Monday, February 14, 2011

என்ன பயன்?


ஈபுக் ரீடர் ஒன்று வாங்குவதிலேயே குறி. அமேசானின் கிண்டில் (Kindle),
பார்ன்ஸ் அண்ட் நோபிள்சின் நூக் (Nook) மற்றும் கோபோ,பாண்
டிஜிட்டல்,வெலோசிட்டி, சோனி ஈரீடர் அப்படி இப்படியென நூறு டாலரிலிருந்தே
தெரிவுகள் இருக்கின்றன. எது வாங்கினாலும் தமிழ் மென்புத்தகங்களை
இப்போதைக்கு epub வடிவில் படிக்க முடியாது. அந்த பார்மேட்டில் அவை
கிடைக்கின்றதில்லை. தடவி பக்கங்களை புரட்டும் எக்ஸ்பீரியன்சைத் தவிர
வேறெந்த விசேசமும் அந்த பார்மேட்டில் சாமானியர்களுக்கு
தெரிவதில்லை.ஆங்கில pdf-களை எளிதாக epub-க்கு மாற்ற calibre உதவினாலும்
தமிழ் எழுத்துருக்களை அது புரிந்துகொள்ள இன்னும் கொஞ்ச காலம் ஆகலாம்.
பெரும்பாலும் எல்லா ஈபுக் ரீடர்களும் (Ereader) தமிழ் pdf-களை எந்தவித
தொல்லையும் இன்றி படிக்க உதவுகின்றன. கிண்டில், ஐபேட், நூக் தமிழர்களும்
இன்ன பிற அண்ட்ராய்ட் தமிழர்களும் கொஞ்ச நாளைக்கு pdf-பிலேயே காலத்தை
ஓட்ட வேண்டும்.

சங்கப்பலகை என்றொரு அட்டகாசமான சேவை.ஏற்கனவே கேள்விப்
பட்டிருப்பீர்கள்.தமிழ் வாசிப்பாளர்களுக்கு நல்ல பயன்பாடு. குறிப்பாக
உலகமெங்கும் சிதறிக்கிடக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்
மாதிரி. ஆயிரக்கணக்கான உங்கள் விருப்பப் புத்தகங்களை கணிணியில்
படிக்கலாம். பிடித்தவர்களின் புத்தகங்களை சகாயமான விலையில் வாங்கி
உடனடியாக படிக்கத் தொடங்கிவிடலாம். இப்போதைக்கு கணிணி மூலமாக மட்டுமே
படிக்க முடிகின்றது. ஐபேடுக்கும் அண்ட்ராயிடுக்கும் எம்.ஏ.பார்த்தசாரதி
அவர்கள் ஒரு வழி கொண்டுவந்தால் இன்னும் நன்றாயிருக்கும்.Sangapalagai
Reader ( SP Reader) எனும் மென்பொருளை இறக்கம் செய்து நிறுவி அவர்கள்
கொடுக்கும் இலவச மாதிரி புத்தகங்களை வாசித்துப் பாருங்கள். நீங்களே
உங்களுக்கு பொருந்துமாவென தீர்மானிக்கலாம். மேலே ஈபுக் ரீடர்களைப் பற்றி
பேசியதால் இதையும் சொல்ல வேண்டி வந்தது.

உள்ளங்கையில் உலகம் எனச் சொல்லி கையில் செல்போனைக் கொடுத்து ஏமாற்றி
இருக்கின்றார்கள். தெருவில் கலகம் வந்ததும் எல்லாம் செத்துப் போகின்றது.
ஆளும்வர்க்கத்தின் அதிகாரம் அப்படி சார். ஈரான், டுனீசியா, எகிப்து
வரிசையில் கில்லர் ஸ்விட்ச் கேட்கும் அங்கிள் சாமும் இதில் சேரும்.
தொழில்நுட்ப மேம்பாடுகளெல்லாம் மெல்லிய இழை போன்றது, நிஜத்தில்
தேவைப்படும் போது அற்றுப்போகின்றது. வருங்கால சர்வாதிகாரிகளுக்கு இது
ரொம்பவே வசதி.எதற்கும் பரணில் பேக்கப்புக்காக எவரெடி பேட்டரிகளும்
ரேடியோவும் வைத்திருப்பது நல்லது.


தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கொன்றாடும் செய்தியை கூறி
'இந்தியா வல்லரசாகப்போகிறது. உலக அரங்கில் முதலிடம் பெறப்போகிறது...'
என்று தினமும் வாய் கிழியப் பேசுகிறோம். ஆனால், ஒரு சுண்டைக்காய் நாடு
செய்யும் அட்டூழியத்தைக்கூட தட்டிக்கேட்டு, தடுத்து நிறுத்த முடியவில்லை.
இந்த லட்சணத்தில் சீனாவை விஞ்சுவோம், அமெரிக்காவைத் தாண்டிச் செல்வோம்
என்று சொல்வதெல்லாம் எத்தனை வெட்கக்கேடு. நித்தமும் அப்பாவிகளை அந்நிய
நாட்டுக்குப் பலி கொடுத்து, வல்லரசாக மாறி என்ன பயன்?" எனக் கேட்டு
டி.ஜெய்சிங் விகடனில் எழுதியிருந்தது நான் கேட்க நினைத்ததை அப்படியே
சொன்னது போல இருந்தது.

No comments: