Thursday, July 30, 2009

♥ ட்ரைவ் ஒன்றை மறைப்பது எப்படி? ♥


முக்கியமான தகவல்களை ஏனையோர் அணுகாமல் பாதுகாக்க விரும்புவோர்க்கு இது மிகவும் பயனுள்ள ஒரு குறிப்பு விண்டோஸ் இயங்கு தளத்தில் போல்டர்களை மறைத்து (Hide) வைக்கும் முறையை நீங்கள் அறிந்திருக்கலாம். போல்டர்களை மறைத்து வைப்பது போன்று கணினியிலுள்ள டரைவ்களையும் மறைத்து வைக்க முடியும். விண்டோஸில் இயங்கு தளம் மூலம் கணினியிலுள்ள எந்த ஒரு ட்ரைவையும் அடுத்த பயனர்களின் பார்வையிலிருந்து மறைத்து விடலாம். இதன் மூலம் உங்கள் அந்தரங்க தகவல்களுக்கு ஒரு பாதுகாப்புக கிடைக்கிறது. ஒரே நேரத்தில் எல்லா ட்ரைவ்களையுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரமோ மறைத்து வைக்கலாம். அதற்கு நீங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றத்தைச் செய்து விட்டால் போதுமானது.
முதலில் விண்டோஸில் அட்மினிஸ்ட்ரேட்டராக லொக்-ஓன் செய்து கொள்ளுங்கள். அடுத்து ரன் (Run) பொக்ஸில் regedit என டைப் செய்து ஓகே சொல்லுங்கள். திறக்கும் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவில் கீழே காட்டப்பட்டுள்ள இடத்தை அணுகுங்கள்.
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion \Policies\Explorer
இங்கு இறுதியாக Explorer ல் க்ளிக் செய்யுங்கள். அடுத்து விண்டோவின் வலப்புறம் ரைட் க்ளிக் செய்து புதிதாக NoDrives எனும் பெயரில் DWORD பெறுனமானத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். கணினியிலுள்ள ட்ரைவ் அனைத்தையும் மறைப்பதாயின் அதன் Value Data வாக 3FFFFFF எனும் பெறுமானத்தை வழங்குங்கள்.
அதேபோன்று குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரம் மறைப்பதாயின் அதாவது A, B, C, D, E, F, G, H என ஆங்கில் எழுத்துக்கள் மூலம் குறிக்கப்படும் ட்ரைவ்களை மறைக்க 2, 4, 8, 16, 32, 64, 128 எனும் ஒழுங்கில் வழங்குங்கள். உதாரணமாக F ட்ரைவை மறைத்து வைக்க வேண்டுமாயின் 32 எனும் இலக்கத்தை Value Data வாக வழங்க வேண்டும்.
அடுத்து ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவை மூடி விட்டு கணினியை மறுபடி இயக்க நீங்கள் மறைத்து வைத்த ட்ரைவை மை கம்பியூடர் விண்டோவில் பார்க்க முடியாது. மீண்டும் அதனைக் காண்பிக்க வேண்டுமானால் மேற் சொன்ன இதே வழியில் சென்று புதிதாக உருவாக்கிய DWORD பெறுமானத்தை அழித்து விட்டு கணினியை மறுபடி இயக்க வேண்டும்.http://tamilsoftwaredownload.blogspot.com/2009/07/blog-post_01.html

நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா? அறிவது எப்படி?

நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு / நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு, அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறீர்கள். குறைந்த பட்சம், அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா இல்லையா என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்குமே!
நீங்கள் அனுப்பிய மெயிலை உங்கள் நண்பர் படித்து விட்டாரா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள, spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது. செய்முறை விளக்கம்:
1). முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து, தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
2). இப்போது, www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள்.
அங்கு, உங்கள் முகவரி, உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள். Step 3 -ல் முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, "Click to Activate my Spypig" என்பதைச் சொடுக்குங்க. (அப்படி செய்தால், நீங்கள் ட்ராக் செய்கிறீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.)
3). இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது சுட்டியை வைத்து, வலது பொத்தானை சொடுக்கி, "Copy Image" (Firefox) & Copy(IE) சொடுக்கி, copy செய்யவும்.
இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து, அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி, உடனே மெயிலை அனுப்பி விடுங்கள்.
(கவுண்ட் டவுன் டைமர் ஓடும், அந்த ஒரு நிமிடத்திற்குள் மேலே கூறியதைச் செய்ய வேண்டும்.) அவ்வளவு தான்.நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன், எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும். செஞ்சு பாருங்க, சந்தேகம் என்றால் கேளுங்க.

