Wednesday, December 30, 2009

பிரபாகரன்-25 குறிப்புகள்

பிரபாகரன்-25 குறிப்புகள்,
நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்துமே, தமிழர்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்த உண்மைகள்தான்.
ஆனாலும், மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும்.
தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக்
காட்டியவர் அல்லவா…
பிரபாகரன் – 25:
தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், 'தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க… அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத்
தேர்ந்தெடுத்திருக்கிறார்!

பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் – அலெக்ஸ் ஹேவியின் 'ஏழு தலைமுறைகள்'. அதில் 'இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம்
போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால்
பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

"ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர்
ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

"பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது.
மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன்
சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் னைவி அடேல்!

அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. 'தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன்
உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று
மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

'இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது
வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், 'பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர்.
கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது
தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள்.
பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும்
உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!

தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக
உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல்
ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள்
மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன்
மோதியவர்கள்!

அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர்,
செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன்.
மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து
வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"

"ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில்
இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று
சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!

மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

'தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!

Tuesday, December 22, 2009

மகிழ்வாகக் கொள்வாதாலேயே!

காலைநேரக் கூட்டமன்று கூடுதலாய் இருந்தது வேலைமிக அதிகமெனப் பார்த்ததுமே
புரிந்தது வந்தமர்ந்த நோயாளிகளை ஒவ்வொருவராய்ப் பார்வையிட்டேன் வயதான
கிழவரொருவர் பரபரப்பாய் இருக்கக் கண்டேன் அருகழைத்து என்னவென ஆதரவாய்
விசாரித்தேன் அவசரமாய்ப் போகவேண்டும் ஒன்பதுக்குள் எனச் சொன்னார்
கைக்காயத் தையல் பிரிக்கும் எளிதான வேலையென்பதால் மருத்துவரின்
அனுமதியுடன் அவர் காயம் கவனித்தேன்
ஏதேனும் அவசரமோ? ஒன்பதுக்கு என்ன வேலை?' எனக்கேட்டேன் மனைவியுடன்
சேர்ந்தமர்ந்து காலையுணவு உண்ணும் நேரம்' என்றாரவர் காத்திருக்க
மாட்டாரோ? பிடிவாதம் மிகவுமோ!' எனச் சீண்டினேன் இல்லையில்லை!
அவளிருப்பதோர் மருத்துவமனையில் எனச் சொன்னார் கட்டுத்தையல் பிரித்தபடியே,
'உடம்புக்கென்ன?' எனக் கேட்டேன் ஆளை மறந்துபோகும் *அல்ஸைமெர் நோய்'*
என்றார் அமைதியாக ஆவலை அடக்கமுடியாமல், 'உங்களை மட்டும் நினைவில்
கொள்வார்தானே' என்றேன்
'இல்லையில்லை! யாரையுமே அடையாளம் தெரிவதில்லை' வருத்தமுடன் சொன்னார்
லேசாகத் துளிர்த்த எரிச்சலை அடக்கிக் கொண்டு' 'பிறகேன்
அவசரமாம்?எப்படியும் அவருக்கு உங்களை அடையாளம் தெரியப் போவதில்லை'
என்றேன் அசுவாரசியமாக ஆனால், எனக்கவளை நன்றாக அடையாளம் தெரியுமே
ஏறெடுத்து எனைப் பார்த்தார் என்னிருவிழிகளிலும் குபீரெனப் பொங்கியது
பெருகிவந்த கண்ணீர்வெள்ளம்! மேனியெங்கும் சிலிர்த்துப் போச்சு!
உடம்பெல்லாம் ஆடிப்போச்சு!
'காதலென்றால் இதுபோல வாய்க்கவேண்டுமெனக்கு' என்னுள்ளில் எண்ணம்
தோன்றியது! காதலென்பது காமமல்ல, கனிவாகப் பேசுவதுமல்ல
நிகழ்கின்ற அனைத்தையுமே அப்படியே ஏற்றிடும் மனப்பாங்கே காதல் மகிழ்வான
தம்பதியர் அனைவருமே எல்லாச்சுகமும் பெற்றவரில்லை
இருப்பது எதுவாயினும் அதனை மகிழ்வாகக் கொள்வாதாலேயே!

*வரும்புயலைச் சமாளிக்கத் திட்டம் தீட்டுவதல்ல காதல்
பெயும்மழைநீரில் களித்தங்கு ஆடுவதே வாழ்க்கை!*

ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிவது

1. அனிமா - அடுத்தவர் கண்களுக்கு தெரியாமல் இருப்பது

2. மகிமா - ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிவது

3. லகிமா - உடலை லேசாக ஆக்கி கொள்ளுதல்

4. ஹரிமா - உடலை கனமாக்கி கொள்ளுதல்

5. பிராப்தி - நினைத்த நேரத்தில் எங்கும் செல்லுதல்

6. பிராகாமியம் - விருப்பபடி சகல பொகங்களையும் அனுபவித்தல்

7. வசித்வ - எல்லா உலக்கத்தையும் தன்வசப்படுத்துதல்

8. ஈசத்துவம் - அனைத்தையும் தன் வசப்படுத்துதல்

தெரிந்த மென்பொருள்கள் தெரியாத பயன்பாடுகள்

அன்றாடம் நாம் பயன்படுத்தும் சில மென்பொருள்களில் ஒளிந்திருக்கும்
பயன்பாடுகளை சாமானியர்களுக்காக இங்கே தனித்திட விரும்பினேன்.

1.உங்கள் விண்டோஸ் கணிணியில் ஏற்கனவே உள்ள சாதாரண Windows Media Player
மூலம் உங்கள் ஆடியோ சிடியிலுள்ள இசைக்கோடுகளையெல்லாம் MP3-யாக மாற்றி
கணிணியில் சேமிக்க முடியும் தெரியுமோ? அதிலுள்ள Rip வசதியை
பயன்படுத்தலாம்..


2.Windows Media Player Classic மூலம் ஒரு மூவியின் ScreenCaps-யை
கீழ்கண்டது போல் அழகாக ஒரே சொடுக்கில் எடுக்கலாம் தெரியுமோ?

Download Windows Media Player Classic
http://www.free-codecs.com/Media_Player_Classic_download.htm

3.இப்போது இலவசமாக கிடைக்கும் RealPlayer SP BETA மூலம் ஒரு வீடியோ/ஆடியோ
ஃபார்மேட்டை இன்னொரு வீடியோ/ஆடியோ ஃபார்மேட்டாக எளிதாக மாற்றலாம்
தெரியுமோ?

Download RealPlayer SP BETA
http://www.real.com

How to use RealPlayer's free media converter in 3 short steps:
1) Download your video or audio file to your computer.
2) Click on the "Copy To" link next to the video.
3) Select your device from the list and RealPlayer SPBeta will
automatically convert your file to the right format and transfer it to
your device

4.Microsoft Office 2007 கோப்புகளை நேரடியாக MS Office-யிலிருந்தே PDF
கோப்புகளாக சேமிக்கலாம் தெரியுமோ?. Save as PDF Add-in-ஐ
பயன்படுத்துங்கள்

Download
http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=f1fc413c-6d89-4f15-991b-63b07ba5f2e5&displaylang=en

5.விண்டோஸ் டெக்ஸ்டாப்பில் பலவகையான கோப்புகளையும் நாம் தாறுமாறாக
அப்படியும் இப்படியும் போட்டிருப்போம். Wallpaper எல்லாருக்கும் தெரிந்த
விஷயம். அதையே மிக பயனுள்ளதாக பயன்படுத்த இதோ ஒரு எளிய வழி.
சாதாரண விண்டோஸ் வால் பேப்பர் இப்படி இருக்கும்.

