியாதை, விரோதம்"
இவை அனைத்தும் நாம் நமது வாழ் நாளில் உணரகூடிய உணர்வுகளின் பெயர்சொற்கள்.
அன்பு- அன்னையிடதிலும்
பண்பு- தந்தையிடதிலும்
பரிவு- விலங்கிடதிலும்
பாசம்- சகோதரர்களிடதிலும்
பக்தி- கடவுளிடத்திலும்
நேசம்- நண்பர்களிடதிலும்
காதல்- மனைவியிடதிலும்
மரியாதை- முதியவரிடதிலும்
விரோதம்- வேண்டாத நண்பரிடதிலும்

இப்படி உறவுகளின் உணர்வுகளை நம் முன்னோர் வகைப்படுத்தி வைத்துள்ளனர். இதில் எந்தயிடத்திலும் சற்று மாறியோ, கூடவோ, அல்லது குறையவோ இந்த உணர்வுகள் இருப்பாறாயின் அங்கே பிரச்சனை அழையா விருந்தாலியாக வந்துவிடுகிறார்.
மேலை நாடுகளில் இந்த ஒட்டு மொத்த உறவுகளின் உணர்வுகளுக்கும்"LOVE" என்ற ஒரே ஒரு சொல் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் அங்கே உறவுகளின் அடிப்படையில் சற்றே பிரச்சனைகள் அதிகப்படியாக காணப்படுகின்றன. அதற்காக நம் போற வளரும் நாடுகளில் பிரச்சனைகளேயில்லை என்றும் சொல்வதற்க்கில்லை, ஆனால் நமக்கு தேவையற்ற உணர்வுகளை நீக்கி சுமூகமாக வாழ்வதற்கு அதிக வழிகள் உள்ளன என்பதையும் நாம் மறுப்பதற்க்கில்லை.
ஆகவே நண்பர்களே, உணர்வுகளை சரியானயிடத்தே பறிமாற்றம் செய்யுங்கள் மனநிம்மதி பெற்று மகிழ்ச்சியில் திளையுங்கள்.

please comment below or email me..

கடவுள்

கடவுள் உண்டா? இல்லையா?!॥ இந்த உலகத்தில் உள்ள அனைத்து மதத்தினறாலும் கேட்கப்படும் ஒருக் கேள்வி। விடை தெரியாவிட்டாலும், இல்லை என்று தெரிந்தாலும்(நாத்திகம் பேசுவதாக எண்ண வேண்டாம்) அதை தைரியமாகச் சொல்ல ஒரு பயம். எங்கே கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டால் ஏதாவது அவதூறாக நடந்துவிடுமோ என்று உள்ளுற நம்மை அறியாமல் ஒரு பயம்.
எனக்குள் எழுந்த சில சிந்தனைகளை உங்களுடன் பகிர்வதில் தவறென்றும் இல்லை என்று நினைக்கிறேன்.
இயேசு பிரான் சிலுவையில் அறையப்படுவதற்கு முன் நாள், "கர்தாவே இவர்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமலேயே செய்கிறார்கள்" என்று பிராத்தனை செய்கிறார்.!?
(பொருங்கள்) இன்னும் இருக்கிறது
முகமது நபி மெக்காவிலிருந்து மதினாவுற்கு துறத்தப்பட்டபோது அவரும் வேறொருவரிடம் இயேசு பிரான் போலவே முறையிடுகிறார். பகவத் கீதைக்கு வருவோம், கண்ணனும் நானே எல்லாமுமாக இருக்கிறேன் என்று கூறுகிறார்கள், இவர்கள் மடுமல்லாமல், அனைத்து மதமும், ஈஸ் என்றும், அல்லா என்றும் புத்தன் என்றும் இயேசு என்றும் இன்னும் பல பல மதங்களால் வழிப்பட்டு வருகிறோம்.
இவர்கள் அனைவரும் யாரை குறிப்பிடுகிறார்கள், அப்படி இவர்கள் வேறு ஒருவரை கடவுளாக கூறுவாராயின், நாம் ஏன் இவர்களை வணங்க வேண்டும்.?!
சரி விஷயத்திற்கு வருவோம்.
இவ்வாறாக என்றைக்குமே கிழக்கும் மேற்குமாக, விஞ்ஞானமும், மெய்ஞானமும் இருந்து வருகிறது, ஆனால் இவர்கள் எல்லோறாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது மூலம்(கூறு) ஒன்று உண்டு என்பது.
மெய்ஞானம் "வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்" என்றும், விஞ்ஞானமும் (there is every action qualent and opposite reaction) "வினைக்கேற்ற செயல் விளையும்" என்றும் சொல்கிறது.

ஆகவே நண்பர்களே நல்லதையே நினையுங்கள் கடவுள் இருந்தால் உங்களுக்கு அருள் பாவிக்கட்கு, நல்லதையே நடைமுறைப்படுத்துங்கள் கடவுள் இல்லாதிருந்தாலும் மணிதநேயம் வளரட்டும்.
வீனான குழப்பத்ற்கும், வேண்டாத கேள்விகளுக்கும் மனதை அலையவிடாமல், மணிதநேயம் வளர வழிவிடுங்கள்.

please comment below or email me..

