Monday, March 1, 2010

ரேகைகளும் ரெக்கைகளும்

மடிக்கணிணிகள் தான் இப்போதெல்லாம் வேலமெனக்கெட்டு விரல்ரேகை படிப்பானோடு கூட (finger print reader) வருகின்றனவென நினைத்தால் இப்போது மணிப்பர்ஸ்சுகளும் கூட பிங்கர் பிரிண்ட் ரீடரோடு கூட வருகின்றனவாம்.iwallet என ஒரு நிறுவனம் இந்த மாதிரியான பணப்பைகளை தயாரிக்கின்றன. விலை $299-திலிருந்து ஆரம்பிக்கின்றது. உங்கள் விரல்ரேகைகள் பட்டால் மட்டும் தான் அந்த பர்ஸ் திறக்கும். வீடு திரும்பியவுடன் வீட்டம்மாவோ அல்லது வளர்ந்த பையனோ யாரும் எளிதில் துழாவி பத்தோ நூறோ நவிட்டிவிட முடியாது. ஆனால் ஒரு எச்சரிக்கை : தூங்கும் போது கையை ஒளித்து வைத்துக் கொண்டு தூங்கவும்.

கையில் எதாவது லோசனோ அல்லது கிரீமோ போடும் அம்மணிகள் மடிக்கணிணியினுள் நுழையும் போது விரல்ரேகை படிப்பானோடு போராடுவதை பார்த்திருக்கின்றேன். அப்புறமாக கையை கழுவிவிட்டு வந்தால் தான் அதனால் ஒழுங்காக அவர்கள் விரல்ரேகைகளை படிக்க முடியும். இந்த சிக்கல்களை தடுக்க இப்போது finger vein reader என ஒன்றை கொண்டு வந்திருக்கின்றார்கள். அது உங்கள் ரேகைகளை பார்ப்பதில்லையாம். உங்கள் விரலினுள்ளே ஊடுருவிச்சென்று அங்கிருக்கும் நரம்பமைப்புகளை கொண்டு உங்களை அடையாளம் காணும். காய்ந்த சருமக்காரர்கள் இனி ஒன்றுக்கு இரண்டு லேயர் ஜான்சன்ஸ் கிரீம் போட்டுக்கொள்ளலாம்.

இப்படி எல்லா துறைகளிலும் ஒன்றைவிட்டால் இன்னொன்று என படி ஏறிக்கொண்டே தான் இருக்கின்றோம். Reinventing the wheel என்ற சொற்றொடர் நம்மிடையே பிரபலம். Nobody wants to reinvent the wheel. ஆனால் ஒருவர் மின்விசிறியை reinvent செய்திருக்கின்றார். இறக்கைகள் இல்லாத விசிறிக்களும் உண்டோ? யெஸ் இவர் இறக்கைகள் இல்லாத மின்விசிறியை கண்டு பிடித்திருக்கின்றார். யூடியூப் வீடியோவில் பார்த்தேன். Dyson's Bladeless Fan Air Multiplier அட்டகாசமாக இருந்தது. பலமுறை விளக்கியும் எப்படி காற்று வருகின்றதுவென புரியவில்லை. அது தான் டெக்னிக். விலை $299. அப்படியே ஹெலிக்காப்டரில் மிச்சமிருக்கும் ரெக்கைகளையும் களைய வழி சொன்னால் நன்னாய் இருக்கும்.



--
ம. தெ. ஆறுமுகம்
காயாவது கனியாவதும்;
கல்ப் பொடிபட மணலாவதும்;
பேயா மழை பெய்வதும்;
பிழைத்தோரதில் உயிர் வாழ்வதும்;
உயிர்ப் போவதும் அது வருவதும்
உலக இயல்பே!...
http://shricaps.blogspot.com

இப்படியும் ஆயுதங்கள்

கேள்விப்படும் கான்ஸ்பிரசி தியரிகளில் கொஞ்சமாவது உண்மை இருக்கின்றதோ இல்லையோ ஆனால் அது கொண்டுவரும் தகவல்கள் நம்மை மயிர்கூச்செறிய செய்பனவாக உள்ளன. இப்படித்தான் ஹெய்தி பூகம்பத்தை ஒட்டி உலாவந்திருக்கும் இந்த மிகப்பெரிய கான்ஸ்பிரசி தியரியும். நிலநடுக்கங்களை மனிதன் செயற்கையாக உருவாக்க முடியுமா? அவற்றை எதிரிநாடுகளுக்கு எதிராக, அல்லது ஏதோ ஒரு லாபத்துக்காக இன்னொரு நாடு மீது ஏவிவிட முடியுமா என்றால், ஒருசாரி புள்ளிகளும், விஞ்ஞானிகளும் இது சாத்தியமே என்கின்றார்கள்.