அதையே இப்படி பயனுள்ளதாகவும் மாற்றலாம்.

Download
http://antbag.com/desktops

ஜெயஸ்ரீ ஷங்கர். உன் ஆடு புலியாட்டம்...

ஊழ்வினைத் தாக்கி.....
சூலுக்குள் சுருண்டுழன்று....
பிறப்பென்னும் பிணி ஏந்தி..
தண்டனையாய்
வையகச்சிறைதனிலே!


சிரிக்கத் தெரிந்த கைதிகளாய்
ஆயுளை அர்ப்பணித்து...
தீற்பெழுதிய நாள்முழுதாய்
அறிந்திடாமலே ஏதும் புறிந்திடாமலே
மாயச்சிறையில் சிக்க வைத்தாய் - இறைவா..!


சூட்சுமம் சொல்வாரில்லை
புதிருக்கு விடையும் இல்லை
பொன்னையும் மண்ணையும்
காட்டி மயங்கவைத்தாய்.
பாசத்தையும் நேசத்தையும் வீசி
வலை விரித்தாய்...- இறைவா!


ஜென்ம ஜென்மமாய் பரிட்சை வைத்தாய்..
எழுதி எழுதி தோற்க வைத்தாய்...
விடை தெரியாது தவிக்க வைத்தாய்....
தடை சொல்லாது சிரித்து நின்றாய்.!


போகத்தில் சிலர், மோகத்தில் சிலர்
கொள்வதில் சிலர் கொல்வதில் சிலர்
காப்பதில் சிலர் தோற்பதில் சிலர்
உனது சல்லடை தீர்ப்பில் சிக்கி
தங்கவிடுவதே உன் லீலை !


காலமும் நேரமும் மறந்து,
யுகம் l யுகங்களாய் கரைந்தும்
சலிக்காத உன் ஆடு புலியாட்டம்...
எங்களுக்கு அலுத்து விட்டது.!!


மன்னித்துவிடு இல்லையேல்
மறந்துவிடு மொத்தமாய்
உலக பந்தம் அனைத்தையும்
இழுத்து மூடிவிடு..இறைவா!


புதிதாய் ஓருலகு படைத்துவிடு.
அங்கு சந்தோஷமாய்
அனைவரையும் வாழவிடு
பாவ புண்ணியத்தை கழற்றிவிடு
விதி எனும் பெயரை அழித்துவிடு
நல்ல பெயர் நீயும் எடுத்துவிடு..


ஜெயஸ்ரீ ஷங்கர்.

பெண் ஏன் அடக்கப் பட்டாள்..? ஏன் ஒடுக்கப் பட்டாள்..?

எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும்
பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு
சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில்
தலைப்போடும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப் படுகின்றன.
உடைகள் பற்றிப் பேசப் படுகின்றன. அணிகலன்கள் பற்றி ஆராயப் படுகின்றன.

பெண்களை நாங்கள் வெளியில் போக விடுகிறோம். விரும்பிய உடைகளை அணிய
விடுகிறோம். பல்கலைக்கழகம் வரை படிக்க விடுகிறோம். வேலை செய்ய
விடுகிறோம். ஏன்.. கணினியில் கூட எழுத அனுமதிக்கிறோம். இன்னும் என்ன
வேண்டுமென்று இவர்கள் ஆர்ப்பாட்டக் கொடி பிடிக்கிறார்கள்.. என்ற
ஆணாதிக்கம் தொனிக்கும் கேள்விகள் கூட சில ஆண்களிடம் இருந்து சினத்தோடு
எழுகின்றன.

பெண்விடுதலை என்றால் என்ன? அதன் தார்ப்பரியம் என்ன? என்பவை பற்றி சில
ஆண்களுக்கு மட்டுமல்ல. பல பெண்களுக்குமே புரியவில்லை.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வெகுவாக முன்னேறி விட்டார்கள்தான். அதை
யாரும் இல்லையென்று சொல்ல முடியாது. தனது பதினோராவது வயதிலேயே பாலியல்
வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு தாய்மை என்னும் புனிதத்தையோ அன்றிப்
புளகாங்கிதத்தையோ உணர முடியாத குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தையைத் தான்
சுமந்து தாயான லிபேரியக் கறுப்புஇன
இளம் பெண்போராளி ஒருத்தி சொல்கிறாள் ஒரு ஆணை விட ஒரு பெண்ணினால்தான்
முழுமன ஈடுபாட்டுடனும் வீரியத்துடனும் புத்தி சாதுரியத்துடனும் போராட
முடியுமென்றும் ஒரு ஆணை விடப் பெண்ணிடம்தான் வலிமை அதிகம் என்றும்.

அது உண்மைதான்.
பெண்களின் பங்கு என்பது உலகில் மிக முக்கியமானது.
அவர்கள் இல்லாமல் ஆண்களால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது.

இருந்தும் பெண் ஏன் அடக்கப் பட்டாள்..? ஏன் ஒடுக்கப் பட்டாள்..?

ஆதிகாலத்தில் வேட்டையாடுவதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ
மனிதர்கள் காடு மேடு கடந்து பல தூரங்களுக்குப் போக வேண்டிய நிலையும்,
போனவர்கள் அன்றே திரும்ப முடியாமல் போன இடத்திலேயே தங்க வேண்டிய நிலையும்
இருந்தன. இந்த சந்தர்ப்பங்களில் அவர்கள் தம்மை விடப் பலமான
விலங்குகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருந்தது.

இங்குதான் பெண்கள் மெதுமெதுவாக வீட்டுக்குள் ஒடுங்க வேண்டிய காரணி
உருவாகத் தொடங்கியது.

குழந்தை பிறந்திருக்கும் சமயங்களில் பெண்களில் குருதி வாடையும், பால்
வாடையும் இருக்கும். அதே போல மாதாமாதம் வெளியேறும் சூல்முட்டைகளின்
காரணமாகவும் பெண்களில் அந்த நாட்களில் குருதி வாடை இருக்கும். இந்த
வாடையை முகர்ந்தறிந்து மனிதர்களின் இருப்பிடத்தையோ அல்லது வரவையோ அறிந்து
கொள்ளும் திறன் விலங்குகளுக்கு உண்டு.

ஆரம்பத்தில் பெண்கள் ஆண்கள் என்று எல்லோரும் ஒன்றாகச் சென்று வேட்டையாடி,
ஒன்றாக உண்டு, போற போற இடங்களிலேயே குழந்தைகளைப் பெற்றெடுத்துத்தான்
வாழந்தார்கள். ஆனால் எவ்வளவு பாதுகாப்பாக ஒழிந்திருந்தும் எப்படி
விலங்குகள் தம்மைக் கண்டு பிடித்து அழிக்கின்றன என்ற ஆராய்ச்சியை அவர்கள்
மேற்கொண்ட போதுதான் இந்தக் குருதி வாடையை வைத்து விலங்குகள் தம்மை
மோப்பம் பிடிப்பதை அறிந்து கொண்டார்கள்.

அதன் பிறகுதான் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் பருவமெய்திய பெண்களையும்,
குழந்தை பெற்ற பெண்களையும் வீட்டிலே விட்டு மோப்பம் பிடித்து வரக் கூடிய
விலங்குகளால் அவர்களுக்கு எந்த வித ஆபத்துக்களும் ஏற்படாவண்ணம் காவலும்
வைத்து விட்டு மற்றவர்கள் வேட்டைக்குச் சென்றார்கள்.