Wednesday, July 29, 2009

நமது புகைப்படத்தை அசையும் படமாக மாற்ற

♥ நமது புகைப்படத்தை அசையும் படமாக மாற்ற ..♥

நமது புகைப்படங்களை வெளிநாட்டு சூழ்நிலையில் வெளியிட்டு ஏற்கனவே பார்த்தோம்.
மாறிவரும் காலத்திற்கு ஏற்ப தற்போது நமது புகைப்படத்தையே அசையும்
வகையில் வடிவமைத்துள்ளார்கள். அதன் முகவரி தளம் செல்ல இங்கு
கிளிக் செய்யவும். உங்களுக்கு அதன் தளம் ஓப்பன் ஆகும். அதில் உள்ள படங்களில் வீடியோ சிம்பல் போட்டுள்ள படத்தை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு வேறு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள்
மாற்றவிரும்பும் படத்தை அதில் பதிவேற்றவும். சில நிமிடங்கள் காத்திருங்கள். உங்கள் படமானது தயார் ஆகி உங்களுக்கு கிடைக்கும். அதனை நீங்கள் உங்கள் கணிணியில் வேண்டிய இடத்தில் சேமித்துக் கொள்ளலாம்.

உங்கள் கம்ப்யூட்டர் தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா?..


