சூலுக்குள் சுருண்டுழன்று....
பிறப்பென்னும் பிணி ஏந்தி..
தண்டனையாய்
வையகச்சிறைதனிலே!
சிரிக்கத் தெரிந்த கைதிகளாய்
ஆயுளை அர்ப்பணித்து...
தீற்பெழுதிய நாள்முழுதாய்
அறிந்திடாமலே ஏதும் புறிந்திடாமலே
மாயச்சிறையில் சிக்க வைத்தாய் - இறைவா..!
சூட்சுமம் சொல்வாரில்லை
புதிருக்கு விடையும் இல்லை
பொன்னையும் மண்ணையும்
காட்டி மயங்கவைத்தாய்.
பாசத்தையும் நேசத்தையும் வீசி
வலை விரித்தாய்...- இறைவா!
ஜென்ம ஜென்மமாய் பரிட்சை வைத்தாய்..
எழுதி எழுதி தோற்க வைத்தாய்...
விடை தெரியாது தவிக்க வைத்தாய்....
தடை சொல்லாது சிரித்து நின்றாய்.!
போகத்தில் சிலர், மோகத்தில் சிலர்
கொள்வதில் சிலர் கொல்வதில் சிலர்
காப்பதில் சிலர் தோற்பதில் சிலர்
உனது சல்லடை தீர்ப்பில் சிக்கி
தங்கவிடுவதே உன் லீலை !
காலமும் நேரமும் மறந்து,
யுகம் l யுகங்களாய் கரைந்தும்
சலிக்காத உன் ஆடு புலியாட்டம்...
எங்களுக்கு அலுத்து விட்டது.!!
மன்னித்துவிடு இல்லையேல்
மறந்துவிடு மொத்தமாய்
உலக பந்தம் அனைத்தையும்
இழுத்து மூடிவிடு..இறைவா!
புதிதாய் ஓருலகு படைத்துவிடு.
அங்கு சந்தோஷமாய்
அனைவரையும் வாழவிடு
பாவ புண்ணியத்தை கழற்றிவிடு
விதி எனும் பெயரை அழித்துவிடு
நல்ல பெயர் நீயும் எடுத்துவிடு..
ஜெயஸ்ரீ ஷங்கர்.

No comments:
Post a Comment