இது மனிதர்கள் மத்தியில் மட்டுமல்ல. விலங்குகளிடமும் இருந்தது. மிக மிக
ஆதிகாலத்திலிருந்தே தம்மை விடப் பலமான விலங்குகளிடமிருந்து தம்மைக்
காத்துக் கொள்ள குட்டி போட்ட பெண் விலங்குகளை தமது இருப்பிடங்களில்
விட்டுப் போக வேண்டிய கட்டாயம் விலங்குகளுக்கும் இருந்தது.

இந்த விலங்குகளிடமிருந்தான பாதுகாப்புத் தேடல்தான் மெதுமெதுவாக பெண்கள்
வீட்டுக்குள் முடங்க வேண்டியதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தத் தொடங்கியது.

காலங்காலமாக இந்த நடை முறை தொடர்ந்த போது - எப்படித் தோல் நாட்டின்
சீதோசண நிலைக்கேற்ப இசைவாக்கம் பெற்றதோ அதே போல மூளையும் மெது மெதுவாக
இசைவாக்கம் பெறத் தொடங்கியது.

ஆண்களின் மூளை வேட்டைக்குப் போகும் பாதையை நினைவு படுத்தி வைப்பதிலும்
வேட்டையாடுவதிலும்............. என்று ஒரு விதமான ஒற்றைப் பாதையில்
திடமாக கூர்மையான அவதானத்துடன் நின்ற போது
பெண்களின் மூளையோ தமது குழந்தைகளைப் பாதுகாப்பதிலும், குடும்பத்தின் உள்
விடயங்களைக் கவனிப்பதிலும்........... என்று சற்றுப் பரந்து விரிந்தது.

இங்கே பாதுகாக்கும் தன்மை என்பது ஆண்களால் வெறுமனே ஒருவரை காவலுக்கு
விடுவதுடன் நின்று விட்டது. ஆனால் பெண்களிடமோ தம்மைத் தாமே பாதுகாப்பது
மட்டுமன்றி, மிக மிக அவதானத்துடன் எந்த விலங்கிடமும் தமது குழந்தையும்
பறி போய் விடாத படி தாமே பாதுகாக்கும் தன்மையும் தம்மை அண்டியுள்ள மற்றைய
பெண்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்படாத படி பாதுகாப்புக்
கொடுக்கும் தன்மையும் என்றிருந்தது. அதுவே அவர்களிடம் ஒரு குழுமமாகச்
செயற்படும் தன்மையை ஏற்படுத்தியது.

இதுவே மனிதன் விலங்குகளிலிருந்து தன்னை வேறு வழிகளில் காப்பாற்றிக்
கொள்ளக் கூடிய நிலை வந்த பின்னும் தொடர்ந்தது. தொடர்ந்து
கொண்டிருக்கிறது.

மாதவிலக்கு என்று சொல்லி பெண்ணைத் தனியாக பாதுகாப்பாக விடுவதற்கும்,
மாதவிலக்கு நாட்களில் பெண் தனியே வெளியே போனால் பேய் பிடிக்கும் என்று
சொன்னதற்குமான அடிப்படைக் காரணிகள் இவையே. அங்கே பிடிக்கப் போவது பேயல்ல,
விலங்குகள். ஆதிகாலத்தில் - அந்த நேரத்தில் விலங்குகளிடமிருந்து பெண்கள்
தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே பெண்களிடம் ஒரு பெரிய இரும்பைக்
கொடுத்து வைத்தார்கள். இங்கே இரும்பு ஒரு தற்பாதுகாப்பு ஆயுதமாகவே
இருந்தது. சில இடங்களில் உலக்கையையும் கொடுத்தார்கள்.

இன்று மாதவிலக்கான பெண்களைத் தேடி வரும் தொலைவில் விலங்குகளே இல்லை.
மிருகக்காட்சிச் சாலையில் விலங்குகளை அடைத்துக் காட்சி வைக்கும் அளவுக்கு
அவைகளை எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து விட்டு வாழ்கிறோம்.
இந்த நிலையில் ஏன் எதற்கு என்ற சிந்தனைகள் எதுவுமின்றி இன்றும் இப்படியான
அர்த்தமற்ற செயற்பாடுகள் தொடர வேண்டிய அவசியமில்லை.

ஏட்டில் எழுதிய நாம் இன்று கணினியில் எழுதுகிறோம்.
புறாவைத் தூது விட்ட நாம் மின்னஞ்சலில் அசத்துகிறோம்.
பெண்ணை மட்டும் அடங்கு என்று சொல்ல இன்னும் என்ன நாம் காட்டிலா
வாழ்கிறோம். அல்லது எம்மைச் சுற்றி விலங்குகளா நடமாடுகின்றன.
காட்டு வாழ்க்கையை விட்டு நாட்டில் வீடு கட்டி பாதுகாப்பாக வாழும்
நிலைக்கு நாம் என்றைக்கோ வந்து விட்டோம்.

இருந்தும் மூளையில் பதியப் பட்ட அடிப்படையான ஆதிகாலப் பிரச்சனையை
கருத்தில் கூடக் கொள்ளாமல் இன்னும் பெண்கள் வீட்டுக்குள் ஒடுங்க
வேண்டியவர்கள்தான் எனக் கண்மூடித்தனமாக் கருதுகிறோம்.
அன்று சூழல்நிலை கருதி - பாதுகாப்புக் கருதி குழந்தை பெற்ற பெண்கள்...
வீட்டினுள் தங்கினார்கள் என்றால், இன்று அந்த எந்தக் காரணங்களும்
இல்லாமலே பெண்கள் வீட்டுக்குள் அடங்க வேண்டுமென நினைக்கிறோம்.

உண்மையில் ஒரு ஆணை விட ஒரு பெண்ணால்தான் ஒரு வியாபார ஸ்தலத்தையோ, அல்லது
ஒரு பெரிய நிறுவனத்தையோ கூட்டாகக் கொண்டு நடத்தி கூடுதலாக வெற்றி பெற
வைக்க முடியும். ஒரு சொல்லை ஒரு ஆணிடம் சொன்னால் - அவனால் அந்தச்
சொல்லுக்கு ஒரு அர்த்தம்தான் கண்டு பிடிக்க முடியும் என்றால் அதையே ஒரு
பெண்ணிடம் சொன்னால் அவள் அது பற்றி நன்கு யோசித்து பல கோணத்தில் பல
அர்த்தங்கள் கண்டு பிடிப்பாள்.
ஓரு விடயத்தைச் சொன்னால் அதைக் கிரகித்து அதற்குப் பதில் சொல்லும் தன்மை
ஆண்களின் மூளையில் ஒரு பங்கு என்றால் அதைக் கிரகித்து பதில் சொல்லும்
தன்மை பெண்களின் மூளையில் ஆறு பங்கு. இவைகள் ஆய்வாளர்களின் கண்டு
பிடிப்புகள்.

ஓரு ஆணின் மூளை ஓரு பெண்ணின்; மூளையை விட 130கிராம் நிறை அதிகமானது.
ஆனால் இரு மூளைகளினதும் செயற்பாடுகள் - ஆதிகாலத்திலிருந்து இன்றைக்கு
வரைக்குமான சூழ்நிலைகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்குமேற்ப இசைவாக்கம்
பெற்று வௌ;வேறு வழிகளில் செயற் படுகின்றன. இங்கு ஆண் உசத்தி என்றோ பெண்
உசத்தி என்றோ எதுவும் இல்லை.