ரீஸ்டார்ட் ஆகும் கம்ப்யூட்டர்கம்பம் என்ற ஊரிலிருந்து ஒரு வாசகர் தன் கம்ப்யூட்டர் அடிக்கடி தானாக ரீஸ்டார்ட் ஆவதாகக் குறிப்பிட்டு எழுதி அவரே பல நிலைகளில் கம்ப்யூட்டரைச் சோதனையிட்டுப் பார்த்தும் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறி இருந்தார். வழக்கமாக நாம் எண்ணும் காரணங்களுடன் அவர் எழுதிய காரணங்களும் சரியாகவும் புதுமையாகவும் இருந்தன. இது போன்ற பிரச்சினை குறித்த கடிதங்கள் அதிகம் வருவதால் அந்த காரணங்கள் அனைத்தையும் வாசகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இங்கு பட்டியலிடப்படுகின்றன.1. உங்கள் கம்ப்யூட்டர், இயக்கத்தில் சூடு அடைகிறது. ஏர் கண்டிஷனர் குளிரில் இருந்தாலும் உள்ளே சூடு உருவாகிக் கொண்டு தான் இருக்கும். அந்த சூட்டின் நிலை 60 டிகிரி செல்சியஸைத் தொடுகையில் கம்ப்யூட்டரின் சிபியு தானாக ரீஸ்டார்ட் ஆகும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும். எதனால் சூடு ஏற்படுகிறது? கம்ப்யூட்டரில் உள்ள டிஜிட்டல் சாதனங்கள் அப்படிப்பட்டவையே. அவை இயங்கும் போது நிச்சயம் வெப்ப ஆவி உருவாகி வெளியே வருகிறது. அதனால் தான் ப்ராசசர் சிப் மேலாக ஒன்றும் கேபினட் உள்ளாக ஒன்றும் என மின்விசிறிகள் அமைக்கப்பட்டு அவை அந்த வெப்பத்தை வெளியேற்றுகின்றன.மேலும் இப்போதெல்லாம் இயக்கப்படும் புரோகிராம்கள் பெரிய அளவில் ப்ராசசரின் சக்தியை உறிஞ்சும் வகையில் உள்ளதால் சூடு அதிகம் உருவாகும் நிலை ஏற்படுகிறது. எடுத்துக் காட்டாக ஐ–ட்யூன்ஸ் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற வீடியோ ஆடியோ புரோகிராம்கள் அதிக சக்தியைப் பயன்படுத்துகின்றன. அதே போல் பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தினாலும் இந்த பிரச்சினை வரும். அடுத்ததாக அளவுக்கதிகமாக கம்ப்யூட்டர் கேபினுள் சேரும் தூசியும் சூடு வெளியாவதைத் தடுக்கும். சூட்டை வெளித் தள்ளும் மின்விசிறிகள் சரியான அளவில் இயங்குவதைத் தடுக்கும். இவற்றை அவ்வப்போது நீக்க வேண்டும். கேபினைத் திறந்து தூசியை வெளியே எடுக்கும் சாதனம் கொண்டு கேபினைச் சுத்தம் செய்திட வேண்டும்.சூடு அதிகமாவதெல்லாம் என் கம்ப்யூட்டரில் இல்லை; இருந்தாலும் ரீ ஸ்டார்ட் ஆகிறது என்றால் அடுத்தபடியாக உங்கள் கம்ப்யூட்டரின் மெமரியைச் சோதனை செய்திட வேண்டும். உங்கள் ப்ராசசர் ராம் மெமரியின் சேதமடைந்த இடத்தில் உள்ள டேட்டாவினைப் பெற முயன்று தோற்றால் கம்ப்யூட்டர் உடனே ரீஸ்டார்ட் ஆகத் தொடங்கும். இதனைக் கண்டறிய உங்கள் ராம் மெமரி ஸ்டிக்குகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தால் எந்த ஸ்டிக்கில் பிரச்சினை உள்ளது என்று தெரியவரும். அதனை மட்டும் மாற்றலாம்.இதுவும் சரியாக உள்ளது என்று தெரிய வந்தால் கம்ப்யூட்டரில் உள்ள செட்டிங் ஒன்றை மாற்றினால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சிஸ்டம் எர்ரர் ஏதேனும் ஏற்பட்டால் உடனே ரீஸ்டார்ட் செய்யும்படி அமைக்கப்பட்டிருக்கும். அந்த ஆப்ஷனை ஆப் செய்துவிட்டால் இந்த பிரச்சினை தீரும். இதனை மேற்கொள்ள Start, Control Panel என்று சென்று Performance and Maintenance என உள்ளதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள System லிங்க்கில் கிளிக் செய்து பின் Advanced டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள Startup and Recovery செக்ஷனில் Settings பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் "Automatically Restart," என்று தரப்பட்டு அதன் அருகே தரப்பட்டுள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தின் மீது கிளிக் செய்து அதனை எடுத்துவிடவும். இது System Failure பிரிவில் இருக்கும். பின் ஓகே கிளிக் செய்து அனைத்து விண்டோக்களை மூடவும். இனி உங்கள் கம்ப்யூட் டர் எர்ரர் ஏற்படுவதனால் ரீஸ்டார்ட் ஆகாது.இந்த செட்டிங்கை விண்டோ விஸ்டாவில் எப்படி செயல்படுத்துவது என்று பார்க்கலாம். Start>Control Panel சென்று "System" என்பதில் கிளிக் செய்திடவும். (இதனைப் பெற நீங்கள் கிளாசிக் வியூவில் இருக்க வேண்டும்) இந்த விண்டோவில் "Advanced System Settings" என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில் "Startup and Recovery" என்பதன் கீழ் பார்க்கவும். இங்கு "Settings" பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் "Automatically Restart" என்பதன் கீழாக என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.அநேகமாக மேலே சொன்னவற்றில் இந்த ரீஸ்டார்ட் பிரச்சினை தீர்ந்துவிடும். இருப்பினும் நன்மையும் தீமையும் பிறர் தர வரா என்ற பழமொழிக்கு ஏற்ப நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் அண்மையில் என்ன செய்தீர்கள் என்று பார்க்கவும். ஏதேனும் ஒரு புதிய சாப்ட்வேர் தொகுப்பு ஒன்றை நிறுவியிருக்கலாம். அல்லது ஹார்ட்வேர் சாதனம் ஒன்றை இணைத்திருக்கலாம். அப்படியானால், அதனை நீக்கிப் பார்க்கவும். பிரச்சினை தொடர்கிறதா என்று கவனிக்கவும். மீண்டும் பிரச்சினை இருந்தால் இணைத்த ஹார்ட்வேர் சாதனத்திற்கான புதிய டிரைவர் தொகுப்பினை அதனைத் தயாரித்து வழங்கிய நிறுவனத்தின் தளத்திலிருந்து இறக்கிப் பதியவும்.இந்த ரீஸ்டார்ட் பிரச்சினை ஏதேனும் வைரஸ் அல்லது ஸ்பைவேர் தொகுப்பினாலும் ஏற்பட 100 சதவிகித வாய்ப்புண்டு. எனவே நீங்களாகக் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து அண்மையில் அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை ஸ்பைவேர் கண்டறியும் தொகுப்பினையும் இயக்கிப் பார்க்கவும். அடுத்ததாக கண்ட்ரோல் பேனல் சென்று அதில் உள்ள ஆட்/ரிமூவ் புரோகிராம் பிரிவிற்கான ஐகானில் கிளிக் செய்து உங்களுக்குத் தற்சமயம் தேவையில்லாத புரோகிராம்களை நீக்கவும். தேவையற்ற புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்வதும் ரீஸ்டார்ட் பிரச்சினைக்கு ஒரு மருந்தே.உங்களுக்குப் பிடித்தமான வீடியோவினைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இசையைக் கேட்டுக் கொண்டிருக்கையில், நண்பருடன் சேட்டிங் செய்து கொண்டிருக்கையில், பிரியமான கடிதத்தினைத் தயார் செய்து கொண்டிருக்கையில் கம்ப்யூட்டர் தானாக ரீஸ்டார்ட் செய்தால் நிச்சயம் என்ன கொடுமைடா என்று எண்ணத் தோன்றும். எனவே மேலே குறிப்பிட்ட வழிகளை ஒவ்வொன்றாகச் செயல்படுத்திப் பார்த்து பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுவே புத்திசாலித்தனம்