ஹார்ப் என்று அமெரிக்காவில் அறியப்படும் இந்த உயர்தொழில் நுட்பம் சீனா,
ரஷ்யா உட்பட பிறநாடுகளிலும் உள்ளதாம். மிகப்பெரிய ஆண்டனாக்கள், டவர்களோடு கூடிய இந்த பெரிய செட்அப் மூலம் வான்வெளியில், வாயு மண்டலத்திற்கும் மேலிருக்கும் அயானோஸ்பியர் பகுதியிலுள்ள அயான்களை புகையச்செய்து வாயுவெளியில் துளைகளை உண்டாக்கி அதன் மூலம் பூமியில் நிலநடுக்கங்களை உண்டு பண்ண முடியும் என்கின்றார்கள். ஒலி அலைகள் நம் காது eardrum-ல் அதிர்வுகளாக மாற்றப்படுவதால், அதாவது மெக்கானிக்கல் ஆற்றலாக மாற்றப்படுவதால் தானே நம்மால் சத்தங்களை கேட்கமுடிகின்றது. பள்ளியில் அப்படித்தான் படித்ததாக நியாபகம். கோபால் சில பாட்டுக்களை உச்ச சத்தத்தில் காரில் ஓட விடும் போது காரே அதிர்வதை உணர்ந்திருக்கின்றேன்.
இது போல சில நம் புலங்களுக்கெட்டா மாய அலைகளை உருவாக்கி அதன் மூலம் எதிரிநாடுகளில் பூமிஅதிர்ச்சியை வரவைப்பதிலிருந்து, காலநிலைகளை தம் கட்டுக்குள் கொண்டுவருவது, அல்லது அதால கோர தட்பவெப்பநிலைகளை, ஹரிகேன், புயல், வெள்ளம் போன்றவற்றை எதிரி நாட்டில் உருவாக்குவது போன்ற செயல்களையும் செய்ய முடியுமாம். பொதுவாக பார்க்க அது ஒரு இயற்கையின் சீற்றம் போல இருந்தாலும் அது உண்மையில் மனிதனின் கட்டுபாட்டால் இயக்க வைத்ததாக இருக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாக இந்த சர்ச்சைகள் கூறுகின்றன. அது மட்டுமல்லாமல் இந்த உருவாக்கப்பட்ட அரோரா ELF காந்த அலைகளால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருக்கும் மக்களின் மனநிலையைக் கூட தங்கள் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்கின்றார்கள். என்னவென்று சொல்வது, போகின்ற போக்கை. ஏற்கனவே ஜார்ஜியாவில் நடந்த பூமிஅதிர்ச்சிக்கு ரஷ்யாதான் காரணமென அதன் தலைவர்கள் சந்தேகம் தெரிவித்திருந்தார்கள். இனி நடக்க இருக்கும் இயற்கையின் பேரழிவுகளுக்கு ஒரேயடியாக கடவுளையோ, பூமிமாதாவையோ குறை சொல்லமுடியாது போலிருக்கின்றது. இந்த பாழாப்போன மனிதன் தான் பின்னால் இருப்பான் போலிருக்கின்றது. இது குறித்ததான ஒரு முழு நீள விவரணப்படம் யூடியூபில். ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டும்.
http://www.youtube.com/watch?v=Y-VMfzO94M0

அதெல்லாம் இருக்கட்டும், இப்பொதைக்கு நாங்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக,
முழுநீள தமிழ் சினிமா படங்களை இலவசமாய் ஆன்லைனில் பார்க்க ஏதாவது வழி இருக்கின்றதா என கேட்பவர்களுக்கு கீழ்க்கண்ட சுட்டிகள் உதவக்கூடும்.

http://broadband.bigflix.com/home/Movie/LANGUAGE/Tamil

http://www.rajshritamil.com/Listing/Movies/Free-Tamil-Movies-New-Classic-Blockbuster-Films