அன்றைய காலத்தில் தேவை கருதி வீட்டுக்குள் இருந்த பெண்களிடமிருந்து
மெதுமெதுவாக சுகங்களை அனுபவிக்கத் தொடங்கிய ஆண்கள் ஒரு காலகட்டத்தில்
பெண்களை வெறும் சுகபோகப் பொருட்களாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார்கள்.
சுயநலம் கருதி உளவியல் ரீதியான தாக்கத்தைக் கொடுத்து பெண்களை அடிமைப்
படுத்தியும் விட்டார்கள். இதனால் வீட்டுக்குள்ளேயே இருந்து இருந்து
இசைவாக்கம் பெற்ற மூளையிடமிருந்து விடுதலை பெற முடியாத பெண்கள் - தாம்
வீட்டுக்குள் முடங்க வேண்டியவர்கள்தான் என்று நினைத்து விட்டார்கள்.
அடங்கி அடங்கியே வாழ்ந்ததால் தாம் அடங்க வேண்டியவர்கள்தான் என நினைத்து
தமக்குத் தாமே விலங்கிட்டு அடங்கியும் விட்டார்கள்.

இதே நேரம் இவையெல்லாம் பிழை. முன்னர் நாம் வீட்டுக்குள் முடங்க
வேண்டியதற்கு காரணங்கள் இருந்தன. இன்று வெளியே சென்றாலும் எம்மால்
எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். என்று சில பெண்கள் சிந்திக்கவும்
தவறவில்லை. சிந்திக்கத் தொடங்கிய இப் பெண்களின் விழிப்பு நிலையே இன்று
சில ஆண்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. பெண்களிடம் ஏற்பட்ட இந்த
மாற்றத்தை ஆண்களின் மூளை ஏற்றுக் கொள்ள முடியாமல் திண்டாடுகிறது.

இந்த உண்மைக் காரணங்களை ஆண் பெண் இருபாலாரும் உணர்ந்து செயற்படும்
பட்சத்தில் இந்தப் பெண்ணடிமை, பெண்அடக்குமுறை, பெண்ணை இரண்டாந்தரப்
பிரஜையாக எண்ணும் தன்மை எல்லாமே அர்த்தமற்ற செயல்கள் என்பது நன்கு
புலப்படும்.

இப்போது கூட உங்கள் மனதில் எங்கே பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள் என்ற
கேள்வி எழலாம். அவர்கள் சுதந்திரமாகத்தானே திரிகிறார்கள் என்ற சிந்தனை
ஓடலாம். ஆயுதந் தூக்கிப் போரிடுகிறார்கள் என்ற பிரமிப்பு ஏற்படலாம்.
இத்தனை சலுகைகள் கொடுத்து விட்டோமே..! இன்னுமா திருப்தியில்லை என்ற
எரிச்சல் எழலாம்.

உண்மையில் பெண்ணுக்கு இன்னும் முழுமையான விடுதலை கிடைக்கவில்லை. வெறும்
சலுகை மட்டும் வாழ்க்கையில்லை. அவள் சுயம் பேணப்பட வேண்டும். அவள் சுயமாக
இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டு
மென்று சமூகத்தின் அடி மனதில் எழுதி வைக்கப் பட்ட சில எழுதாத சட்டங்கள்
அழித்தொழிக்கப் படவேண்டும். அவள் அவளாக வாழ அவள் மனதில் தைரியம்
வரவேண்டும். இது பற்றியதான சிந்தனை சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரிடமும்
எழ வேண்டும்.

கருப்பையில் மூன்று மாதக் கருவாக இருக்கும் போதே ஒரு குழந்தை தாயின்
உணர்வுகள், தாயைச் சுற்றி ஒலிக்கும் குரல்கள்.. என்று எல்லாவற்றையும்
கிரகிக்கத் தொடங்கி விடும். வெளியில் கேட்கும் சினிமாப் பாடலைக் கூட
மனப்பாடம் செய்யத் தொடங்கிவிடும். இது இன்றைய ஆய்வாளர்களின் கண்டு
பிடிப்பு.

இதன் விளைவுகளை பெற்றோர்கள் சரியான முறையில் சிந்தித்து ஒரு பெண் தாயாகத்
தொடங்கியதிலிருந்தே ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் இதை கருவுக்குள்
உருவெடுத்திருக்கும் எமது பிள்ளையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது
என்ற எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். பிறந்த பின்னும் குழந்தைகள்
வளர்ந்து கொண்டிருக்கும் போதே ஒவ்வொரு விடயத்திலும்; ஆண் குழந்தை பெண்
குழுந்தை என்ற பேதமின்றி பாரபட்சமின்றி அவர்களை வளர்க்க வேண்டும்.
அவர்கள் முன் பேசுவது கூட நான் ஆண் என்றோ, அல்லது நான் பெண் என்றோ எந்த
விதமான தாழ்வு மனப் பான்மையையும் அவர்கள் மனதில் விதைக்கப் படாத விதமாக
இருக்க வேண்டும்.

இப்படியான அவதானம் மிகுந்த செயற்பாடுகள் மனித மூளையில் ஆழப்
பதிந்திருக்கும் பெண் அடங்க வேண்டியவள்தான் என்ற உள்ளுணர்வை அழித்தொழிக்க
ஏதுவாக அமையும்.

காலப்போக்கில் ஆண்களின் மூளையும் இந்த நடைமுறையுடன் இசைவாக்கம் பெற்று
விடும். அப்போதெல்லாம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளில் ஆண் பெண் மூளை
பற்றியதான முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கும்.

ஒரு அவுன்ஸ் ஐம்பது டாலர்

மேற்கத்திய தெருமுனை ஒன்றில் ஒரு அவுன்ஸ் தங்கத்தை 50 டாலருக்கு விற்க
முயன்றிருக்கிறார் ஒரு நபர். (வீடியோ இங்கே). யாரும் வாங்குவதற்கில்லை.
ஏனெனில் அவர்களுக்கு தங்கத்தைப்பற்றி தெரிந்தது அவ்வளவு தான். காஸ்ட்லி
பிராண்டுகளையெல்லாம் தெரியும். பார்த்த மாத்திரத்திலேயே அதன் விலையையும்
சொல்லுவார்கள் ஆனால் தங்கம் போகும் போக்கை அவர்கள் உணர்ந்ததில்லை
உண்மையில் இன்றைக்கு தங்கத்தின் விலை அவுன்சுக்கு டாலர் 1120க்கும் மேல்
போகும்.

போட்டி போட்டுக்கொண்டு Dow-வை முந்தி தங்கம் போய்க்கொண்டிருக்கின்றது.
காகித பணத்திலுள்ள நம்பிக்கை கம்மியாகும் போதெல்லாம் மக்கள் இப்படி
தங்கத்தின் மேல் பாரத்தை போடுவது வழக்கம். இக்காலங்களில் காகிதப்பணத்தின்
மேல் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை ரொம்பவே அற்றுப்போயிருக்கின்றது.
இப்படித்தான் பொருளாதாரத்தில் மெத்தப்படித்த நம் பிரதமருக்கும்
தோன்றியிருக்கும் போலும். அவரே அதை பிரதிபலிப்பது போல சைலண்டாக 200 டன்
தங்கத்தை IMF இடம் இருந்து வாங்கச்சொல்லிவிட்டார். இந்திய ரெசர்வ் வங்கி
அதை அவுன்சுக்கு $1,045 கொடுத்து வாங்கியிருக்கின்றது. அதாவது ஏறக்குறைய
$6.7 பில்லியன் டாலர் தாள்கள் ஒரே நாளில் தங்கமாக
மாற்றப்பட்டிருக்கின்றது. பொதுவாக ரெசர்வ் வங்கிகள் தங்கத்தை விற்பதுதான்
வழக்கம். இப்போது பல ரெசர்வ் வங்கிகளும் தங்கத்தை போட்டி போட்டுக்கொண்டு
வாங்கி குவித்துக் கொண்டுள்ளனர். எல்லாம் டாலர் போன்ற காகித பணத்தின்
மீது மக்கள் நம்பிக்கை இழப்பது தான் காரணம். இதனால் சராசரி ஜனம் தங்கம்
வாங்க தவிக்கவேண்டியுள்ளது. பெரிதும் அவதிக்குள்ளாவது நம்மூர் ஜனங்கள்
தான். வேண்டினாலும் வேண்டும் சுத்த தங்கமல்லோ நமக்கு வேண்டும். 1931-ல்
பிரிட்டனும் 1971-ல் அமெரிக்காவும் Gold Standard-ஐ விட்டு விலக
பொன்பாளங்களுக்கு நல்லக்காலம் துவங்கியது. கரன்சிகளோ காற்றில் பறக்கத்
துவங்கின. ஒரு கணக்கீடுபடி இந்தியா 757.7 டன் தங்கபாளங்கள்
வைத்திருப்பதாக சொல்கின்றார்கள். எங்கே ஒளித்து வைத்திருக்கின்றார்கள் என
தெரியவில்லை.மும்பையிலாயிருக்கும்.