Tuesday, July 28, 2009

♥ எந்த வகை கோப்பானாலும் வேறு பார்மெட்டுக்கு மற்ற....! ♥

நீங்கள் வைத்திருக்கும் எந்த வகை கோப்பானாலும் இந்த தளத்தில் தரவேற்றினால் போதும் உங்களுக்க் எந்த பார்மெட்டில் வேண்டுமானலும் பெற்றுக் கொள்ளலாம்.சுட்டி http://www.convertfiles.com/இது மட்டுமில்லை யூட்யுபில் இருந்து கோப்புகளின் URL மட்டும் காப்பி செய்து பேஸ்ட் செய்தால் போதும் உங்களுக்கு தேவையான கோப்புகளாக தரவிறக்கி கொள்ளலாம்.மற்ற தளங்களில் தரவேற்றினால் கோப்புகள் வெறும் 24 மணி நேரங்கள் மட்டும் வைத்து இருப்பர் இந்த தளத்தில் 7 நாட்கள் வைத்திருந்து நமக்கு கொடுக்கின்றனர்.இந்த தளம் மூலம் எந்தெந்த வகை கோப்புகளை தரவேற்றி நமக்கு தேவையான கோப்புகளாக பெற முடியும் என்று ஆங்கிலத்தில் பார்ப்போம்.
ARCHIVERAR to TAR, ZIP, TGZ, TAR.GZTAR to RAR, ZIP, TGZ, TAR.GZTGZ to TAR,
RAR, ZIPTAR.GZ to TAR, RAR, ZIPZIP to TAR, RAR, TGZ, TAR.GZDOCUMENTDOCX to DOC, ODT, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIPDOC to ODT, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIPODT to DOC, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIPRTF to ODT, DOC, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIPSXW to ODT, RTF, DOC, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIPTXT to ODT, RTF, SWX, DOC, HTML, XHTML, PDF, PDB, ZIPODS to xls, CSV, RTF, PDF, HTML, ZIPXLS to ODS, CSV, PDF, HTML, ZIPXLSX to XLS, ODS, CSV, PDF, HTML, ZIPPRESENTATIONODP to PPT, PDF, SWFPPT to ODP, PDF, SWFIMAGEBMP to GIF, JPG, PNG, TIF, ZIP, PDFGIF to BMP, JPG, PNG, TIF, PDFJPG to GIF, BMP, PNG, TIF, PDFPNG to GIF, JPG, BMP, TIF, PDFTIF to GIF, JPG, PNG, BMP, ZIP, PDFAUDIOAAC to WAV, MP3, OGG, M4A, FLAC, AU, WMA, AMRAMR to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AU, M4AAU to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AMR, M4AFLAC to WAV, MP3, OGG, M4A, AAC, AU, WMA, AMRM4A to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AU, AMRMP3 to WAV, OGG, AAC, M4A, FLAC, AU, WMA, AMROGG to WAV, MP3, AAC, M4A, FLAC, AU, WMA, AMRWAV to MP3, OGG, AAC, M4A, FLAC, AU, WMA, AMRWMA to WAV, MP3, OGG, M4A, AAC, FLAC, AU, AMRMKA to WAV, MP3, OGG, M4A, AAC, FLAC, AU, AMR, WMAVIDEO3GP to AVI, MOV, WMV, M4VASF to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MOV, AVI, M4VAVI to 3GP, FLV, MP4, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4VFLV to 3GP, AVI, MP4, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4VMKV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MOV, ASF, M4VMOV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MKV, ASF, M4VM4V to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, WMVMP4 to FLV, 3GP, AVI, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4VMPEG to AVI, 3GP, MP4, FLV, VOB, WMV, MOV, MKV, ASF, M4VMPG to AVI, 3GP, MP4, FLV, VOB, WMV, MOV, MKV, ASF, M4VVOB to 3GP, FLV, MP4, MPEG, AVI, WMV, MOV, MKV, ASF, M4VWMV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4VOTHEREPS to GIF, JPG, PNGPSD to GIF, JPG, PNG