Sunday, July 27, 2008

ஆசை

ஆசை:-
ஆசை இந்த சொல்லைக் கேட்கும்போதே ஆசையாக இருக்கிறது. சரி விஷயத்திருக்கு வருவோம்.
ஆசையே அனைத்து அழிவிற்கும் காரணம் என்கிறது -பொளத்த மதம். ஆசையை அடக்கினால் அனைத்தையும் அடையலாம், பேராசை பெருநஷ்டம், இப்படியெல்லாம் பல கருத்துக்கள் ஆண்டான்டு காலமாக அனைவராலும் சொல்லப்பட்டும், கேட்கப்பட்டும் வருகிறோம்.
இது சரிதானா? ஆசையை அடக்க வேண்டும் என்று நினைத்தலே ஒரு ஆசைதானே அதெப்படி ஆசையை அடக்குவது(சரிசெய்வது)?.
இதைப் பற்றி எழுதும் போது நான் என் கல்லூரி காலத்தி எழுதிய கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது, அதை இங்கே சொல்வதில் ஒன்றும் தவறில்லை என்று நினைக்கிறேன்.
"மனமென்னும் மாளிகையில்
நிறையவே சிற்றரைகள்
சிற்றரைகள் அனைத்திலும்
ஆசை என்னும் ஒட்டடைகள்;
ஒட்டடைகள் அனைத்தையும்
ஒழித்துவிட ஆசைதான்- ஆனால்
அதுவும் ஓர் ஒட்டடையாய் அடி மனதில் படியும்போது;
பாழும் மனம் அழுவதன்றி அது என்னச் செய்யும் பாவம்!?"
மணித இனமே ஆசை(இச்சை)யின் காரணமாக பிறந்தவர்கள், அப்படியிருக்க அவர்களால் எப்படி ஆசையிறி வாழமுடியும், சரி, அப்படியென்றால் இதற்க்கு என்னதான் வழி!!
இந்த வையத்தில் கேட்கப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் அங்கேயே பதிலும் இருக்கிறது. அது தேடுபவரின் மனநிலையைப் பொருத்து விடை சிறியதாகவோ பேறியதாகவோ அமைந்துவிடுகிறது. - உதாரணத்திற்க்கு
கோவில், அதை மூடும் கதவு பெரியதாக் இருக்கிறது, ஆனால் அதை திறக்கும் பயன்படும் தாழ்பாலோ மிகவும் சிறியது, அதில் புட்டப்பட்டிருக்கும் பூட்டு அதனினும் சிரியது, அப்பூடை திரக்க பயன்படும் சாவியோ மிகமிக சிரியது- ஆகவே
உங்கள் ஆசை உண்டான இடத்தையும் அது தேவைதான என்ற கேள்வியையும் உங்களை நீங்களேக் கேட்டுப்பாருங்கள். விடை உங்கள் அருகாமையில்..
இதை சொல்லும் போது "ஜான் கென்னடி" பற்றி ஒரு குறிப்பு தற கடமைப்பட்டுள்ளேன்.
ஒரு சமையம் "ஜான் கென்னடி" தன் நண்பறோடு ஒரு மிகப்பெரிய பல் பொருள்அங்கடிக்கு சென்றிருந்தார் 3 மணி நேரம் அக்கடையை சுற்றிப் பார்த்துவிட்டு பின் எதையும் வாங்காமல் வெளியே வந்தார், அவறோடு வந்த நண்பர் அவரைப் பார்த்து ஏன் எதையும் வாங்கவில்லை என்றுக் கேட்டார் அதற்க்கு அவர்ச் சொன்ன பதில் என்னத் தெரியுமா?
இந்த உலகத்தில் எனக்கு தேவயற்றப் பொருள் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்க்கவே அக்கடையுள் சென்றேன் என்றார்.
ஆகவே நண்பர்களே
ஆசை இருக்கும் வரை தேடல் இருக்கும்.
"ஆசை" என்பதை "தேவை" என்று எடுத்துக்கொள்ளுங்கள். தேவயற்ற எண்ணங்களை நீக்கிவிட்டால் வாழ்வு வளம் பெரும்.

please comment below or email me..

Thursday, July 24, 2008

கருவாச்சி காவியம்.

கவி பேரரசு வைரமுத்துவின் கருவாச்சி காவியம். pdf format இங்கே இறக்கம் செய்துக் கொல்வும்.

Thursday, July 10, 2008

விஞ்ஞான வளர்ச்சி..!?

விஞ்ஞான வளர்ச்சி
காந்திக்கு கைத்துப்பாக்கி;
இந்திராவுக்கு இயந்திரத் துப்பாக்கி;
இராஜுவுக்கு மனித வெடிகுண்டு...!?

Tuesday, July 8, 2008

Bheema-video song

Kreedam-Akkam Pakkam

அர்த்தமுள்ள இந்து மதம்

அர்த்தமுள்ள இந்து மதம் mp3 format

Sivaji- video song

முத்திக்கென்றெ

பச்சைக் குழந்தைக்கு பாலும் இல்லை
அதன்
பட்டினி அழுகைக் கேட்க்கவில்லை
இச்சையுடன் பாலை சாமிக்கென்றெ
இட்டு மகிழ்கின்றார் கல்லில் முத்திக்கென்றெ:-

வருந்தவில்லை

எத்தனையோப் பேர் பாடியும் நாடு இன்னும் திருந்தவில்லை;
அதற்க்கு:-
இத்தனை நாளாகியும் மனிதன் ஏனோ வருந்தவில்லை;