நியூயார்க் மன்காட்டனின் வால்ஸ்டிரீட் பக்கமாய் பலமுறை நடந்து
போயிருக்கின்றேன். ஆனால் 5,000 டன் தங்க கட்டிகள் மேலே நான்
நடந்திருக்கிறேன் என்பதை நான் உணர்ந்ததில்லை. அங்கே சப்வேக்கும் கீழே 30
அடியில் நிலத்தடி பங்கர்அறைகளில் இந்த 540,000 தங்க கட்டிகளை பாதுகாத்து
வைத்துள்ளார்களாம் சுற்றிலும் பாறைகள் வெளி காற்று, நீர் உள்ளே புகா
அறைகள். இங்கிருக்கும் தங்கம் முழுவதும் அமெரிக்காவுக்கு சொந்தமானதல்ல.
உலகின் பல்வேறு நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் சொந்தமானது. பத்திரமாக
இருக்கட்டுமேனு இங்கே வைத்துவைத்திருக்கின்றார்கள். என்ன நம்பிக்கையிலோ?
தெரியவில்லை உலகின் 25% தங்கம் இங்கு தான் உள்ளதாம். இதில் வெறும் 5
சதவீதம் தான் அமெரிக்க அரசுக்கு சொந்தமானது. அமெரிக்காவின் மொத்த 8,133.5
டன் தங்க இருப்பில் மிச்ச 4,603 டன் தங்கம் இருக்கும் இடம்
கென்டகியிலுள்ள Fort Knox.(மேலே படம் பிசியான சென்ட்ரல் லண்டன் Old Lady
of Threadneedle Street-ன் நிலத்தடியேயுள்ள Bank of England-ன் தங்க அறை.
நீங்கள் பார்ப்பது வெறும் 15,000 தங்க கட்டிகள் அதாவது 210 டன் தங்கம்
தான். அங்கே மொத்தம் 4,600 டன் தங்கம் உள்ளதாம்)

புரட்டும் வடிவில் மென்புத்தகங்கள்

மென்புத்தகங்களை Pdf வடிவில் படிக்கும் போது சீக்கிரமே அலுப்பு
தட்டிவிடுகின்றது. சிலர் மென்புத்தகங்களை சேகரிப்பதோடு சரி. வாசிப்பது
என்னமோ அபூர்வம் தான்.சிலர் மென்புத்தகங்களை அதிக ஆர்வமாய் வாசிக்க
விழையும் போது அதை வீட்டு பிரிண்டரிலேயே அச்சிட்டு படிக்க முயல்வதும்
உண்டு. அதிவேக லேசர் பிரிண்டர்கள் தாம் இப்போது வீடுகளுக்கு கூட கைகூடும்
விலைக்கு வந்துவிட்டதே. ஆனாலும் சில டெவலபர்கள் மென்புத்தகங்களை
மென்புத்தகவடிவிலேயே நம்மை படிக்க செய்ய
போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அதில் ஒன்று தான் அதை புரட்டும்
புத்தகவடிவிலே தருவது.http://www.scribd.com போலல்லாது
http://issuu.com-ல் ஏற்றம் செய்யப்படும் மென்புத்தகங்களை நீங்கள்
புரட்டும் வடிவிலேயே அதாவது சாதாரண காகிதபுத்தகங்களை எப்படி புரட்டுவோமோ
அதே புரட்டும் எஃபக்டில் படிக்கலாம். உதாரணத்துக்கு இங்கே ஒரு தமிழ்
மென்புத்தகத்தை பாருங்கள்.
http://issuu.com/siva_asokan/docs/englishtotamildictionary

இது போன்ற வழங்கல் நம்மை மேலும் படிக்க தூண்டுவதாக உள்ளது. ஆனாலும்
எல்லாம் இணைய இணைப்பு இருக்கும் வரை மட்டும் தான். இணைய இணைப்பு இல்லாத
போதும் உங்கள் புத்தகங்களை இதே "எஃபக்டில்" படிக்க நீங்கள்
http://www.spotbit.com/ தளத்தை அணுகலாம். இவர்கள் நீங்கள் கொடுக்கும்
மென்புத்தகத்தை .exe வடிவில் மாற்றி உங்களுக்கு தர அதை எப்போது
வேண்டுமானாலும் நீங்கள் படிக்கலாம். இணைய இணைப்பு இல்லாத போதும்
படிக்கலாம்.

இணையத்தில் எங்கும் அப்லோடு செய்யாமலே என்னிடம் இருக்கும் pdf கோப்புகளை
புரட்டும் புத்தகவடிவில் காட்ட எதாவது மென்பொருள் இருக்கிறதாவென
தேடியதில் POKAT reader கிடைத்தது. இதை இறக்கம் செய்து உங்கள் கணிணியில்
நிறுவிவிட்டால் உங்கள் கணிணியில் உள்ள எல்லா pdf கோப்புகளையும் அது
புரட்டும் புத்தகவடிவில் காட்டும். நீங்கள் படிக்கும் pdf
புத்தகங்களையெல்லாம் ஒன்றாக சேர்த்து அது தனியாக ஒரு மென்நூல் நூலகம்
ஒன்றையும் பராமரிக்குமாம்.
Download Free POKAT reader

மென்புத்தகங்களை படிக்க இனி தனி ஆர்வமே வரும் போல தெரிகின்றது. பார்க்கலாம்.

Friday, October 16, 2009

Happy Dewalli

dewali.jpg
Thanks and Regards
Arumugam. D


Yahoo! India has a new look. Take a sneak peek.