உங்களுக்கு பிடித்த MP3 பாடல்களை கேட்க முடியவில்லையா?


இலவச சிடி ரிப்பர்



கம்ப்யூட்டரில் மட்டுமின்றி தனியாகவும் வைத்து இயக்கும் எம்பி3 பிளேயர்கள் தற்சமயம் அதிக அளவில் விற்பனையாகிப் பயன்படுத் தப்பட்டு வருகின்றன. ஆனால் நமக்குப் பிடித்த அனைத்து பாடல்களையும் நாம் இந்த பிளேயர்களில் கேட்க முடிவதில் லை. ஏனென்றால் அவை எம்பி3 பார்மட்டில் இல்லை என்பதே காரணமாகும். சிடியில் பதிந்து கிடைக்கும் இந்த பாடல்கள் நம் மனதை மயக்கு கின்றன. ஆனால் பிளேயருக்கு மடங்க மறுக் கின்றன. என்ன செய்யலாம்? எப்படி சிடியில் உள்ள பாடல் களை எம்பி3 பார்மட்டில் கொண்டு வருவது என்று பார்க்கையில் இணையத்தில் உள்ள ஒரு இலவச புரோகிராம் கண்களில் பட்டது. அது சிடி ரிப்பர் (CD Ripper) என்னும் புரோகிராம் ஆகும். இதனை வைத்துக் கொண்டு எப்படி இந்த பார்மட் மாற்றத்தினைக் கொண்டு வரலாம் என்று பார்க்கலாம்.