Thursday, July 30, 2009

♥ ட்ரைவ் ஒன்றை மறைப்பது எப்படி? ♥


முக்கியமான தகவல்களை ஏனையோர் அணுகாமல் பாதுகாக்க விரும்புவோர்க்கு இது மிகவும் பயனுள்ள ஒரு குறிப்பு விண்டோஸ் இயங்கு தளத்தில் போல்டர்களை மறைத்து (Hide) வைக்கும் முறையை நீங்கள் அறிந்திருக்கலாம். போல்டர்களை மறைத்து வைப்பது போன்று கணினியிலுள்ள டரைவ்களையும் மறைத்து வைக்க முடியும். விண்டோஸில் இயங்கு தளம் மூலம் கணினியிலுள்ள எந்த ஒரு ட்ரைவையும் அடுத்த பயனர்களின் பார்வையிலிருந்து மறைத்து விடலாம். இதன் மூலம் உங்கள் அந்தரங்க தகவல்களுக்கு ஒரு பாதுகாப்புக கிடைக்கிறது. ஒரே நேரத்தில் எல்லா ட்ரைவ்களையுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரமோ மறைத்து வைக்கலாம். அதற்கு நீங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றத்தைச் செய்து விட்டால் போதுமானது.
முதலில் விண்டோஸில் அட்மினிஸ்ட்ரேட்டராக லொக்-ஓன் செய்து கொள்ளுங்கள். அடுத்து ரன் (Run) பொக்ஸில் regedit என டைப் செய்து ஓகே சொல்லுங்கள். திறக்கும் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவில் கீழே காட்டப்பட்டுள்ள இடத்தை அணுகுங்கள்.
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion \Policies\Explorer
இங்கு இறுதியாக Explorer ல் க்ளிக் செய்யுங்கள். அடுத்து விண்டோவின் வலப்புறம் ரைட் க்ளிக் செய்து புதிதாக NoDrives எனும் பெயரில் DWORD பெறுனமானத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். கணினியிலுள்ள ட்ரைவ் அனைத்தையும் மறைப்பதாயின் அதன் Value Data வாக 3FFFFFF எனும் பெறுமானத்தை வழங்குங்கள்.
அதேபோன்று குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரம் மறைப்பதாயின் அதாவது A, B, C, D, E, F, G, H என ஆங்கில் எழுத்துக்கள் மூலம் குறிக்கப்படும் ட்ரைவ்களை மறைக்க 2, 4, 8, 16, 32, 64, 128 எனும் ஒழுங்கில் வழங்குங்கள். உதாரணமாக F ட்ரைவை மறைத்து வைக்க வேண்டுமாயின் 32 எனும் இலக்கத்தை Value Data வாக வழங்க வேண்டும்.
அடுத்து ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவை மூடி விட்டு கணினியை மறுபடி இயக்க நீங்கள் மறைத்து வைத்த ட்ரைவை மை கம்பியூடர் விண்டோவில் பார்க்க முடியாது. மீண்டும் அதனைக் காண்பிக்க வேண்டுமானால் மேற் சொன்ன இதே வழியில் சென்று புதிதாக உருவாக்கிய DWORD பெறுமானத்தை அழித்து விட்டு கணினியை மறுபடி இயக்க வேண்டும்.http://tamilsoftwaredownload.blogspot.com/2009/07/blog-post_01.html

நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா? அறிவது எப்படி?

நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு / நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு, அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறீர்கள். குறைந்த பட்சம், அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா இல்லையா என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்குமே!
நீங்கள் அனுப்பிய மெயிலை உங்கள் நண்பர் படித்து விட்டாரா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள, spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது. செய்முறை விளக்கம்:
1). முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து, தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
2). இப்போது, www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள்.
அங்கு, உங்கள் முகவரி, உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள். Step 3 -ல் முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, "Click to Activate my Spypig" என்பதைச் சொடுக்குங்க. (அப்படி செய்தால், நீங்கள் ட்ராக் செய்கிறீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.)
3). இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது சுட்டியை வைத்து, வலது பொத்தானை சொடுக்கி, "Copy Image" (Firefox) & Copy(IE) சொடுக்கி, copy செய்யவும்.
இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து, அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி, உடனே மெயிலை அனுப்பி விடுங்கள்.
(கவுண்ட் டவுன் டைமர் ஓடும், அந்த ஒரு நிமிடத்திற்குள் மேலே கூறியதைச் செய்ய வேண்டும்.) அவ்வளவு தான்.நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன், எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும். செஞ்சு பாருங்க, சந்தேகம் என்றால் கேளுங்க.

Wednesday, July 29, 2009

நமது புகைப்படத்தை அசையும் படமாக மாற்ற

♥ நமது புகைப்படத்தை அசையும் படமாக மாற்ற ..♥

நமது புகைப்படங்களை வெளிநாட்டு சூழ்நிலையில் வெளியிட்டு ஏற்கனவே பார்த்தோம்.
மாறிவரும் காலத்திற்கு ஏற்ப தற்போது நமது புகைப்படத்தையே அசையும்
வகையில் வடிவமைத்துள்ளார்கள். அதன் முகவரி தளம் செல்ல இங்கு
கிளிக் செய்யவும். உங்களுக்கு அதன் தளம் ஓப்பன் ஆகும். அதில் உள்ள படங்களில் வீடியோ சிம்பல் போட்டுள்ள படத்தை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு வேறு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள்
மாற்றவிரும்பும் படத்தை அதில் பதிவேற்றவும். சில நிமிடங்கள் காத்திருங்கள். உங்கள் படமானது தயார் ஆகி உங்களுக்கு கிடைக்கும். அதனை நீங்கள் உங்கள் கணிணியில் வேண்டிய இடத்தில் சேமித்துக் கொள்ளலாம்.

உங்கள் கம்ப்யூட்டர் தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா?..


ரீஸ்டார்ட் ஆகும் கம்ப்யூட்டர்கம்பம் என்ற ஊரிலிருந்து ஒரு வாசகர் தன் கம்ப்யூட்டர் அடிக்கடி தானாக ரீஸ்டார்ட் ஆவதாகக் குறிப்பிட்டு எழுதி அவரே பல நிலைகளில் கம்ப்யூட்டரைச் சோதனையிட்டுப் பார்த்தும் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறி இருந்தார். வழக்கமாக நாம் எண்ணும் காரணங்களுடன் அவர் எழுதிய காரணங்களும் சரியாகவும் புதுமையாகவும் இருந்தன. இது போன்ற பிரச்சினை குறித்த கடிதங்கள் அதிகம் வருவதால் அந்த காரணங்கள் அனைத்தையும் வாசகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இங்கு பட்டியலிடப்படுகின்றன.1. உங்கள் கம்ப்யூட்டர், இயக்கத்தில் சூடு அடைகிறது. ஏர் கண்டிஷனர் குளிரில் இருந்தாலும் உள்ளே சூடு உருவாகிக் கொண்டு தான் இருக்கும். அந்த சூட்டின் நிலை 60 டிகிரி செல்சியஸைத் தொடுகையில் கம்ப்யூட்டரின் சிபியு தானாக ரீஸ்டார்ட் ஆகும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும். எதனால் சூடு ஏற்படுகிறது? கம்ப்யூட்டரில் உள்ள டிஜிட்டல் சாதனங்கள் அப்படிப்பட்டவையே. அவை இயங்கும் போது நிச்சயம் வெப்ப ஆவி உருவாகி வெளியே வருகிறது. அதனால் தான் ப்ராசசர் சிப் மேலாக ஒன்றும் கேபினட் உள்ளாக ஒன்றும் என மின்விசிறிகள் அமைக்கப்பட்டு அவை அந்த வெப்பத்தை வெளியேற்றுகின்றன.மேலும் இப்போதெல்லாம் இயக்கப்படும் புரோகிராம்கள் பெரிய அளவில் ப்ராசசரின் சக்தியை உறிஞ்சும் வகையில் உள்ளதால் சூடு அதிகம் உருவாகும் நிலை ஏற்படுகிறது. எடுத்துக் காட்டாக ஐ–ட்யூன்ஸ் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற வீடியோ ஆடியோ புரோகிராம்கள் அதிக சக்தியைப் பயன்படுத்துகின்றன. அதே போல் பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தினாலும் இந்த பிரச்சினை வரும். அடுத்ததாக அளவுக்கதிகமாக கம்ப்யூட்டர் கேபினுள் சேரும் தூசியும் சூடு வெளியாவதைத் தடுக்கும். சூட்டை வெளித் தள்ளும் மின்விசிறிகள் சரியான அளவில் இயங்குவதைத் தடுக்கும். இவற்றை அவ்வப்போது நீக்க வேண்டும். கேபினைத் திறந்து தூசியை வெளியே எடுக்கும் சாதனம் கொண்டு கேபினைச் சுத்தம் செய்திட வேண்டும்.சூடு அதிகமாவதெல்லாம் என் கம்ப்யூட்டரில் இல்லை; இருந்தாலும் ரீ ஸ்டார்ட் ஆகிறது என்றால் அடுத்தபடியாக உங்கள் கம்ப்யூட்டரின் மெமரியைச் சோதனை செய்திட வேண்டும். உங்கள் ப்ராசசர் ராம் மெமரியின் சேதமடைந்த இடத்தில் உள்ள டேட்டாவினைப் பெற முயன்று தோற்றால் கம்ப்யூட்டர் உடனே ரீஸ்டார்ட் ஆகத் தொடங்கும். இதனைக் கண்டறிய உங்கள் ராம் மெமரி ஸ்டிக்குகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தால் எந்த ஸ்டிக்கில் பிரச்சினை உள்ளது என்று தெரியவரும். அதனை மட்டும் மாற்றலாம்.இதுவும் சரியாக உள்ளது என்று தெரிய வந்தால் கம்ப்யூட்டரில் உள்ள செட்டிங் ஒன்றை மாற்றினால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சிஸ்டம் எர்ரர் ஏதேனும் ஏற்பட்டால் உடனே ரீஸ்டார்ட் செய்யும்படி அமைக்கப்பட்டிருக்கும். அந்த ஆப்ஷனை ஆப் செய்துவிட்டால் இந்த பிரச்சினை தீரும். இதனை மேற்கொள்ள Start, Control Panel என்று சென்று Performance and Maintenance என உள்ளதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள System லிங்க்கில் கிளிக் செய்து பின் Advanced டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள Startup and Recovery செக்ஷனில் Settings பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் "Automatically Restart," என்று தரப்பட்டு அதன் அருகே தரப்பட்டுள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தின் மீது கிளிக் செய்து அதனை எடுத்துவிடவும். இது System Failure பிரிவில் இருக்கும். பின் ஓகே கிளிக் செய்து அனைத்து விண்டோக்களை மூடவும். இனி உங்கள் கம்ப்யூட் டர் எர்ரர் ஏற்படுவதனால் ரீஸ்டார்ட் ஆகாது.இந்த செட்டிங்கை விண்டோ விஸ்டாவில் எப்படி செயல்படுத்துவது என்று பார்க்கலாம். Start>Control Panel சென்று "System" என்பதில் கிளிக் செய்திடவும். (இதனைப் பெற நீங்கள் கிளாசிக் வியூவில் இருக்க வேண்டும்) இந்த விண்டோவில் "Advanced System Settings" என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில் "Startup and Recovery" என்பதன் கீழ் பார்க்கவும். இங்கு "Settings" பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் "Automatically Restart" என்பதன் கீழாக என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.அநேகமாக மேலே சொன்னவற்றில் இந்த ரீஸ்டார்ட் பிரச்சினை தீர்ந்துவிடும். இருப்பினும் நன்மையும் தீமையும் பிறர் தர வரா என்ற பழமொழிக்கு ஏற்ப நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் அண்மையில் என்ன செய்தீர்கள் என்று பார்க்கவும். ஏதேனும் ஒரு புதிய சாப்ட்வேர் தொகுப்பு ஒன்றை நிறுவியிருக்கலாம். அல்லது ஹார்ட்வேர் சாதனம் ஒன்றை இணைத்திருக்கலாம். அப்படியானால், அதனை நீக்கிப் பார்க்கவும். பிரச்சினை தொடர்கிறதா என்று கவனிக்கவும். மீண்டும் பிரச்சினை இருந்தால் இணைத்த ஹார்ட்வேர் சாதனத்திற்கான புதிய டிரைவர் தொகுப்பினை அதனைத் தயாரித்து வழங்கிய நிறுவனத்தின் தளத்திலிருந்து இறக்கிப் பதியவும்.இந்த ரீஸ்டார்ட் பிரச்சினை ஏதேனும் வைரஸ் அல்லது ஸ்பைவேர் தொகுப்பினாலும் ஏற்பட 100 சதவிகித வாய்ப்புண்டு. எனவே நீங்களாகக் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து அண்மையில் அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை ஸ்பைவேர் கண்டறியும் தொகுப்பினையும் இயக்கிப் பார்க்கவும். அடுத்ததாக கண்ட்ரோல் பேனல் சென்று அதில் உள்ள ஆட்/ரிமூவ் புரோகிராம் பிரிவிற்கான ஐகானில் கிளிக் செய்து உங்களுக்குத் தற்சமயம் தேவையில்லாத புரோகிராம்களை நீக்கவும். தேவையற்ற புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்வதும் ரீஸ்டார்ட் பிரச்சினைக்கு ஒரு மருந்தே.உங்களுக்குப் பிடித்தமான வீடியோவினைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இசையைக் கேட்டுக் கொண்டிருக்கையில், நண்பருடன் சேட்டிங் செய்து கொண்டிருக்கையில், பிரியமான கடிதத்தினைத் தயார் செய்து கொண்டிருக்கையில் கம்ப்யூட்டர் தானாக ரீஸ்டார்ட் செய்தால் நிச்சயம் என்ன கொடுமைடா என்று எண்ணத் தோன்றும். எனவே மேலே குறிப்பிட்ட வழிகளை ஒவ்வொன்றாகச் செயல்படுத்திப் பார்த்து பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுவே புத்திசாலித்தனம்

Tuesday, July 28, 2009

♥ எந்த வகை கோப்பானாலும் வேறு பார்மெட்டுக்கு மற்ற....! ♥

நீங்கள் வைத்திருக்கும் எந்த வகை கோப்பானாலும் இந்த தளத்தில் தரவேற்றினால் போதும் உங்களுக்க் எந்த பார்மெட்டில் வேண்டுமானலும் பெற்றுக் கொள்ளலாம்.சுட்டி http://www.convertfiles.com/இது மட்டுமில்லை யூட்யுபில் இருந்து கோப்புகளின் URL மட்டும் காப்பி செய்து பேஸ்ட் செய்தால் போதும் உங்களுக்கு தேவையான கோப்புகளாக தரவிறக்கி கொள்ளலாம்.மற்ற தளங்களில் தரவேற்றினால் கோப்புகள் வெறும் 24 மணி நேரங்கள் மட்டும் வைத்து இருப்பர் இந்த தளத்தில் 7 நாட்கள் வைத்திருந்து நமக்கு கொடுக்கின்றனர்.இந்த தளம் மூலம் எந்தெந்த வகை கோப்புகளை தரவேற்றி நமக்கு தேவையான கோப்புகளாக பெற முடியும் என்று ஆங்கிலத்தில் பார்ப்போம்.
ARCHIVERAR to TAR, ZIP, TGZ, TAR.GZTAR to RAR, ZIP, TGZ, TAR.GZTGZ to TAR,
RAR, ZIPTAR.GZ to TAR, RAR, ZIPZIP to TAR, RAR, TGZ, TAR.GZDOCUMENTDOCX to DOC, ODT, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIPDOC to ODT, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIPODT to DOC, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIPRTF to ODT, DOC, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIPSXW to ODT, RTF, DOC, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIPTXT to ODT, RTF, SWX, DOC, HTML, XHTML, PDF, PDB, ZIPODS to xls, CSV, RTF, PDF, HTML, ZIPXLS to ODS, CSV, PDF, HTML, ZIPXLSX to XLS, ODS, CSV, PDF, HTML, ZIPPRESENTATIONODP to PPT, PDF, SWFPPT to ODP, PDF, SWFIMAGEBMP to GIF, JPG, PNG, TIF, ZIP, PDFGIF to BMP, JPG, PNG, TIF, PDFJPG to GIF, BMP, PNG, TIF, PDFPNG to GIF, JPG, BMP, TIF, PDFTIF to GIF, JPG, PNG, BMP, ZIP, PDFAUDIOAAC to WAV, MP3, OGG, M4A, FLAC, AU, WMA, AMRAMR to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AU, M4AAU to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AMR, M4AFLAC to WAV, MP3, OGG, M4A, AAC, AU, WMA, AMRM4A to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AU, AMRMP3 to WAV, OGG, AAC, M4A, FLAC, AU, WMA, AMROGG to WAV, MP3, AAC, M4A, FLAC, AU, WMA, AMRWAV to MP3, OGG, AAC, M4A, FLAC, AU, WMA, AMRWMA to WAV, MP3, OGG, M4A, AAC, FLAC, AU, AMRMKA to WAV, MP3, OGG, M4A, AAC, FLAC, AU, AMR, WMAVIDEO3GP to AVI, MOV, WMV, M4VASF to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MOV, AVI, M4VAVI to 3GP, FLV, MP4, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4VFLV to 3GP, AVI, MP4, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4VMKV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MOV, ASF, M4VMOV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MKV, ASF, M4VM4V to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, WMVMP4 to FLV, 3GP, AVI, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4VMPEG to AVI, 3GP, MP4, FLV, VOB, WMV, MOV, MKV, ASF, M4VMPG to AVI, 3GP, MP4, FLV, VOB, WMV, MOV, MKV, ASF, M4VVOB to 3GP, FLV, MP4, MPEG, AVI, WMV, MOV, MKV, ASF, M4VWMV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4VOTHEREPS to GIF, JPG, PNGPSD to GIF, JPG, PNG