முதலில் http://www.download.com/FreeCDRipper/30002140_410396883.html என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து சிஸ்டத்தில் இன்ஸ்டால் செய்திடவும்.பின் இந்த புரோகிராமினை இயக்குங்கள். அதன்பின் முதலில் எந்த டிரைவில் இந்த புரோகிராம் உங்கள் மியூசிக் பைல்களை ஸ்டோர் செய்திட வேண்டும் என்பதனை முடிவு செய்து கொள்ளவும். இதற்கு மேலே இருக்கும் Options என்ற டேப்பில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Save and Filename என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு இருக்கும் போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். அல்லது உருவாக்கி அதனை உங்கள் தேர்வாக செலக்ட் செய்திடுங்கள். இதனை ஒரு முறை செய்தால் போதும். அதுவும் சிடி ரிப்பர் புரோகிராமினை இன்ஸ்டால் செய்தவுடன் செய்தால் போதும். இனி கம்ப்யூட்டரில் உள்ள சிடி டிரைவில் எந்த சிடியிலிருந்து பாடல்களைப் பெற்று எம்பி3 பார்மட்டிற்கு மாற்ற வேண்டுமோ அந்த சிடியினைச் செருகவும். சிடியினைச் செருகியவுடன், மேலே தரப்பட்டிருக்கும் டிவைஸ் மெனுவிலிருந்து உங்கள் சிடி டிரைவைத் தேர்ந்தெடுக்கவும்.பின் வலது புறம் உள்ள Output Format பாக்ஸில் MP3 என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் சிடி ரிப்பர் விண்டோவின் கீழாக உள்ள “டி” என்பதில் கிளிக் செய்திடவும். இதனால் பாடல்களின் ஆர்ட்டிஸ்ட் பெயர் முதலாக அனைத்து தகவல்களும் பதியப்படும். அடுத்து Extract என்பதில் கிளிக் செய்தால் அனைத்து பாடல்களும் எம்பி3 பார்மட்டில் மாற்றப்பட்டு கிடைக்கும். பின் இந்த எம்பி3 பாடல்களை உங்கள் மீடியா பிளேயருக்கு மாற்றி செல்லுமிட மெல்லாம் இசைக்க வைத்து ரசிக்கலாம்.

யு–ட்யூப் வீடியோகளை ஐ பாட் சாதனத்திற்கு மாற்ற...!


யு–ட்யூப் வீடியோ காட்சிகளை என் ஐ பாட் சாதனத்திற்கு டவுண்லோட் செய்து காண விரும்புகிறேன். ஆனால் பார்மட் பிரச்சினை ஏற்படுகிறது. எம்பி 4 பார்மட்டில் வேண்டும். இதற்குத் தீர்வு தரும் புரோகிராம்களைக் கூறவும்.ஏதேனும் யு–ட்யூப் வீடியோவினை வீடியோவாகவோ அல்லது ஆடியோ பைலாகவோ ஐ பாட் சாதனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் முதலில் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். பின்னர் ஐ பாடுக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.இதில் என்ன முக்கியமாகப் பார்க்க வேண்டும் என்றால் உங்கள் ஐ–பாட் என்ன பார்மட்டை இயக்க முடியும் என்பதனை அறிந்து அந்த பார்மட்டில் சம்பந்தப்பட்ட வீடியோ அல்லது ஆடியோ பைலை அமைக்க வேண்டும். இன்டர்நெட் சைட்டுகளில் கிடைக்கும் பல ஆன்லைன் யு–ட்யூப் டவுண்லோடர் புரோகிராம்கள் flv பார்மட்டில் மட்டுமே இவற்றை டவுண் லோட் செய்திடும் வசதியைக் கொண்டிருக்கின்றன. இந்த வெப்சைட்டுகளைத் தவிர்க்கவும்.உங்களுக்குத் தேவையான பார்மட்டில் இவற்றை டவுண்லோட் செய்திடும் வசதியினை ஒரு சில தளங்கள் தருகின்றன. அவற்றுள் மிகச் சிறந்த ஒன்றாக நான் கருதுவது http://vixy.net ஆகும்.இங்கு சென்று நீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பும் யு–ட்யூப் வீடியோவிற்கான யு.ஆர்.எல். முகவரியினை இதில் தர வேண்டும். கீழ்க்காணும் பார்மட் ஆப்ஷன்கள் உங்களுக்கு வழங்கப்படும்.

AVI for Windows (DivX + MP3)

MOV for Mac (MPEG4 + MP3)

MP4 for iPod/PSP (MPEG4 + AAC)

3GP for Mobile (MPEG4 + AAC)

MP3 (audio only)

உங்களுக்குத் தேவையான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் உடனே வீடியோ அல்லது ஆடியோ பைல் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்மட்டில் உருவாக்கப்படும். இது முற்றிலும் இலவசமாகத் தரப்படுகிறது.