உங்களுக்கு பிடித்த MP3 பாடல்களை கேட்க முடியவில்லையா?


இலவச சிடி ரிப்பர்



கம்ப்யூட்டரில் மட்டுமின்றி தனியாகவும் வைத்து இயக்கும் எம்பி3 பிளேயர்கள் தற்சமயம் அதிக அளவில் விற்பனையாகிப் பயன்படுத் தப்பட்டு வருகின்றன. ஆனால் நமக்குப் பிடித்த அனைத்து பாடல்களையும் நாம் இந்த பிளேயர்களில் கேட்க முடிவதில் லை. ஏனென்றால் அவை எம்பி3 பார்மட்டில் இல்லை என்பதே காரணமாகும். சிடியில் பதிந்து கிடைக்கும் இந்த பாடல்கள் நம் மனதை மயக்கு கின்றன. ஆனால் பிளேயருக்கு மடங்க மறுக் கின்றன. என்ன செய்யலாம்? எப்படி சிடியில் உள்ள பாடல் களை எம்பி3 பார்மட்டில் கொண்டு வருவது என்று பார்க்கையில் இணையத்தில் உள்ள ஒரு இலவச புரோகிராம் கண்களில் பட்டது. அது சிடி ரிப்பர் (CD Ripper) என்னும் புரோகிராம் ஆகும். இதனை வைத்துக் கொண்டு எப்படி இந்த பார்மட் மாற்றத்தினைக் கொண்டு வரலாம் என்று பார்க்கலாம்.

முதலில் http://www.download.com/FreeCDRipper/30002140_410396883.html என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து சிஸ்டத்தில் இன்ஸ்டால் செய்திடவும்.பின் இந்த புரோகிராமினை இயக்குங்கள். அதன்பின் முதலில் எந்த டிரைவில் இந்த புரோகிராம் உங்கள் மியூசிக் பைல்களை ஸ்டோர் செய்திட வேண்டும் என்பதனை முடிவு செய்து கொள்ளவும். இதற்கு மேலே இருக்கும் Options என்ற டேப்பில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Save and Filename என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு இருக்கும் போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். அல்லது உருவாக்கி அதனை உங்கள் தேர்வாக செலக்ட் செய்திடுங்கள். இதனை ஒரு முறை செய்தால் போதும். அதுவும் சிடி ரிப்பர் புரோகிராமினை இன்ஸ்டால் செய்தவுடன் செய்தால் போதும். இனி கம்ப்யூட்டரில் உள்ள சிடி டிரைவில் எந்த சிடியிலிருந்து பாடல்களைப் பெற்று எம்பி3 பார்மட்டிற்கு மாற்ற வேண்டுமோ அந்த சிடியினைச் செருகவும். சிடியினைச் செருகியவுடன், மேலே தரப்பட்டிருக்கும் டிவைஸ் மெனுவிலிருந்து உங்கள் சிடி டிரைவைத் தேர்ந்தெடுக்கவும்.பின் வலது புறம் உள்ள Output Format பாக்ஸில் MP3 என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் சிடி ரிப்பர் விண்டோவின் கீழாக உள்ள “டி” என்பதில் கிளிக் செய்திடவும். இதனால் பாடல்களின் ஆர்ட்டிஸ்ட் பெயர் முதலாக அனைத்து தகவல்களும் பதியப்படும். அடுத்து Extract என்பதில் கிளிக் செய்தால் அனைத்து பாடல்களும் எம்பி3 பார்மட்டில் மாற்றப்பட்டு கிடைக்கும். பின் இந்த எம்பி3 பாடல்களை உங்கள் மீடியா பிளேயருக்கு மாற்றி செல்லுமிட மெல்லாம் இசைக்க வைத்து ரசிக்கலாம்.

யு–ட்யூப் வீடியோகளை ஐ பாட் சாதனத்திற்கு மாற்ற...!


யு–ட்யூப் வீடியோ காட்சிகளை என் ஐ பாட் சாதனத்திற்கு டவுண்லோட் செய்து காண விரும்புகிறேன். ஆனால் பார்மட் பிரச்சினை ஏற்படுகிறது. எம்பி 4 பார்மட்டில் வேண்டும். இதற்குத் தீர்வு தரும் புரோகிராம்களைக் கூறவும்.ஏதேனும் யு–ட்யூப் வீடியோவினை வீடியோவாகவோ அல்லது ஆடியோ பைலாகவோ ஐ பாட் சாதனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் முதலில் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். பின்னர் ஐ பாடுக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.இதில் என்ன முக்கியமாகப் பார்க்க வேண்டும் என்றால் உங்கள் ஐ–பாட் என்ன பார்மட்டை இயக்க முடியும் என்பதனை அறிந்து அந்த பார்மட்டில் சம்பந்தப்பட்ட வீடியோ அல்லது ஆடியோ பைலை அமைக்க வேண்டும். இன்டர்நெட் சைட்டுகளில் கிடைக்கும் பல ஆன்லைன் யு–ட்யூப் டவுண்லோடர் புரோகிராம்கள் flv பார்மட்டில் மட்டுமே இவற்றை டவுண் லோட் செய்திடும் வசதியைக் கொண்டிருக்கின்றன. இந்த வெப்சைட்டுகளைத் தவிர்க்கவும்.உங்களுக்குத் தேவையான பார்மட்டில் இவற்றை டவுண்லோட் செய்திடும் வசதியினை ஒரு சில தளங்கள் தருகின்றன. அவற்றுள் மிகச் சிறந்த ஒன்றாக நான் கருதுவது http://vixy.net ஆகும்.இங்கு சென்று நீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பும் யு–ட்யூப் வீடியோவிற்கான யு.ஆர்.எல். முகவரியினை இதில் தர வேண்டும். கீழ்க்காணும் பார்மட் ஆப்ஷன்கள் உங்களுக்கு வழங்கப்படும்.

AVI for Windows (DivX + MP3)

MOV for Mac (MPEG4 + MP3)

MP4 for iPod/PSP (MPEG4 + AAC)

3GP for Mobile (MPEG4 + AAC)

MP3 (audio only)

உங்களுக்குத் தேவையான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் உடனே வீடியோ அல்லது ஆடியோ பைல் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்மட்டில் உருவாக்கப்படும். இது முற்றிலும் இலவசமாகத் தரப்படுகிறது.